திருப்புகழ் 865 கெண்டை நேரொத்தவிழி  (கும்பகோணம்)
Thiruppugazh 865 keNdainEroththavizhi  (kumbakONam)
Thiruppugazh - 865 keNdainEroththavizhi - kumbakONamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
     தந்தனா தத்ததன ...... தனதான

......... பாடல் .........

கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
     கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங்

கிம்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
     கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும்

மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
     வண்டனா கப்புவியி ...... லுழலாமல்

வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
     மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே

அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
     ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா

அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
     னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக்

கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
     கொந்தியா டத்தலையை ...... யரிவோனே

கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
     கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோகக் கலவை கெந்த
வாசப் புழுகு மண(ம்) நாறும்
... கெண்டை மீனுக்கு ஒப்பான
கண்களை உடைய (விலை)மாதர்கள் மீதுள்ள ஆசைக் கலப்பு மிக்க
நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசும் (மார்பகம்),

கிம்புரி ஈசக் களப(ம்) கொங்கை யானைச் சிறிது கிஞ்சு
காணப் பெருகி அடியேனும் மண்டி மோசக் கலவி கொண்டு
காமித்து உருகி
... தந்தத்தில் பூண் அணிந்தது போல விளங்குவதும்,
பச்சைக் கற்பூரக் கலவை அணிந்ததுமான மார்பாகிய யானையை
சிறிதளவு கண்டதும் ஆசை பெரியதாகி, அதனால் அடியேனும்
விரைந்து சென்று வஞ்சகத்துக்கு இடமான புணர்ச்சி இன்பம்
கொண்டு காம உணர்ச்சியில் மனம் உருகி,

வண்டன் ஆகப் புவியில் உழலாமல் வந்து ஞானப் பொருளில்
ஒன்று போதித்து உனது மஞ்சு தாளைத் தினமும்
அருள்வாயே
... தீயோனாக பூமியில் நான் அலைச்சல் அடையாமல்,
(நீ) வந்து ஞானப் பொருளில் ஒன்றை உபதேசித்து, உனது அழகிய
திருவடியை நாள் தோறும் எனக்குத் தந்தருளுக.

அண்டர் வாழப் பிரபை சண்ட மேருக் கிரி இளைந்து வீழப்
பொருத கதிர்வேலா
... தேவர்கள் வாழும்படி ஒளி வீசும் வலியதான
மேரு மலை கலக்குண்டு விழும்படிப் போர் செய்த ஒளி வேலனே,

அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறித் தவசில் அன்பு
உளாரைச் சிறையி(ட்)ட அசுரோரைக் கொண்டு போய்
வைத்த கழு நெஞ்சில் ஏறக் கழுகு கொந்தி ஆடத் தலையை
அரிவோனே
... ஐந்து பொறிகளாலும் சிவபெருமானை மனதில் ஊற
வைத்து தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையில் வைத்த
அசுரர்களைக் கொண்டு போய், கூரிய சூலம் நெஞ்சில் ஏறப் பாயவும்,
கழுகுகள் கொத்தி விளையாடவும், தலையை அரிந்தவனே,

கொண்டல் சூழ் அக்கழனி சங்கு உலாவிப் பரவு
கும்பகோணத்தில் உறை பெருமாளே.
... மேகங்கள் சூழ்ந்த
வயல்களில் சங்குகள் உலாவிப் பரந்திருக்கும் கும்பகோணத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1103  pg 2.1104  pg 2.1105  pg 2.1106 
 WIKI_urai Song number: 869 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 865 - keNdai nEroththavizhi (kumbakONam)

keNdainE roththavizhi mangaimO kakkalavai
     kenthavA sappuzhuku ...... maNanARum

kimpuree sakkaLapa kongaiyA naicchiRithu
     kinjukA Napperuki ...... yadiyEnum

maNdimO sakkalavi koNdukA miththuruki
     vaNdanA kappuviyi ...... luzhalAmal

vanthunjA napporuLi lonRupO thiththunathu
     manjuthA Laiththinamu ...... maruLvAyE

aNdarvA zhappirapai saNdamE rukkiriyi
     Lainthuvee zhapporutha ...... kathirvElA

anjuvA yiRparanai nenjilU Riththavasi
     nanpuLA raicchiRaiyi ...... dasurOraik

koNdupOy vaiththakazhu nenjilE Rakkazhuku
     konthiyA daththalaiyai ...... yarivOnE

koNdalcU zhakkazhani sangulA vipparavu
     kumpakO NaththiluRai ...... perumALE.

......... Meaning .........

keNdai nEr oththa vizhi mangai mOkak kalavai kentha vAsap puzhuku maNa(m) nARum: Their bosom has an aroma of fragrant musk mingled with the passion for those whores who have beautiful eyes that look like keNdai fish;

kimpuri eesak kaLapa(m) kongai yAnaic chiRithu kinju kANap peruki adiyEnum maNdi mOsak kalavi koNdu kAmiththu uruki: looking like an ivory tusk fitted with an ornament, their bosom has been smeared with a paste of camphor; at the mere sight of those elephant-like breasts, my desire increases impelling me towards them in a hurry; after enjoying the bliss of treacherous intercourse, my mind simply melts in passionate exhilaration;

vaNdan Akap puviyil uzhalAmal vanthu njAnap poruLil onRu pOthiththu unathu manju thALaith thinamum aruLvAyE: without letting me roam about in this world as a wicked man, You must come to my aid and preach one of the Principles of Knowledge; for that, kindly grant me Your hallowed feet every day, Oh Lord!

aNdar vAzhap pirapai saNda mEruk kiri iLainthu veezhap porutha kathirvElA: The mighty Mount MEru, which radiates for the protection of the celestials, was agitated and felled when You fought with Your bright spear, Oh Lord!

anju vAyil paranai nenjil URith thavasil anpu uLArais siRaiyi(d)da asurOraik koNdu pOy vaiththa kazhu nenjil ERak kazhuku konthi Adath thalaiyai arivOnE: Through their five sensory organs the celestials immerse Lord SivA in their mind engaging in deep penance with love; those celestials were thrown into prison by the demons whom You attacked wielding the sharp trident into their chest, leaving their bodies to be plucked and toyed with by vultures and severed their heads, Oh Lord!

koNdal cUzh akkazhani sangu ulAvip paravu kumpakONaththil uRai perumALE.: The clouds hover above the paddy fields of KumbakONam where conch shells abound, and You are seated there, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 865 keNdai nEroththavizhi - kumbakONam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]