திருப்புகழ் 794 பகரு முத்தமிழ்  (திருவிடைக்கழி)
Thiruppugazh 794 pagarumuththamizh  (thiruvidaikkazhi)
Thiruppugazh - 794 pagarumuththamizh - thiruvidaikkazhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்

பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்

புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
     சரவ ணத்தினிற் ...... பயில்வோனே

தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
     தழுவு பொற்புயத் ...... திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறல யிற்சுடர்க் ...... குமரேசா

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
     றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பகரு முத்தமிழ்ப் பொருளும் ... புகழப்படுகின்ற முத்தமிழ்
நூல்களின் பொருளையும்,

மெய்த்தவப் பயனும் ... உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும்,

எப்படிப் பலவாழ்வும் ... எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும்,

பழைய முத்தியிற் பதமு(ம்) ... தொன்று தொட்டு வரும் முக்திச்
செல்வ நிலையையும்,

நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும் ... யாவரும் விரும்பிப் போற்றும்
கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும்,

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் ... குற்றமற்ற
புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும்

அற்புதப் பெருவாழ்வும் ... அற்புதமான சிறந்த வாழ்வையும்,

புலன் அகற்றிடப் பலவிதத்தினைப் புகழ் ... ஐம்புலச் சேஷ்டைகள்
நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும்

பலத்தினைத் தரவேணும் ... அறிவுப் பலத்தையும் நாவன்மையையும்
நீ தந்தருள வேண்டும்.

தகரில் அற்றகைத் தலம்விட ... (தக்ஷயாகத்தில் நடைபெற்ற)
சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட
அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு
தாங்காமல்) கங்கையில் விட்டுவிட

பிணைச் சரவ ணத்தினிற் பயில்வோனே ... இணைந்திருக்கும்
சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே,

தனிவ னத்தினிற் புனமறத்தியை ... தனியாக வள்ளிமலைக்
காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை

தழுவு பொற்புயத் திருமார்பா ... தழுவிய அழகு புயங்களையும்
திருமார்பையும் உடையவனே,

சிகர வெற்பினைப் பகிரும் ... சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச
மலையைப் பிளந்து பகிர்ந்த

வித்தகத் திறல் அயிற்சுடர்க் குமரேசா ... ஞானமும் வலிமையும்
வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே,

செழுமலர்ப்பொழிற் குரவமுற்ற ... செழிப்பான பூஞ்சோலைகளில்
குராமரங்கள் உள்ள

பொற்றிருவி டைக்கழிப் பெருமாளே. ... அழகிய
திருவிடைக்கழியில்* மேவும் பெருமாளே.


* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே
திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு
வீற்றிருக்கிறான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.921  pg 2.922 
 WIKI_urai Song number: 798 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 794 - pagaru muththamizh (thiruvidaikkazhi)

pagaru muththamizh poruLu meyththavap
     payanum eppadip ...... pala vAzhvum

pazhaiya muththiyiR padhamu natpuRap
     paravu kaRpagath ...... tharu vAzhvum

pugaril budhdhiyutr arasu petruRap
     poliyum arbuthap ...... peru vAzhvum

pulan agatridap pala vidhaththinaip
     pugazh balath thinaith ...... tharavENum

thagaril atra kaith thalam vidap piNai
     saravaNath thiniR ...... payilvOnE

thani vanath thiniR punam aRath thiyaith
     thazhuvu poR buyath ...... thirumArbA

sikara veRpinaip pagirum viththagath
     thiRal ayiR sudark ...... kumarEsA

sezhu malarp pozhiR kurava mutra pOR
     thiruvidaik kazhip ...... perumALE.

......... Meaning .........

pagaru muththamizh poruLum: The meaning of famous works in the three branches of Tamil (namely, literature, music and drama);

meyththavap payanum: the benefit arising from true penance;

eppadip pala vAzhvum: variety and diversity in life;

pazhaiya muththiyiR padhamum: the traditional goal of the state of blissful liberation;

natpuRap paravu kaRpagath tharu vAzhvum: the most sought-after life in the celestial land that has the wish-giving tree of kaRpagam;

pugaril budhdhiyutr arasu petruRap poliyum: unblemished intellect, leading to the bright royal path towards

arbuthap peru vAzhvum: a wonderful and great life;

pulan agatridap pala vidhaththinaip pugazh balath thinai: and the strength and wisdom to praise You in several ways to rid myself of the mischief played by my five senses;

tharavENum: these are the things I need from You!

thagaril atra kaith thalam vida: As his hands were severed in the war (that ensued Dhaksha's sacrifice), Agni, the God of Fire, could not bear the heat (of the six flames of Murugan) and let them slip into River Ganga,

piNai saravaNath thiniR payilvOnE: which mingled with the water in the pond of SaravaNa where You grew up!

thani vanath thiniR punamaRaththiyaith thazhuvu: At the lonely millet-field in the forest (of VaLLimalai), You hugged VaLLi, the damsel of the hunters,

poR buyath thirumArbA: with Your broad shoulders and hallowed chest!

sikara veRpinaip pagirum viththagath thiRal ayiR sudark kumarEsA: Oh Lord KumarA, You hold in Your hand the sparkling Spear, symbolising Knowledge and Strength, that pierced the peaks of Mount Krouncha!

sezhu malarp pozhiR kurava mutra: There is a rich grove full of flowers and KurA trees in this place,

pOR thiruvidaik kazhip perumALE.: known as beautiful Thiruvidaikkazhi*, which is Your abode, Oh Great One!


* Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur.
Murugan is cosily seated under a KurA tree in this place.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 794 pagaru muththamizh - thiruvidaikkazhi


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]