பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 363 798. சொல்லப்படுகின்ற முத்தமிழ், நூல்களின் பொருளையும், உண்மைத் தவத்தாற் பெறப்படும் பயனையும், எத்தன்மையான பலவகைய வாழ்வையும், பழைமையாய் வரும் முத்திச் செல்வ நிலையையும், யாவரும் நண்புவைத்துப் போற்றும் கற்பகத்தரு வாழ்வையும் கற்பகவிருகூடி தேவலோக வாழ்வையும், (புகர்இல்) குற்றம் இல்லாத புத்தியுடன் அரசவாழ்வைப் பெறப்பெற்று விள்ங்கும் அற்புதமான் சிறந்த வாழ்வையும், ஐம்புலச் சேட்டைகள் நீங்கப்பெற பலவகையாலும் (உன்னை) (அல்லது உனது பலவகைப்பட்ட பெருமைகளையும்) புகழும் திடத்தின்ை அறிவின் பலத்தையும், நாவின் வன்மையையும் தந்தருள வேண்டும்; (தக்கன் யாகத்தில் நடந்த பூசலில்) தகர்க்கப்பட்டு அற்றுப்போன க்ைக்ளைக்கொண்ட் அக்கின்ரி தேவனது கைத்தலம் விட (கைத்தலங்கள்) கைகள் (பொறிகளின் சூடு தாங்காது கங்கையில் விட்டுவிட, (பிணை) சேர்ந்த சரவண மடுவில் பொருந்தி இருந்தவனே! யாக (வள்ளிமலைக்) காட்டில் திணைப்புனம் காத்திருந்த வேடப்பெண்ணைத் தழுவின அழகு புயங்கள்ையும் திரு மார்பையும் உடையவனே! சிகரங்களைக் கொண்டிருந்த கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த (வித்தகம்) ஞானத்தையும் வெற்றியையுங் கொண்ட (சுடர் அயில்) ஒளிவீசும் வேலாயுதத்தை உடைய குமரேசனே! செழுவிய பூஞ்சோலையிற் குராமரங்கள் உள்ள அழகிய திருவிடைக்கழிப்பெருமாளே! m (புகழ் பலத்தினைத் தரவேணும்)

  • திருவிடைக்கழியும் பொழிலும்: தேனமர் பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற...குல இளங்களிறு" திளையிளம்பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளை யிளங்களிறு" - செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங் கதிர்ஒளி" - (திருவிசைப்பா)

திருக்குரா நிழற்கீழ் முருகன் - என்பது திருவிடைக்கழி முருகனையே குறிக்கும். கொந்துவார் குரவடியினும்" என்னும் இடத்தும் (பாடல் 289) காண்க. பாடல் 201-ம் பார்க்க