திருப்புகழ் 778 அளிசுழ லளக  (கரியவனகர்)
Thiruppugazh 778 aLisuzhalaLaga  (kariyavanagar)
Thiruppugazh - 778 aLisuzhalaLaga - kariyavanagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனனத் தான தாத்தன
     தனதன தனனத் தான தாத்தன
          தனதன தனனத் தான தாத்தன ...... தனதான

......... பாடல் .........

அளிசுழ லளகக் காடு காட்டவும்
     விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
          அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள்

அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
     அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
          அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார

இளமுலை மிசையிற் றூசு நீக்கவும்
     முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
          இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக

எவரையு மளவிப் போய ணாப்பவும்
     நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
          இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய்

நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
     குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
          நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட

நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
     அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
          நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா

களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
     அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
          கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா

கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
     யருள்சுத குறநற் பாவை தாட்பணி
          கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அளி சுழல் அளகக் காடு காட்டவும் ... வண்டுகள் மொய்க்கும்
கூந்தலாகிய காட்டைக் காட்டுதற்கும்,

விழி கொடு கலவித் தீயை மூட்டவும் ... கண்களால் காமத் தீயை
மூட்டுதற்கும்,

அமளியில் முடியப் போது போக்கவும் ... படுக்கையில்
எப்பொழுதும் பொழுது போக்கவும்,

இளைஞோர்கள் அவர் வசம் ஒழுகிக் காசு கேட்கவும் ... இள
வயது உள்ளவர்களின் வசத்தில் பழகி பொருள் கேட்பதற்கும்,

அழகிய மயிலின் சாயல் காட்டவும் ... அழகிய தங்கள் மயில்
போன்ற சாயலைக் காட்டவும்,

அளவிய தெருவில் போய் உலாத்தவும் ... சந்திக்கும் பொருட்டு
வீதியில் போய் உலாத்துதற்கும்,

அதிபார இளமுலை மிசையில் தூசு நீக்கவும் ... மிகவும் கனத்த
இளமையான மார்பின் மேலுள்ள ஆடையை (வேண்டுமென்றே)
நீக்குதற்கும்,

முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும் ... முகமொடு முகம்
வைத்து காம ஆசையை உண்டு பண்ணவும்,

இரு நிதி இலரைத் தூர நீக்கவும் இனிதாக எவரையும்
அளவிப் போய் அணாப்பவும்
... நிறைய பணம் இல்லாதவர்களை
தூரத்தே விரட்டி நீக்குதற்கும், இனிய சொற்களுடன் எல்லாருடனும்
கலந்துபோய் ஏமாற்றவும்,

நினைபவர் அளவில் காதல் நீக்கி என் இடரது தொலையத்
தாள்கள் காட்டி நின் அருள்தாராய்
... நினைக்கின்றவர்களாகிய
விலை மகளிர் சம்பந்தப்பட்ட வரையில் என் ஆசையை நீக்க, என்
வருத்தமெல்லாம் தொலைய, திருவடிகளைக் காட்டி உன் திருவருளைத்
தந்து அருளுக.

நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகிப்
பேய்கள் கூப்பிட
... சுழற்சி உறும் போர்க்களத்தில் ஆறு போலச்
சுழன்று ஓடும் ரத்தத்தில் முழுகி பேய்கள் கூச்சலிட,

நிணமது பருகிப் பாறு காக்கைகள் கழுகு ஆட நிரை நிரை
அணியிட்டு ஓரி ஆர்த்திட
... மாமிசத்தை உண்டு பருந்துகளும்,
காகங்களும், கழுகுகளும் விளையாட, கூட்டம் கூட்டமாக வரிசையாக
நின்று நரிகள் ஆரவாரம் செய்ய,

அதிர் தரு சமரில் சேனை கூட்டிய நிசிசரர் மடியச் சாடு வேல்
கொடு பொரும் வீரா
... அதிர்ச்சி உறும் போரில் சேனைகளைக்
கூட்டி வந்த அசுரர்கள் இறக்கும்படி சம்காரம் செய்யும் வேலைக்
கொண்டு போர் புரியும் வீரனே,

களி மயில் தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனகத்
தாமம் ஆர்த்து ஒளிர் கனகிரி புய
... செருக்கைக் கொண்டிருந்த
மயிலின் மேல் புகுந்து ஏறும் பலவானே, அழகிய பொன் மாலை
நிறைந்து விளங்கும் பொன் மலை போன்ற புயங்களை உடையவனே,

முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப கரியவனகரின் தேவ
பார்ப்பதி சுத
... முத்து மாலை ஏற்று அணிந்துள்ள அழகிய மார்பனே,
கரியவனகர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனே, பார்வதி
அருளிய மகனே,

குற நல் பாவை தாள் பணி கருணைய ... குறப் பெண்ணாகிய
வள்ளியின் தாள்களைப் பணிகின்ற கருணா மூர்த்தியே,

தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே. ... தமிழ்ப் பாடல்
கேட்டு அன்பர்க்கு அருளும் பெருமாளே.


* கரியவனகர் சீகாழிக்கு மேற்கே 4 மைலில் உள்ள கொண்டல் வண்ணக்குடி
என்ற தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.879  pg 2.880  pg 2.881  pg 2.882 
 WIKI_urai Song number: 782 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 778 - aLicuzhalaLaga (kariyavanagar)

aLisuzha laLagak kAdu kAttavum
     vizhikodu kalavith theeyai mUttavum
          amaLiyil mudiyap pOthu pOkkavum ...... iLainjOrkaL

avarvasa mozhukik kAsu kEtkavum
     azhakiya mayiliR sAyal kAttavum
          aLaviya theruviR pOyu lAththavum ...... athipAra

iLamulai misaiyit RUsu neekkavum
     mukamodu mukamvaith thAsai yAkkavum
          irunithi yilaraith thUra neekkavum ...... inithAka

evaraiyu maLavip pOya NAppavum
     ninaipava raLaviR kAthal neekkiyen
          idarathu tholaiyath thALkaL kAttinin ...... aruLthArAy

neLipadu kaLamut RARu pORchuzhal
     kuruthiyil muzhukip pEykaL kUppida
          niNamathu parukip pARu kAkkaikaL ...... kazhukAda

nirainirai yaNiyit tOri yArththida
     athirtharu samariR chEnai kUttiya
          nisisarar madiyac chAdu vERkodu ...... porumveerA

kaLimayil thanilpuk kERu thAttika
     azhakiya kanakath thAma mArththoLir
          kanakiri puyamuth thAra mEtRaruL ...... thirumArpA

kariyava nakarit REva pArppathi
     yaruLsutha kuRanaR pAvai thAtpaNi
          karuNaiya thamizhiR pAdal kEttaruL ...... perumALE.

......... Meaning .........

aLi suzhal aLakak kAdu kAttavum: They display their forest-like hair swarmed by beetles;

vizhi kodu kalavith theeyai mUttavum: with their mere looks, they ignite an erotic fire;

amaLiyil mudiyap pOthu pOkkavum: they spend all their time on the bed;

iLainjOrkaL avar vasam ozhukik kAsu kEdkavum: they mingle closely with young men to grab their money;

azhakiya mayilin sAyal kAttavum: they show off their beauty like the preening peacock;

aLaviya theruvil pOy ulAththavum: they stroll on the streets to meet young men;

athipAra iLamulai misaiyil thUsu neekkavum: they (deliberately) let go the garment covering their heavy and beautiful bosom;

mukamodu mukam vaiththu Asai Akkavum: they press their face to the face of the suitors provocatively;

iru nithi ilaraith thUra neekkavum inithAka evaraiyum aLavip pOy aNAppavum: they chase away those without a lot of money; with sweet words, they flirt with all and then ditch them;

ninaipavar aLavil kAthal neekki en idarathu tholaiyath thALkaL kAtti nin aruLthArAy: to remove my passion for whores of such type and to get rid of all my misery, kindly bless me by granting Your hallowed feet!

neLi padu kaLam utRu ARu pOl suzhal kuruthiyil muzhukip pEykaL kUppida: The devils drowned themselves in a whirling river of blood flowing on the curved battlefield and began to scream with delight;

niNamathu parukip pARu kAkkaikaL kazhuku Ada nirai nirai aNiyittu Ori Arththida: vultures, crows and eagles began to play about devouring flesh; the jackals assembled in row after row and began to howl;

athir tharu samaril sEnai kUttiya nisisarar madiyac chAdu vEl kodu porum veerA: when the demons came to the reverberating battlefield with their armies, You fought with and killed them all by wielding Your spear, Oh valorous One!

kaLi mayil thanil pukku ERu thAttika azhakiya kanakath thAmam Arththu oLir kanakiri puya: You are the Mighty One who mounts the proud peacock! Your golden mountain-like shoulders are adorned with a bunch of beautiful golden chains, Oh Lord!

muththAram EtRu aruL thiru mArpa kariyavanakarin thEva pArppathi sutha: You have accepted the embellishment of Your hallowed chest with pearl necklaces! You are the deity seated in this place called Kariyavanagar*, Oh Lord! You are the son of DEvi PArvathi!

kuRa nal pAvai thAL paNi karuNaiya: You prostrated at the feet of VaLLi, the damsel of the KuRavAs, Oh Lord full of Compassion!

thamizhil pAdal kEttu aruL perumALE.: You love to listen to Tamil songs and bless Your devotees, Oh Great One!


* Kariyavanagar, now known as KoNdal VaNNakkudi, is located 4 miles west of SeekAzhi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 778 aLisuzha laLaga - kariyavanagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]