பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரியவனகர்) திருப்புகழ் உரை 323 அவர்களின் வசத்தில் பழகி அவர்களைக் காசு கேட்பதற்கும், அழகிய மயில்போன்ற (தங்கள்) சாயலைக் காட்டுதற்கும், அளவிய (சந்திக்கும் பொருட்டு)த் தெருவில் போயுலாத்துதற்கும், அதிக பாரமான இளமுலை மேலுள்ள ஆடையை நீக்குதற்கும், முகமொடு முகம் வைத்து ஆசை யுண்டுபண்ணுதற்கும், நிரம்ப சொத்து இல்லாதவரைத் துரத்தே வெருட்டி நீக்குதற்கும், இனிய சொற்களுடன் எல்லாருடனும் கலந்துபோய் (அனாப்பவும்) அவர்களை ஏமாற்றவும், (நினைபவரளவில்) நினைக்கின்றவர். களாகிய பொதுமகளிர் சம்பந்தப்பட்டவரையில் என் சையை நீக்கி, என் வருத்தமெல்லாந் தொலைய உன் ருவடிகளைக் காட்டி உன் திருவருளைத் தந்தருளுக: (நெளிபடு) சுழற்சியுறும் (களம் - உற்று) போர்க்களத்தில் சேர்ந்து (அங்கே) ஆறுபோலச் சுழன்று ஒடும் ரத்தத்தில் முழுகிப் பேய்கள் கூச்சலிட, மாமிசத்தை உண்டு (பாறு) பருந்துகளும், காக்கைகளும், கழுகுகளும் விளையாட கூட்டங் கூட்டமாக வரிசையாக நின்று, ஒரி (நரிகள்) ஆரவாரஞ்செய்ய, (இவ்வாறு) அதிர்ச்சியுறும் போரில் சேனைகளைக் கூட்டிவந்த அசுரர்கள் இறக்கும்படி சங்காரஞ்செய்யும் வேல்கொண்டு போர்செய்த வீரனே! செருக்கைக் கொண்டிருந்த மயில்மேல் புகுந்து ஏறும் (தாட்டிக) பலவானே! அழகிய பொன்மாலை நிறைந்து விளங்கும் பொன்மலை (மேரு போன்ற புயங்களை உடையவனே! முத்துமாலை ஏற்றணிந்துள்ள அழகிய மார்பனே! கரியவனகர் எனுந் தலத்தில் வீற்றிருக்கும் தேவனே! பார்வதி யருளிய (சுத) பிள்ளையே குறநற்பாவை) நல்ல குறப்பாவையாம் வள்ளியின் தாளைப் பணிகின்ற (அல்லது, பாவை உனது தாளைப் பணிகின்ற) கருணை மூர்த்தியே! தமிழ்ப் பாடல் கேட்டருளும் பெருமாளே! (இடரது தொலைய நின் அருள் தாராய்)