திருப்புகழ் 730 கருமுகில் போல்  (திருவாமாத்தூர்)
Thiruppugazh 730 karumugilpOl  (thiruvAmAththUr)
Thiruppugazh - 730 karumugilpOl - thiruvAmAththUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானத் தானன, தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான

......... பாடல் .........

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
     கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர்

கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே

பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
     பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே

பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
     புரிவது தானெப் போதது ...... புகல்வாயே

தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
     சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத்

தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
     தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா

அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
     அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா

அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
     அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு
கனி அமுது ஊறித் தேறிய மொழி மாதர்
... கரிய மேகம்
போன்றதும் வாசனை கொண்டுள்ளதும் ஆகிய கூந்தலை உடையவர்கள்.
தேனில் வெல்லத்துடன், பழம், அமுதம் இவைகள் ஊறியது போன்ற
இனிய பேச்சுக்களை உடையவர்கள் இந்த விலைமாதர்கள்.

கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன
தன பாரக் காரிகள் செயலோடே பொரு கயல் வாளைத்
தாவிய விழியினர்
... புணர்ச்சியைத் தருதற்கு நேரான ஏற்புடையவர்கள்.
செருக்கு உடையவர்கள். காமமும் கோபமும் மிக்கவர்கள். வட்டமான
மார்ப் பாரத்தை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல்
மீனையும் வாளை மீனையும் கடக்க வல்ல கண்களை உடையவர்கள்.

சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசைப் பாடிகள் புவி மீதே
பொதுவிகள் போகப் பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்
புரிவது தான் எப்போது அது புகல்வாயே
... கொள்ளைக்காரிகள்.
பொருள் எவ்வளவோ அவ்வளவுக்குத் தகுந்தபடித் தங்கள் ஆசையைச்
செலுத்துபவர்கள். பூமியில் இப் பொது மகளிர் காம இன்பத்தைத் தரும்
பாவிகள், ஆகிய இவர்கள் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது
திருவடியை அருள் புரிவது தான் எப்போது என்பதைச் சொல்லி அருள்க.

தரு அடு தீரச் சூரர்கள் அவர் கிளை மாளத் தூள் எழ சமன்
நிலை ஏறப் பாறொடு கொடி வீழ
... கற்பகத் தருவை அழித்த
தைரியத்தை உடைய அசுரர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும் மாண்டு
பொடிபட, யமனுடைய கொலைத் தொழில் பெருக, பருந்துகளுடன்
அண்டங்காக்கைகள் (போர்க்களத்துக்கு) விரும்பி வந்து சேர,

தனதன தானத் தானன என இசை பாடிப் பேய் பல தசை
உ(ண்)ண வேல் விட்டு ஏவிய தனி வீரா
... தனதன தானத்
தானன என்ற இவ்வாறான சந்தங்களுடன் இசை பாடி பேய்கள் பல
விதமான மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தி அனுப்பிய
ஒப்பற்ற வீரனே,

அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை
அழகு உடையாள் மெய்ப் பால் உமை அருள் பாலா
... அரி,
திருமால், சக்ராயுதன் என்று சொல்லப்படுபவனுக்குத் தங்கையும்,
முக்தாம்பிகை என்னும் பெயரை உடையவளும் ஆகிய அழகு உடையவள்,
சிவபெருமானுடைய உடலில் ஒரு பாகத்தில் உள்ள உமா தேவி ஈன்ற
மகனே,

அரவொடு பூளைத் தார் மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே.
... பாம்புடன்,
பூளை என்னும் பூவால் ஆகிய மாலையையும், சந்திரனையும், அறுகம்
புல்லுடன் சடையில் சூடிய அழகுடைய சிவபெருமான் இருக்கும்
எழிலுடைய திருவாமாத்தூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.755  pg 2.756  pg 2.757  pg 2.758 
 WIKI_urai Song number: 735 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 730 - karumugil pOl (thiruvAmAththUr)

karumukil pOlmat tAkiya aLakikaL thEniR pAkodu
     kaniyamu thURith thERiya ...... mozhimAthar

kalavikaL nErop pAkikaL mathanikaL kAmak krOthikaL
     kanathana pArak kArikaL ...... seyalOdE

porukayal vALaith thAviya vizhiyinar cURaik kArikaL
     poruLaLa vAsaip pAdikaL ...... puvimeethE

pothuvikaL pOkap pAvikaL vasamazhi vEnuk kOraruL
     purivathu thAnep pOthathu ...... pukalvAyE

tharuvadu theerac cUrarkaL avarkiLai mALath thULezha
     samanilai yERap pARodu ...... kodiveezhath

thanathana thAnath thAnana enaisai pAdip pEypala
     thasaiyuNa vElvit tEviya ...... thaniveerA

arithiru mAlchak rAyutha navaniLai yAL muth thArnakai
     azhakudai yALmeyp pAlumai ...... yaruLbAlA

aravodu pULaith thArmathi aRukodu vENic cUdiya
     azhakarthen mAthaik kEyuRai ...... perumALE.

......... Meaning .........

karu mukil pOl mattAkiya aLakikaL thEnil pAkodu kani amuthu URith thERiya mozhi mAthar: Their fragrant hair is like the black cloud. These whores talk sweetly like honey in which jaggery, and a mixture of fruits and nectar are well-soaked;

kalavikaL nEr oppAkikaL mathanikaL kAma krOthikaL kana thana pArak kArikaL seyalOdE poru kayal vALaith thAviya vizhiyinar: They are ever ready to make love. They are arrogant and filled with passion and anger. They are endowed with round and heavy bosom. Their eyes are capable of surpassing the speed of the combative kayal and vALai fish.

cURaikkArikaL poruL aLavu Asaip pAdikaL puvi meethE pothuvikaL pOkap pAvikaL vasam azhivEnukku Or aruL purivathu thAn eppOthu athu pukalvAyE: They are expert-swindlers. They display love and affection in proportion to the amount of money they receive. These whores, who dole out carnal pleasure, are the worst sinners on the earth. I am destroying myself by totally succumbing to such whores; kindly tell me when You propose to grant me Your hallowed feet, Oh Lord!

tharu adu theerac cUrarkaL avar kiLai mALath thUL ezha saman nilai ERap pARodu kodi veezha: Those demons, who had the audacity to destroy the kaRpaga tree in the celestial land, and their entire clan were killed and shattered to pieces; the slaughter-work of Yaman (God of Death) proliferated; the vultures and wild crows assembled (in the battlefield) with relish;

thanathana thAnath thAnana ena isai pAdip pEy pala thasai u(N)Na vEl vittu Eviya thani veerA: singing songs to the meter of "thanathana thAnath thAnana", the devils devoured the flesh when You wielded Your spear, Oh Matchless and valorous Lord!

ari thiru mAl sakrAyuthan avan iLaiyAL muththAr nakai azhaku udaiyAL meyp pAl umai aruL pAlA: She is the younger sister of the Lord who is known by the names Hari, VishNu and the Lord with the disc as His weapon; She is called the Mother of Pearls (MukthAmbigai); She is the most beautiful Goddess who is concorporate on one side of Lord SivA; and You are the son of that UmAdEvi, Oh Lord!

aravodu pULaith thAr mathi aRukodu vENis cUdiya azhakar then mAthaikkE uRai perumALE.: The serpent, along with a garland made of pULai (Indian laburnum) flowers, the crescent moon and aRugam (cynodon) grass adorn the matted and beautiful hair of Lord SivA who is seated in this beautiful town, ThiruvAmAththUr*, which is also Your abode, Oh Great One!


* ThiruvAmAththUr is 4 miles northwest of Vizhuppuram railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 730 karumugil pOl - thiruvAmAththUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]