பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாமாத்தூர்) திருப்புகழ் உரை 199 பொதுமகளிராய்க் காலம் கழிப்பவர்கள், போகம் - காம இன்பத்தைத் தரும் பாவிகள், ஆகிய இவர்கள் பால் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது திருவருளைப் புரிவதுதான் எப்போது - அதைச் சொல்லி யருளுக. (தரு) கற்பக விருகூடிங்களை (பொன்னுலகை) (அடு) அழித்த தைரியத்தை உடைய அசுர சூரர்கள், அவர்களின் சுற்றத்தார் - ஆக யாவரும் மாண்டு பொடியெழ, யமனுடைய (நிலை) கொலைத்தொழில் (ஏற) பெருக, பருந்துகளுடன் காக்கைகள் (வீழ விரும்பி வந்து சேரவும் . தனதன தானத் தானன என்று இசை பாடிப் பேய்கள் பலவகைப்பட்ட மாமிசங்களை உண்ணும்படியும் வேலா யுதத்தை விட்டனுப்பின ஒப்பற்ற வீரனே! ஹரி, திருமால், சக்ராயுதத்தை உடையவன் - (எனப்படும் பெருமானுக்குத்) தங்கை, முத்தார்நகை அம்மை எனும் பெயருடைய அழகி, (சிவனுடைய) மெய்யில் (உடலில்) (பால்) ஒரு பாகத்தில் (பாதியில்) உள்ள (அல்லது சத்திய குணம் கொண்ட) உமாதேவி அருளிய குழந்தையே! பாம்பையும், பூளை என்கின்ற பூவால் ஆகிய மாலையையும், நிலவையும், அறுகுடன் சடையிற் சூடியுள்ள அழகருடைய அழகிய திருவாமாத்துாரில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (அருள் புரிவதுதான் எப்போது புகல்வாயே) 736. உரிய காலத்திற் பெய்த மழையென்று நினைவுகொண்டு. (அத்தகைய மழையைக் கண்டால் வரும் மகிழ்ச்சிபோல் மகி ழ்ச்சி பூண்டு), (உருவிலி) உருவில்லாதவனான மன்மதன் கொல்வதற்குப் போர் புரிந்துவிட்ட அம்பு என்றும், மாவடுவின் வகிர் பாருங்கள் இது என்றும், இளைஞர்கள் விசேடித்து உரைக்கும் கயல் மீன்போன்ற கண்களாலும் -