![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திருப்புகழ் 646 மாதர் வசமாய் (கதிர்காமம்) Thiruppugazh 646 mAdharvasamAi (kadhirgAmam) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு ![]() ![]() ![]() | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தானத் ...... தனதான ......... பாடல் ......... மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் தீதகல வோதிப் ...... பணியாரும் தீநரக மீதிற் ...... றிகழ்வாரே நாதவொளி யேநற் ...... குணசீலா நாரியிரு வோரைப் ...... புணர்வேலா சோதிசிவ ஞானக் ...... குமரேசா தோமில் கதிர்காமப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மாதர்வசமாயுற்று உழல்வாரும் ... பெண்களின் வசப்பட்டுத் திரிபவர்களும், மாதவம் எ(ண்)ணாமல் திரிவாரும் ... சிறந்த தவத்தை நினைக்காமல் அலைபவர்களும், தீதகல ஓதிப் பணியாரும் ... தீமைகள் விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும், தீநரக மீதில் திகழ்வாரே ... கொடிய நரகத்திலே உழன்று கிடப்பார்கள். நாதவொளியே ... ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே, நற் குணசீலா ... நல்ல அருட்குண சீலனே, நாரியிருவோரைப் புணர்வேலா ... வள்ளி, தேவயானை என்ற இரு தேவியரை மணந்த வேலனே, சோதிசிவ ஞானக் குமரேசா ... ஜோதியான சிவஞானத்தைத் தரும் குமரக் கடவுளே, தோமில் கதிர்காமப் பெருமாளே. ... குற்றமற்ற கதிர்காமத்தில் வாழும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1059 pg 1.1060 pg 1.1061 pg 1.1062 WIKI_urai Song number: 428 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | 'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
![]() | திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
![]() | M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 646 - mAdhar vasamAi (kadhirgAmam) mAdharvasa mAyutru ...... uzhalvArum mAthavame NAmaR ...... thirivArum theedhagala Odhip ...... paNiyArum theenaraga meedhiR ...... thigazhvArE nAdhavoLi yEnaR ...... guNaseelA nAriyiru vOraip ...... puNarvElA jOthi siva nyAnak ...... kumarEsA thOmil kadhirkAmap ...... perumALE. ......... Meaning ......... mAdharvasa mAyutru uzhalvArum: Those who philander and are in the grip of women, mAthavame NAmaR thirivArum: those who roam about without any thought of great penance, theedhagala Odhip paNiyArum: and those who do not pray and prostrate to You for dispelling the evils theenaraga meedhiR thigazhvArE: will all dwell deep inside the burning hell. nAdhavoLi yE: You are the combination of Light and Sound! naR guNaseelA: You are the embodiment of all virtues! nAriyiru vOraip puNarvElA: You have two consorts, namely VaLLi and DEvayAnai! jOthi siva nyAnak kumarEsA: You are the luminous Saivite knowledge itself, Oh VElA, thOmil kadhirkAmap perumALE.: You have Your spotless abode at KadhirgAmam, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() | ![]() ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |