பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1060

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம் திருப்புகழ் உரை 587 427 வாசனை நீங்காததும், செயமே பெறுவதுமான மலர்ப் பாணங்களைத் தொட்டுப், பயிலும் வில்லைக் கையில் வைத்து வலித்து நிற்கும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டிவரும். கிரணங்களைக் கொண்ட வட்ட வடிவான நீே (பூரண நிலா) சுட்டு நிற் பதனாலும், ரண்டு கண்களினின்றும் முத்தம் (முத்துப் போன்ற கண்ண்ர்) உதிர 燃 アー 繳 யாமங்கள் தோறும் இரவில் தினந்தோறும் மெலிவு அடையாதவாறு துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம்கொண்டு நிற்கும் இவளை వేన్క్ நீ வந்தருள வேண்டும். யானைகள் வாழும் மலையில் (வள்ளிமலையில்) அருமை வாய்ந்த வேட்டுவப் பெண் வள்ளியின் கலவியின்பம் மிக்க அழகிய மணிமார்பனே! கனக மாணிக்க உருவத்தனே! சிறந்த கதிர்காமத் தலத்தில் உறைபவனே! முருகனே! பக்தருக்கு அருகில் இருப்பவனே! முத்திதரும் முதன்ம்ையனே! பச்ச்ைமயில் வீரனே! விரைந்து வந்து மேலிட்டு எதிர்த்த பொல்லாத சூரன் கேடு உற்று அழிபட வேலைச் செலுத்திய பெருமாளே! (இவளை வாழ்விக்க வரவேணும்) 428 பெண்கள் வசப்பட்டுத் திரிபவர்களும், நல்ல தவச்செயல்களை எண்ணாமல் திரிபவர்களும், தீமைகள் விலகும்படி (நல்ல நூல்களை ஒதிப் பணியாதவர்களும், கொடிய நரகத்திலே விளக்கமுறக் கிடப்பார்கள் (முன் பக்கத் தொடர்ச்சி) t கணக மாணிக்க வடிவன் என்பதனைக் கொண்டு அருணகிரியார் இங்குத் தரிசித்தபொழுது மாணிக்கத்தால் அமைந்த திருவுருவம் இருந்திருத்தல் கூடும் என்று கருதுகின்றார்கள். இலங்கைப் புராதன சைவாலயங்கள் - கதிர்காமம் - பக்கம் 13.