திருப்புகழ் 645 மரு அறா வெற்றி  (கதிர்காமம்)
Thiruppugazh 645 maruaRAvetRi  (kadhirgAmam)
Thiruppugazh - 645 maruaRAvetRi - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான

......... பாடல் .........

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
     வலிசெயா நிற்கு ...... மதனாலும்

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
     மதிசுடா நிற்கு ...... மதனாலும்

இருகணால் முத்த முதிரயா மத்தி
     னிரவினால் நித்த ...... மெலியாதே

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
     மிவளைவாழ் விக்க ...... வரவேணும்

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
     கலவிகூர் சித்ர ...... மணிமார்பா

கனகமா ணிக்க வடிவனே மிக்க
     கதிரகா மத்தி ...... லுறைவோனே

முருகனே பத்த ரருகனே முத்தி
     முதல்வனே பச்சை ...... மயில்வீரா

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
     முறியவேல் தொட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கு(ம்)
மதனாலும்
... வாசனை நீங்காததும், வெற்றியே பெறுவதுமான மலர்ப்
பாணங்களை தொடுத்து, (கரும்பு) வில்லைக் கையில் வைத்து
வலிமையுடன் நிற்கும் மன்மதனாலும்,

மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும்
அதனாலும்
... மதில்களைத் தாண்டி வரும் கிரணங்களைக் கொண்ட
வட்ட வடிவமான சந்திரன் கதிர்களால் (இவளைச்) சுட்டுக்கொண்டு
நிற்பதனாலும்,

இரு க(ண்)ணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால்
நித்தம் மெலியாதே
... இரண்டு கண்களிலிருந்தும் முத்துப் போன்ற
கண்ணீர் சிந்தி, யாமங்கள்* தோறும் இரவில் தினமும் மெலியாதபடி,

இடர் உறா மெத்த மயல் கொ(ள்)ளா நிற்கும் இவளை
வாழ்விக்க வர வேணும்
... துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம்
கொண்டு நிற்கும் இந்தப் பெண்ணை வாழ்விக்க நீ வந்து அருள
வேண்டும்.

கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி
மார்பா
... யானைகள் கூடியுள்ள (வள்ளி) மலையில் அருமையான
வேடப் பெண் வள்ளியுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும் அழகிய மணி
மார்பனே,

கனக மாணிக்க வடிவனே மிக்க கதிரகாமத்தில்
உறைவோனே
... பொன், மாணிக்கம் போன்ற உருவத்தனே, சிறந்த
கதிர்காமம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,

முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில்
வீரா
... முருகனே, பக்தர்களுக்கு அருகில் இருப்பவனே, முக்தி தரும்
முதன்மையானவனே, பச்சை மயில் வீரனே,

முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட
பெருமாளே.
... விரைந்து வந்து மேல் எதிர்த்த பொல்லாத சூரன் கேடு
உற்று அழிபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.


* யாமம் = மூன்று மணி நேரம். மாலையும் இரவும் சேர்ந்து மொத்தம் நான்கு யாமங்கள்.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை
தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1059  pg 1.1060 
 WIKI_urai Song number: 427 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 645 - maru aRA vetRi (kadhirgAmam)

maruvaRA vetRi malarthodA viRkai
     valiseyA niRku ...... mathanAlum

mathilkaLthA vutRa kalaipadA vatta
     mathisudA niRku ...... mathanAlum

irukaNAl muththa muthirayA maththi
     niravinAl niththa ...... meliyAthE

idaruRA meththa mayalkoLA niRku
     mivaLaivAzh vikka ...... varavENum

karikaLsEr veRpi lariyavE dicchi
     kalavikUr sithra ...... maNimArpA

kanakamA Nikka vadivanE mikka
     kathirakA maththi ...... luRaivOnE

murukanE paththa rarukanE muththi
     muthalvanE pacchai ...... mayilveerA

mudukimE litta kodiyacUr kettu
     muRiyavEl thotta ...... perumALE.

......... Meaning .........

maru aRA vetRi malar thodA vil kai vali seyA niRku(m) mathanAlum: The fragrance of his flowery arrows still lingers; wielding those triumphant arrows and holding his bow (of sugarcane) in his hand, Manmathan, God of Love, stands firm;

mathilkaL thAvutRa kalai padA vatta mathi sudA niRkum athanAlum: rising above the fortress walls, the round moon continues to radiate its scorching rays (upon her);

iru ka(N)NAl muththam uthira yAmaththin iravinAl niththam meliyAthE: because of them, both her eyes are shedding pearl-like tears daily throughout the yamams* of the night; lest she becomes weaker any further,

idar uRA meththa mayal ko(L)LA niRkum ivaLai vAzhvikka vara vENum: kindly come to give life to this young girl who suffers miserably from excessive passion!

karikaL sEr veRpil ariya vEdicchi kalavi kUr sithra maNi mArpA: In the Mount VaLLimalai where many elephants were assembled, You joined VaLLi, the dear damsel of the hunters, and cohabited with her with Your hallowed chest, Oh Lord!

kanaka mANikka vadivanE mikka kathirakAmaththil uRaivOnE: Your complexion is like that of gold and ruby, Oh Lord! You have Your abode in this famous place, KadhirgAmam!

murukanE paththar arukanE muththi muthalvanE pacchai mayil veerA: Oh MurugA! You stay very close to Your devotees! You are the foremost One delivering liberation! You are the valorous One who mounts the green peacock!

muduki mElitta kodiya cUr kettu muRiya vEl thotta perumALE.: When the evil demon SUran confronted You swiftly, You wielded Your weapon, the spear, to destroy and kill him, Oh Great One!


* yAmam = a time period of three hours; the evening is divided into four yamams.


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The Love God, the flowery arrows and the moon are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 645 maru aRA vetRi - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]