திருப்புகழ் 443 விதி அதாகவே  (திருவருணை)
Thiruppugazh 443 vidhiathAgavE  (thiruvaruNai)
Thiruppugazh - 443 vidhiathAgavE - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தனன தானனா
     தனன தானனம் ...... தனதான

......... பாடல் .........

விதிய தாகவெ பருவ மாதரார்
     விரகி லேமனந் ...... தடுமாறி

விவர மானதொ ரறிவு மாறியே
     வினையி லேஅலைந் ...... திடுமூடன்

முதிய மாதமி ழிசைய தாகவே
     மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு

முறைமை யாகநி னடிகள் மேவவே
     முனிவு தீரவந் ...... தருள்வாயே

சதிய தாகிய அசுரர் மாமுடீ
     தரணி மீதுகுஞ் ...... சமராடிச்

சகல லோகமும் வலம தாகியே
     தழைய வேவருங் ...... குமரேசா

அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரந் ...... தனில்மேவி

அருணை மீதிலெ மயிலி லேறியே
     அழக தாய்வரும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி ...
விதி ஆட்டுவிப்பதால் இளமை வாய்ந்த பெண்களின் தந்திரச்
செயல்களில் மனம் தடுமாற்றம் அடைந்து,

விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு
மூடன்
... தெளிவுள்ளதான ஓர் அறிவும் கெட்டுப்போய் வினை
வசப்பட்டு அலைச்சலுறும் முட்டாள் ஆகிய நான்,

முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே
நினைந்திடுமாறு
... பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை
இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி,

முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து
அருள்வாயே
... முறைமைப்படி உனது திருவடிகளை அடையுமாறு,
உனது கோபம் தீர்ந்து வந்து அருள் புரிவாயாக.

சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி ...
வஞ்சனை கூடிய அசுரர்களுடைய பெரிய முடிகள் பூமியில் சிந்தும்படி
போர் செய்து,

சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும்
குமரேசா
... எல்லா உலகங்களும் (மயிலின் மீது) வலமாக,
(அவ்வுலகங்கள்) நலமுறும்படியாக வரும் குமரேசனே,

அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம் தனில் மேவி ...
நிரம்ப தேவர்கள் வெண்சாமரம் வீச, அருமை வாய்ந்த கோபுரத்தில்
வீற்றிருந்து,

அருணை மீதிலெ மயிலில் ஏறியே அழகு அதாய் வரும்
பெருமாளே.
... திருவண்ணாமலையில் மயில் மீது ஏறி அழகுடன்
வரும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.337  pg 2.338  pg 2.339  pg 2.340 
 WIKI_urai Song number: 584 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 443 - vidhi athAgavE (thiruvaNNAmalai)

vidhi adhAgave paruva mAdharAr
     viragilE manam ...... thadumARi

vivara mAnadhor aRivu mARiyE
     vinaiyilE alain ...... dhidu mUdan

mudhiya mAthamizh isai adhAgavE
     mozhi seydhE ninaindh ...... idumARu

muRaimai yAga nin adigaL mEvavE
     munivu theera vandh ...... aruLvAyE

sadhi adhAgiya asurar mAmudee
     dharaNi meedh ugum ...... samarAdi

sakala lOkamum valama dhAgiyE
     thazhaiyavE varung ...... kumarEsA

adhika vAnavar kavari veesavE
     ariya gOpuran ...... thanil mEvi

aruNai meedhile mayilil EriyE
     azhagadhAy varum ...... perumALE.

......... Meaning .........

vidhi adhAgave paruva mAdharAr viragilE manam thadumARi: Due to the havoc played on me by my fate, I fell victim to the deceitful tricks of young women and became disconcerted.

vivara mAnadhor aRivu mARiyE vinaiyilE alaindhidu mUdan: I was a stupid fool destined to roam about aimlessly losing my clear thinking.

mudhiya mAthamizh isai adhAgavE mozhi seydhE ninaindh idumARu: Kindly make me think of composing and singing songs in the ancient and great language of Tamil

muRaimai yAga nin adigaL mEvavE munivu theera vandh aruLvAyE: and attain Your hallowed feet by following the righteous path; for that, You must shed Your anger and come to bless me graciously!

sadhi adhAgiya asurar mAmudee dharaNi meedh ugum samarAdi: You fought a great war knocking down huge heads of the treacherous demons on the earth;

sakala lOkamum valama dhAgiyE thazhaiyavE varung kumarEsA: and then You mounted Your peacock and flew around all the worlds making them prosperous, Oh Lord KumarA!

adhika vAnavar kavari veesavE: With many celestials reverently ministering to You with the Royal fan,

ariya gOpuran thanil mEvi aruNai meedhile mayilil EriyE azhagadhAy varum perumALE.: You are seated in the unique tower of ThiruvaNNAmalai after arriving there elegantly, mounted on the peacock, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 443 vidhi athAgavE - thiruvaruNai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]