பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 335 நிரம்பத் தேவர்கள் கவரிவீச அருமை வாய்ந்த கோபுரத்தில் வீற்றிருந்து. அண்ணாமலையிலே மயில்மீது ஏறி அழகுடன் வரும் பெருமாளே. (முனிவு திரவந்தருள்வாயே) 585. விந்துவானது (சுக்கிலம்). புளகாங்கிதத்தால் o இன்பநிலை அடைந்து-வெளிவந்து ஒழுகச்சிந்தி (ஒருமாதின்) கருவிலே உட்கொள்ளப்பட்டதான (அதன்) சிறிய துளியானது விரிந்துள்ள தாமரை போன்ற கருப்பையில் தங்கி அங்கு உள்ளே ஒரு சுழற்சியில் ரத்தத்தின் குளிகை - மாத்திரை) அளவொடு (சுரோணிதத்தோடு) கலத்தலால் (கரு) உதித்து (தோன்றி) - (மதிவளர விண்டுற்று) மாதம் ஏற ஏற (வயிறு பெருத்து) வெளிக்காட்ட ஈன்ற தந்தை (பிதா) இதை அறிந்து அன்புபூண, வலிகொண்டு, (சக்தி அடைந்து), ஆட்டம் அசைவு நிரம்ப ஏற்பட்டு, (துரு) - குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்த்த உருவம்போல உருவம் நன்கு பொருந்தி, ஏழுமாதம் முற்றின.பின், வயிறானது குடம்போல (உகுப்ப) வெளிக்காட்ட ஒரு பத்தாவது மாதத்தில், மாயவித்தை அல்லது மந்திரச்செயலால் - தாமரை உருவமுள்ள ஜலத்துவார வழியே குழந்தையாய்) வெளிவந்து பூமியின்மேல், பழைய வினைச் செயல்கள் உடன் தொடருதலோடும், (விழுப்பொடு) அசுத்த நிலையோடும், உடலும் தலையும் அழுக்கும் மலமும் மூடக் கவிழ்ந்து, விழுந்து (வெளியே) தள்ளப்பட, (அதுகண்டு) எல்லோரும் (அக் குழந்தைமேல்) ஆசை மீக்கொள்ள.