திருப்புகழ் 242 இருப்பவல் திருப்புகழ்  (திருத்தணிகை)
Thiruppugazh 242 iruppavalthiruppugazh  (thiruththaNigai)
Thiruppugazh - 242 iruppavalthiruppugazh - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
     தனத்தன தனத்தன ...... தனதான

......... பாடல் .........

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
     இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்

இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
     னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
     தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
     சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
     களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்

கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
     கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்

பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
     புறத்தினை யளித்தவர் ...... தருசேயே

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
     பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருப்பவல் திருப்புகழ் ... உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற
துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை

விருப்பொடு படிப்பவர் ... ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய

இடுக்கினை யறுத்திடும் ... சங்கடங்களை அறுத்தெறியும் என்ற
உண்மையை

எனவோதும் ... எடுத்துச் சொல்கின்ற,

இசைத்தமிழ் நடத்தமிழென ... இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும்,

துறை விருப்புடன் இலக்கண இலக்கிய ... அகத்துறைப் பாக்கள்,
இலக்கணம், இலக்கியம் என்றும்,

கவிநாலும் ... நால்வகைக் கவிகளையும்*

தரிப்பவ ருரைப்பவர் ... உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள்,

நினைப்பவர் ... நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை

மிகச்சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே ... மிகவும் இவ்வுலகில்
புகழாமல்,

தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு ... தங்கள்
மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும்

சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ ... சாமர்த்தியசாலிகளான
பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ? (கூடாது என்றபடி),

கருப்புவில் வளைத்து ... கரும்பு வில்லினை வளைத்து அதில்

அணி மலர்க்கணை தொடுத்து ... அழகிய மலர்ப் பாணங்களைத்
தொடுத்து,

இயல் களிப்புடன் ஒளித்தெய்த ... மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து
செலுத்திய

மதவேளை ... மன்மதனை,

கருத்தினில் நினைத்து ... தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே

அவன் நெருப்பெழ ... அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி

நுதற்படு கனற்கணி லெரித்தவர் ... தன் நெற்றிக் கண்ணால்
எரித்தவரும்,

கயிலாயப் பொருப்பினி லிருப்பவர் ... கயிலை மலையிலே
வீற்றிருப்பவரும்,

பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர் ... பர்வத குமாரி
உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன்

தருசேயே ... பெற்ற மகனே,

புயற்பொழில் வயற்பதி ... மேகங்கள் தங்கும் சோலைகளும்,
வயல்களும் சூழ்ந்த ஊராகிய

நயப்படு திருத்தணி பொருப்பினில் ... இனிமை வாய்ந்த
திருத்தணி மலையில்

விருப்புறு பெருமாளே. ... விருப்பம் கொள்ளும் பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.651  pg 1.652  pg 1.653  pg 1.654 
 WIKI_urai Song number: 271 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

ThiruththaNi Thiru SAminAthan
'திருத்தணி' திரு சாமிநாதன்

'ThiruththaNi' Thiru SAminAthan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 242 - iruppaval thiruppugazh (thiruththaNigai)

iruppaval thiruppugazh viruppodu padippavar
     idukkinai aRuththidum ...... ena Odhum

isaiththamizh nadaththamizh enaththuRai viruppudan
     ilakkaNa ilakkiya ...... kavi nAlum

tharippavar uraippavar ninaippavar miga jaga
     thalaththinil navitrudhal ...... aRiyAdhE

thanaththinil mukaththinil manaththinil urukkidu
     samarthigaL mayakkinil ...... vizhalAmO

karuppu vil vaLaithaNi malarkkaNai thoduththiyal
     kaLippudan oLiththeydha ...... madha vELai

karuththinil ninaiththava neruppezha nudhaRpadu
     kanaRkaNil eriththavar ...... kayilAya

poruppinil iruppavar paruppadha umaikkoru
     puRaththinai aLiththavar ...... tharusEyE

puyaR pozhil vayaRpadhi nayappadu thiruththaNi
     poruppinil viruppuRu ...... perumALE.

......... Meaning .........

iruppaval thiruppugazh: "The Glory of Lord (Thiruppugazh) is like fried rice packed to last a long journey (of life unto death);

viruppodu padippavar idukkinai aRuththidum: it removes all obstacles of those who read it with relish".

ena Odhum: so declare the following -

isaiththamizh nadaththamizh: specialists in Tamil Music, Tamil Drama,

enaththuRai viruppudan: experts in other branches of Tamil romantic literature,

ilakkaNa ilakkiya kavi nAlum: grammarians, literatuers and poets who are capable of composing four most difficult branches of Tamil poetry*.

tharippavar uraippavar ninaippavar: These great people cherish this truth in their heart, speak about it and always think about it.

miga jagathalaththinil navitrudhal aRiyAdhE: Not caring to laud these people adequately in this world,

thanaththinil mukaththinil manaththinil urukkidu: I indulge in women who melt my mind with their bosoms and faces;

samarthigaL mayakkinil vizhalAmO: how can I fall prey to their enticing lure?

karuppu vil vaLaithaNi malarkkaNai thoduththu: (The Love God) bent the bow of sugar cane and sent out arrows of flowers; and

iyal kaLippudan oLiththeydha madha vELai: proudly hiding himself, that Manmathan aimed the arrows (at SivA).

karuththinil ninaiththu: SivA read Manmathan's thought

ava neruppezha nudhaRpadu kanaRkaNil eriththavar: and burnt him with the fire spewing from the third eye on His forehead;

kayilAya poruppinil iruppavar: and He resides at Mount KailAsh.

paruppadha umaikkoru puRaththinai aLiththavar tharusEyE: That SivA gave His left side to UmA, Himavan's daughter, and also brought forth You, His son, to us.

puyaR pozhil vayaRpadhi: The town where clouds gather in the groves and paddy-fields are aplenty -

nayappadu thiruththaNi: that enchanting town, ThiruththaNigai,

poruppinil viruppuRu perumALE.: is Your favourite mount, Oh Great One!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 242 iruppaval thiruppugazh - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]