திருப்புகழ் 202 ஆனனம் உகந்து  (சுவாமிமலை)
Thiruppugazh 202 Ananamugandhu  (swAmimalai)
Thiruppugazh - 202 Ananamugandhu - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்த தானன தானதன தந்த தானன
     தானதன தந்த தானன ...... தனதான

......... பாடல் .........

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
     ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல்

ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
     ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம

மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
     மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன்

வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
     வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே

ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
     ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை

ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
     ராசதம றிந்த கோமள ...... வடிவோனே

சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
     தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே

சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
     ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து ...
(விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள்
சேரக் கலந்து,

பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழ் ஊறல் ஆதரவின்
உண்டு
... பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன்
என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி,

வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும்
மோதிட
... வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார்
என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும்
மோத,

அபிராம மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து
கீடமில் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே
... அழகிய மான்
அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு
போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய,

உன் வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக
வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே
... உனது தாமரை போன்ற
அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம்
செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ?

ஈன அதி பஞ்ச பாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு
அழிய வென்று
... இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த
அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு,

வானவர் குல சேனை ஏவல் கொளும் இந்த்ர லோக வசீகர
அலங்க்ருத ஆகர
... தேவர்களுடைய சிறந்த சேனையை
ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி
வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே,

ராசதம் அறிந்த கோமள வடிவோனே ... ராசத குணங்களின்
தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே,

சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு
தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே
... விடாமழை
பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து
விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே,
வயலூரில் வாழ்பவனே,

சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு
ஸ்வாமி மலை நின்று உலாவிய பெருமாளே.
... நிலா
முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து
விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே.


* ஐவகை பாதகங்கள்:

கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.503  pg 1.504  pg 1.505  pg 1.506 
 WIKI_urai Song number: 208 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 202 - Ananam ugandhu (SwAmimalai)

Ananamu kanthu thOLodu thOLiNaika lanthu pAlana
     Aramuthu kaNdu thEnena ...... ithazhURal

Atharavi nuNdu vElvizhi pUsalida nanRu kANena
     Anaiyura mengu mOthida ...... apirAma

mAnanaiya mangai mArmadu nApiyilvi zhunthu keedamil
     mAyumanu vinpa vAsaiya ...... thaRavEyun

vArijapa thangaL nAyadi yEnmudipu nainthu pOthaka
     vAsakamva zhangi yALvathu ...... morunALE

eenavathi panja pAthaka thAnavarpra saNda sEnaikaL
     eedazhiya venRu vAnavar ...... kulasEnai

EvalkoLu minthra lOkava seekarava langru thAkara
     rAsathama Rintha kOmaLa ...... vadivOnE

sOnaisoai kunRa vEduvar pEthaipayil kinRa ARiru
     thOLudaiya kantha nEvaya ...... liyilvAzhvE

cULikaiyu yarntha kOpura mALikaipo ninji sUzhtharu
     SvAmimalai ninRu lAviya ...... perumALE.

......... Meaning .........

Ananam ukanthu thOLodu thOL iNai kalanthu: Looking happily at the faces (of the whores) and hugging them shoulder to shoulder,

pAl ana Aramuthu kaNdu thEn ena ithazh URal Atharavin uNdu: imbibing the dribble from their lips that tastes like milk, wholesome nectar, sugar candy and honey,

vEl vizhi pUsal ida nanRu kAN ena Anai uram engum mOthida: being invaded by their spear-like combative eyes, being attacked everwhere on the chest by their elephant-like breasts which show off prominently,

apirAma mAn anaiya mangaimAr madu nApiyil vizhunthu keedamil mAyum manu inpa Asai athu aRavE: having fallen on the fountain-like navel of these deer-like women like the dying worm of the beetle, I wish to get rid of this hankering for human carnal pleasure;

un vArija pathangaL nAy adiyEn mudi punainthu pOthaka vAsakam vazhangi ALvathum oru nALE: for that, You have to place Your lotus-like hallowed feet upon the head of this dog-like slave and preach to me the True Knowledge; will there be a day when You will thus take charge of me?

eena athi panja pAthaka thAnavar prasaNda sEnaikaL eedu azhiya venRu: The evil armies of the demons who had committed the five* heinous sins were defeated and destroyed;

vAnavar kula sEnai Eval koLum inthra lOka vaseekara alangrutha Akara: and the great armies of the celestials were brought under Your command by the spell of Your charm, Oh Lord; You are the seat of beautiful adornment!

rAsatham aRintha kOmaLa vadivOnE: You know the characteristics of aggressiveness (rAsatham), Oh Handsome One!

sOnai sori kunRa vEduvar pEthai payilkinRa ARu iru thOLudaiya kanthanE vayaliyil vAzhvE: Oh Lord KanthA, Your twelve shoulders are hugged playfully by VaLLi, the damsel of the hunters, in Mount VaLLimalai where it rains incessantly! You have Your abode in VayalUr, Oh Lord!

cULikai uyarntha kOpura mALikai pon inji sUzhtharu SvAmi malai ninRu ulAviya perumALE.: This place SwAmimalai is surrounded by moonlit courtyards, tall temple towers and beautiful castle-walls; You are seated here, roaming about with relish, Oh Great One!


* Five heinous sins (crimes) are:

murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 202 Ananam ugandhu - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]