பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 33 ஏவல் கொண்டு (ஆட்கொண்டு) இந்திரலோகத்தாரின் மனத்தைக் கவர்ந்த வசீகர் சக்தி வாய்ந்தவனே! அழகு, அலங். காரத்துக்கு இருப்பிடமானவனே! ராஜத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவன்ே! கார் மேக (மழை) சொரிகின்ற (வள்ளி) மலை வேடர் மகளாம் வள்ளி அணைந்து விளையாடும் பன்னிரு தோள். களை உடைய கந்தனே! வயலூரில் வாழ்பவனே, நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும் மாளிகை. களும் அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும் சுவாமிமலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே! (ஆள்வதும் ஒருநாளே!) 209 நீங்குதற் கரிய மண்ணாசை என்கின்ற விலங்கும், மகா மாய அஞ்ஞான இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படி, ஆகர்ச் ப்ரம அறிவுச் சோதியான பராசக்தியை அடைந்து, நின்னப்பை விட்டு முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய், முற்பட்டதாய், என்றும் யோகிசர் எவரும் எட்டாததான ம்ேலான துரியநிலைக்கு மேற்பட்ட நிலையினதாய், நிஷ்கள. மாய் (உருவம் இல்லாததாய்), எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய் - வான்முதலான சகல விரிவுள்ள வாழ்வுப் பொருளாய், லோகத்தின் ஆதியாயும் முடிவாயும் நிற்பதாய் உண்மை அறிவாய், (தாமரை) மலரில் வீற்றிருக்கும் பிரமன், மால், ஈசன் என்பவர்க்கு மூல காரணமாய் நிற்கும் பெருமை கொண்டதாய், ஐயம் - அச்சம் இல்லாது நீடித்து இறத்தலின்றித் தானே மெய்யாந் தன்மை உற்றதாய், அரியதாய், சார் பொன்றும் இல்லாததாய், அழிவிலாத தாய் நிலையான சோதியாய், ரூபம் அற்றதாய், ஒப்பு (இலாததாய்) மாறுதல் இல்லாததான சுக வெள்ள நிலைப்பொருளாம் சிவத்துடன் இனி (நான்) என்றுசேர்வேன்! TT TT MCCC TTTS TT a aaT 00 T TTT S TTT T TT AAAAA