பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 31 உலவிவரும் உதய சூரியர்கள் நூறு கோடியருடைய உரு சேர்ந்தது போல ஒளி விடும் அழகையும் கூர்மையையுங் கொண்ட வேலை அங்கையில் ஏந்தியவனே! பன்னிரண்டு ய மலைகளையும் ஆறு திருமுகங்களையும் கொண்ட #äÌ: ! சிவ குமாரனே! வேடர் குலமானாம் (வள்ளி)யின் அன்பை உடையவனே ! தேவர்களின் அதிபதி (தலைவன்) ஆகிய இந்திரனும், திருமாலும், பிரமனும் காதலுடன் சலாம் செய்து வணங்குகின்ற பெருமாளே! சுவாமிமலையில் வாழும் பெருமாளே! (வா என்றருள்வாயே! பாதந் தருவாயே) 208. ( மாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து தோளோடு தோள்கள் சேரக் கலந்து, பால் (போன்றதும்), நிறை அமுதம், கற்கண்டு, தேன் என்னும் படியானதுமான வாய் இதழ் ஊறலை. அன்புடன் உண்டு, வேல் போலும் கண்கள் போர்புரிய, நன்று பார் என்னும் படியாக கொங்கை மார்பில் எங்கும் மோத அழகிய மான் போன் மாதர்களின் மடுப்போன்ற உந்தி (தொப்புள்) குழியில் விழுந்து, புழுப்போல மாயும் (இறந்துபடும்) இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய உனது. தாமரைப் பதங்களை அடிநாயேனாகிய (என்) தலையிற் சூட்டி, ஞானோபதேசஞ் செய்து என்னை ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ - (அப்படிப் பட்ட நாள் கிடைக்குமா) இழிவான மிக்க பஞ்சபாதகங்களையும் (கொலை, பொய், களவு, கள்ளுண், குருநிந்தை என்ற ஐவகைக் கொடுஞ் செயல்களையும்) செய்து வந்த அசுரர்களுடைய கொடிய சேனைகளின் வலிமை தொலைய வென்று, தேவர்களின் சிறந்த சேனையை (அல்லது தேவர் குலச் சேனையை).