திருப்புகழ் 200 வேய் இசைந்து  (பழநி)
Thiruppugazh 200 vEyisaindhu  (pazhani)
Thiruppugazh - 200 vEyisaindhu - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

......... பாடல் .........

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
     மாதர் கொங்கையி லேமு யங்கிட
          வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்

வீறு கொண்டுட னேவ ருந்தியு
     மேயு லைந்தவ மேதி ரிந்துள
          மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்

போய லைந்துழ லாகி நொந்துபின்
     வாடி நைந்தென தாவி வெம்பியெ
          பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்

போது கங்கையி னீர்சொ ரிந்திரு
     பாத பங்கய மேவ ணங்கியெ
          பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே

தீயி சைந்தெழ வேயி லங்கையில்
     ராவ ணன்சிர மேய ரிந்தவர்
          சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே

தேச மெங்கணு மேபு ரந்திடு
     சூர்ம டிந்திட வேலின் வென்றவ
          தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்

ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
     போத கந்தனை யேயு கந்தருள்
          ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய ... மூங்கிலுக்கு ஒத்ததாய்
எழுந்துள்ள தோள்களைக் கொண்ட

மாதர் கொங்கையிலே முயங்கிட ... விலைமாதர்களின்
மார்பகங்களைத் தழுவ வேண்டி,

வீணிலும் சில பாதகம் செய அவமே தான் ... வீணாக சில
பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல்

வீறு கொண்டு உடனே வருந்தியுமே ... செருக்கு அடைந்து மனம்
வருந்தியும்,

உலைந்து அவமே திரிந்து உள்ளமே கவன்று ... நிலை குலைந்து,
வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும்,

அறிவே கலங்கிட வெகு தூரம் போய் அலைந்து உழலாகி
நொந்து
... அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று
நொந்தும்,

பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே ... பின்னர் உடல்
வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும்,

பூதலம் தனிலே மயங்கிய மதி போக ... இப் பூமியில் ஆசை
மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும்,

போது கங்கையின் நீர் சொரிந்து ... மலரையும், கங்கை நீரையும்
நிரம்பப் பெய்து

இருபாத பங்கயமே வணங்கியே ... உனது இரண்டு தாமரைத்
திருவடிகளை வணங்கியே

பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே ... சில பூஜைகளையும்
செய்ய அருள் புரிவாயாக.

தீ இசைந்து எழவே இலங்கையில் ... நெருப்புப் பற்றி எழும்படி
இலங்கையில்

ராவணன் சிரமே அரிந்து அவர் சேனையும் செல மாள ...
இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள்
தொலைந்து அழியும்படியாக

வென்றவன் மருகோனே ... வென்ற இராமனின் மருகோனே,

தேசம் எங்கணுமே புரந்திடு ... எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த

சூர் மடிந்திட வேலின் வென்றவ ... சூரன் இறந்து போகும்படியாக
வேல் கொண்டு வென்றவனே,

தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே ... தேவர்கள்
தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே,

ஆயி சுந்தரி நீலி பிங்கலை ... அனைவருக்கும் தாய், அழகி, பச்சை
நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள்,

போக அந்தரி சூலி குண்டலி ... உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும்
ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி,

ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் ... ஆதி முதல்வி,
அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும்,

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ... ஆலகால விஷத்தை உண்ட
சிவபெருமான் வணங்கி வேண்ட,

ஓர் போதகம் தனையே உகந்து அருள் ... ஒப்பற்ற ஞான
உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே),

ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே. ... திருவாவினன்குடி
என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.262  pg 1.263  pg 1.264  pg 1.265 
 WIKI_urai Song number: 104 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 200 - vEy isaindhu (pazhani)

vEyi sainthezhu thOLkaL thangiya
     mAthar kongaiyi lEmu yangida
          veeNi luncila pAtha kanceya ...... avamEthAn

veeRu koNduda nEva runthiyu
     mEyu lainthava mEthi ainthuLa
          mEka vanRaRi vEka langida ...... vekuthUram

pOya lainthuzha lAki nonthupin
     vAdi nainthena thAvi vempiye
          pUtha lanthani lEma yangiya ...... mathipOka

pOthu kangaiyi neerso rinthiru
     pAtha pangaya mEva Nangiye
          pUsai yuncila vEpu rinthida ...... aruLvAyE

theeyi sainthezha vEyi langaiyil
     rAva Nansira mEya rinthavar
          sEnai yuncela mALa venRavan ...... marukOnE

thEsa mengaNu mEpu ranthidu
     cUrma dinthida vElin venRava
          thEvar thampathi yALa anpusey ...... thiduvOnE

Ayi sunthari neeli pingalai
     bOka anthari cUli kuNdali
          Athi yampikai vEtha thanthiri ...... yidamAkum

Ala muNdara nAri RainjavOr
     pOtha kan-thanai yEyu kan-tharuL
          Avi nankudi meethi langkiya ...... perumALE.

......... Meaning .........

vEy isainthu ezhu thOLkaL thangiya: Their shoulders rose nimbly like the bamboo shoot;

mAthar kongaiyilE muyangida: I hankered after the whores lusting to hug their bosoms.

veeNilum sila pAthakam seya avamE thAn: I committed many offences in vain.

veeRu koNdu udanE varunthiyumE: I was alternately arrogant and repentant.

ulainthu avamE thirinthu uLLamE kavanRu: I lost my balance, roamed about aimlessly and became mentally depressed.

aRivE kalangida veku thUram pOy alainthu uzhalAki nonthu: My thinking became deranged, and I went astray too far and felt miserable.

pin vAdi nainthu enathu Avi vempiyE: Then my physical health deteriorated, and the life in my degenerated body was near extinction.

pUthalam thanilE mayangiya mathi pOka: In order that my lust-filled mind takes leave of me on this earth,

pOthu gangaiyin neer sorinthu: I must offer flowers along with holy water from River Ganga

irupAtha pangayamE vaNangiyE: at Your two hallowed lotus feet in complete surrender

pUsaiyum silavE purinthida aruLvAyE: and perform many PUjas (Offerings) to You with Your Blessings!

thee isainthu ezhavE ilangaiyil: LankA was engulfed by fire,

rAvaNan siramE arinthu avar sEnaiyum sela mALa: Ravana's heads were all severed, and his entire armies were annihilated

venRavan marukOnE: by Rama (Lord Vishnu); You are His nephew!

thEsam engaNumE puranthidu sUr madinthida vElin venRava: Demon SUran who ruled the entire world was destroyed when You wielded the Spear!

thEvar tham pathi ALa anpu seythiduvOnE: Your compassion made it possible for the DEvAs to redeem and rule their celestial land!

Ayi sunthari neeli pingalai: She is the Mother of all; She is beautiful; She has a green and golden complexion;

bOka anthari cUli kuNdali: She is the Effulgence that gives bliss to all lives; She holds the Trident in Her hand; She is in the form of Energy and Pure delusion;

Athi yampikai vEtha thanthiri yidamAku: She is the primordial Goddess; She presides over all the VEdAs; She is PArvathi who occupies the left side of

Alam uNda aranAr iRainja: Lord SivA, the one who imbibed the poison that emerged from the milky ocean. Upon His entreaty,

Or pOthakam thanaiyE ukanthu aruL: You happily preached to Him the unique PraNava ManthrA, Oh Lord!

Avinankudi meethu ilangiya perumALE.: You have Your abode at Pazhani (ThiruAvinankudi), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 200 vEy isaindhu - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]