திருப்புகழ் 155 சிந்துர கூரம  (பழநி)
Thiruppugazh 155 sindhurakUrama  (pazhani)
Thiruppugazh - 155 sindhurakUrama - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தானன தத்தத் தந்தன
     தந்தன தானன தத்தத் தந்தன
          தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான

......... பாடல் .........

சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
     செங்கைகு லாவந டித்துத் தென்புற
          செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே

சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
     லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்
          செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர்

வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
     யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட
          மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி

மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
     முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
          மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே

இந்திர நீலவ னத்திற் செம்புவி
     யண்டக டாகம ளித்திட் டண்டர்க
          ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி

இன்கன தேரைந டத்திச் செங்குரு
     மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
          ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே

சந்திர சூரியர் திக்கெட் டும்புக
     ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
          சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா

சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
     கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
          தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிந்துர கூர மருப்புச் செம் சரி செம் கை குலாவ நடித்துத்
தென்புற செண்பக மாலை முடித்துப் பண்புள தெருவூடே
சிந்துகள் பாடி முழக்கி
... யானையின் கூரிய தந்தம் போன்ற
தனங்களும், செம்மையாக சரிந்துள்ள வளைகள் அணிந்துள்ள
சிவந்த கரங்களும் குலுங்குமாறு நடனமாடி, உற்சாகத்துடன்
செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் சிந்து
என்னும் இசைப்பா வகையில் பாடல்களைப் பாடி முழக்கமிட்டு,

செம் கயல் அம்புகள் போல விழித்துச் சிங்கியில் செம்
பவள ஆடை துலக்கிப் பொன் பறி விலை மாதர்
... செவ்விய
கயல் மீன் போன்ற கண்களை விழித்து சிங்கத்தின் இடை போன்ற
இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்து, பொருளைப்
பறிக்கின்ற பொது மகளிர்.

வந்தவர் ஆர் என அழைத்துக் கொங்கையை அன்புற மூடி
நெகிழ்த்திக் கண் பட மஞ்சள் நிர் ஆடி மினுக்கிப் பஞ்சு
அணை தனில் ஏறி மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட
...
வந்தவர்கள் யார் என விசாரித்து தனங்களை அன்புடன் மூடியும்,
(கச்சுக் கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள்
நீராடி மினுக்கியும், பஞ்சணை மீதில் ஏறி மந்திர சக்தி போல் விரைவில்
ஆசையை உண்டாக்கி (வந்தவரைக்) கெஞ்சும்படி வைத்து,

முன் தலை வாயில் அடைத்துச் சிங்கி கொள் மங்கையர்
ஆசை விலக்கிப் பொன் பதம் அருள்வாயே
... முன் புறத்தில்
உள்ள வாயிற் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட
மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய
திருவடியைத் தந்து அருளுக.

இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம்
அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக்
கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி
...
இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில்
(இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட
கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்)
காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி,
அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய*
அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும்,

செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு
தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே
... செம்மையான
குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர்
ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின்
அழகிய மருகனே,

சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தம் இல் வாழ்வு அது
பெற்றுத் தங்கிய சங்கரனார் செவி புக்கப் பண்பு அருள் குரு
நாதா
... சந்திரனும் சூரியனும், திக்குகள் எட்டு இவை யாவும் புகழும்
முடிவு இல்லா வாழ்வைப் பெற்று விளங்கும் சிவ பெருமானின்
திருச்செவியில் புகும்படி பிரணவத்தை உபதேசித்தருளிய குரு மூர்த்தியே,

சம்ப்ரமம் ஆன குறத்திக்கு இன்பு உறு கொங்கையின்
மேவு சமர்த்தச் சுந்தர தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய
பெருமாளே.
... சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம்
பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய
தமிழ் வழங்கும் பழனி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே.


* பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன்
ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.428  pg 1.429  pg 1.430  pg 1.431 
 WIKI_urai Song number: 178 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 155 - sindhura kUrama (pazhani)

sinthura kUrama ruppuc chenjari
     sengaiku lAvana diththuth thenpuRa
          seNpaka mAlaimu diththup paNpuLa ...... theruvUdE

sinthukaL pAdimu zhakkic chengaya
     lampukaL pOlavi zhiththuc chingiyil
          sempava LAdaithu lakkip ponpaRi ...... vilaimAthar

vanthava rArena zhaiththuk kongaiyai
     yanpuRa mUdine kizhththik kaNpada
          manjaNi rAdimi nukkip panjaNai ...... thanilERi

manthira mOkame zhuppik kenjida
     munRalai vAyila daiththuc chingikoL
          mangaiya rAsaivi lakkip ponpatha ...... maruLvAyE

inthira neelava naththiR chempuvi
     yaNdaka dAkama Liththit taNdarka
          LeNpadu cUraiya zhiththuk koNdaru ...... LorupEdi

inkana thEraina daththic chenguru
     maNdala nAduma Liththup panjava
          rinpuRu thOzhmaiyu daikkath thanthiru ...... marukOnE

santhira cUriyar thikket tumpuka
     zhanthamil vAzhvathu petRuth thangiya
          sangara nArsevi pukkap paNparuL ...... gurunAthA

samprama mAnaku Raththik kinpuRu
     kongaiyin mEvusa marththac chunthara
          thaNdamizh sErpazha nikkut tangiya ...... perumALE.

......... Meaning .........

sinthura kUra maruppuc chem sari sem kai kulAva nadiththuth thenpuRa seNpaka mAlai mudiththup paNpuLa theruvUdE sinthukaL pAdi muzhakki: They danced so vigorously that their breasts, sharp as the ivory tusk of the elephant, shook and their arms, on which neat rows of bangles glided, quivered; enthusiastically tying sheNbaga (champak) garlands to their hair, these whores walk along the beautiful streets, loudly singing songs of the chinthu variety;

sem kayal ampukaL pOla vizhiththuc chingiyil sem pavaLa Adai thulakkip pon paRi vilai mAthar: these whores roll their red eyes that look like kayal fish and wrap around their lion-like waist red attire of the colour of coral; they are out to grab the belongings (of the suitors);

vanthavar Ar ena azhaiththuk kongaiyai anpuRa mUdi nekizhththik kaN pada manjaL nir Adi minukkip panju aNai thanil ERi manthira mOkam ezhuppik kenjida: they inquire as to who has come (as the suitor) and alternately cover their bosom with glee and expose it by loosening the knot of their blouse; they drench their clothes with turmeric water conspicuously, climb the cotton mattress and cast a magic spell instantly on the suitors driving them to the point of beseeching;

mun thalai vAyil adaiththuc chingi koL mangaiyar Asai vilakkip pon patham aruLvAyE: they lock the front door and expose themselves shamelessly; kindly remove my obsession for these women by granting me Your glorious and hallowed feet, Oh Lord!

inthira neela vanaththil sem puvi aNda kadAkam aLiththittu aNdarkaL eNpadu cUrai azhiththuk koNdu aruL oru pEdi inkana thErai nadaththi: The demons in the dark KANdava forest under the guard of Indra were all burnt down; all people living in this great earth and other planets were protected from the harassment of the demons; the considerably immense distress of the celestials was removed and their land was redeemed for them graciously; He drove as the charioteer the beautiful chariot of ArjunA, who was previously in the disguise of an eunuch*;

sem kuru maNdala nAdum aLiththup panjavar inpuRu thOzhmai udaik kaththan thiru marukOnE: the fertile land of Kuru was restored to the five PANdavAs; and He enjoyed the status of the friendly leader of those PANdavAs; and You, Lord MurugA, are the handsome nephew of that Lord VishNu!

santhira cUriyar thikku ettum pukazh antham il vAzhvu athu petRuth thangiya sangaranAr sevi pukkap paNpu aruL gurunAthA: He is lauded by the Sun, the Moon and the eight cardinal directions; He shines with an immortal life; and into the hallowed ears of that Lord SivA You graciously preached the PraNava ManthrA, Oh Great Master!

sampramam Ana kuRaththikku inpu uRu kongaiyin mEvu samarththac chunthara thaN thamizh sEr pazhanikkuL thangiya perumALE.: She is the damsel of the KuRavAs with all virtues; seeking the blissful bosom of that VaLLi, You cleverly enticed her, Oh Handsome One! In this Mount Pazhani, that offers plenty of cool Tamil literature, You are seated with relish, Oh Great One!


* During the exile into the forest by the PANdavAs, Arjunan took the disguise of an eunuch in the very last year.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 155 sindhura kUrama - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]