பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 413 பழத்தை ஒத்தவளும், இமயமலையில் தோன்றியவளுமான (மலையரசன் புத்திரியாய் வந்த) பழைய நிர்மலியாகிய பார்வதி பெற்ற பழநிமலை முருகனே! விசாகனே! பரந்துள்ள கடலின்மீது பாண ப்ரயோகஞ் செய்து அடக்கிய கடல் வர்ணத்தையுடைய திருமால் போற்றிப் பரவும் தேவர் பெருமாளே! (உள்ளம் விதனம் உறலாமோ) 178 யானையின் கூரிய தந்தம் (போன்ற கொங்கைகளும்) செவ்விய சரி (வளைகள்) உள்ள அழகிய கைகளும் விளங்க நடித்து,உற்சாகத்துடன் செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் - சிந்து என்னும் இசைப்பா வகையிற் பாடல்கள் பாடி முழக்கம் செய்து, செவ்விய கயல்மீனும் அம்புபோலக் கண்களை விழித்து, இடையிற் சிவந்த பவளம்போன்ற ஆடையை விளக்கமுறப் புனைந்து, பொன்னைப் பறிக்கின்ற விலை மாதர்கள் - வந்தவர்கள் ஆர் என (விசாரித்து) அழைத்துத் தங்கள் கொங்கைகளை அன்புடன் மூடியும், (கச்சுக்கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள் நீராடி மினுக்கியும், பஞ்சு மெத்தை மீதிலேறி - மந்திரம் போட்டதுபோல மோகத்தைக் கிளப்பிக், கெஞ்சும் படி வைத்து, முன்புறத்தில் உள்ள வாயிற் கதவை மூடி, நாணமின்மை கொண்ட (அல்லது கூத்தாடுதலைக் கொண்ட) மங்கையர்மீது எனக்கு உள்ள ஆசையை விலக்கி (உனது அழகிய திருவடியை அருள்வாயாக