திருப்புகழ் 134 கருவின் உருவாகி  (பழநி)
Thiruppugazh 134 karuvinuruvAgi  (pazhani)
Thiruppugazh - 134 karuvinuruvAgi - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே

கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருவினுரு வாகி வந்து ... கருவிலே ஓர் ஊருவாகி வந்து பிறந்து,

வயதளவிலே வளர்ந்து ... வயதுக்கு ஒத்தபடி வளர்ந்து,

கலைகள்பல வேதெ ரிந்து ... பல கலைகள் கற்றறிந்து,

மதனாலே ... மன்மதனுடைய சேட்டையினால்,

கரியகுழல் மாதர் தங்கள் ... கருங் கூந்தலையுடைய பெண்களின்

அடிசுவடு மார்பு தைந்து ... பாதச்சுவடு என் மார்பில் புதையும்படி
அழுந்தி,

கவலைபெரி தாகி நொந்து ... கவலைகள் பெரிதாகி மனம் நொந்து,

மிகவாடி ... மிகவும் வாட்டம் அடைந்து,

அரஹரசி வாய வென்று ... ஹர ஹர சிவாய என்று

தினமும்நினை யாமல் நின்று ... நாள்தோறும் நினையாது நின்று,

அறுசமய நீதி ஒன்றும் ... (செளரம், காணாபத்யம், கெளமாரம், சைவம்,
வைஷ்ணவம், சாக்தம் என்று) ஆறு சமயங்களின் உண்மை ஒன்றுகூட

அறியாமல் ... அறியாதவனாய்,

அசனமிடு வார்கள் தங்கள் ... உணவு தருவோர்கள் தம்முடைய

மனைகள்தலை வாசல் நின்று ... வீடுகளின் முன் வாசலில் நின்று,

அநுதினமு நாணம் இன்றி ... தினந்தோறும் வெட்கத்தை விட்டு

அழிவேனோ ... அழிந்து போவேனோ?

உரகபட மேல் வளர்ந்த ... பாம்பின் படத்தின்மேல் கண்வளர்ந்த
(ஆதிசேஷன் மீது துயின்ற)

பெரியபெரு மாள் அரங்கர் ... பெருமை மிக்க பெருமாள்,
ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்,

உலகளவு மால் ... உலகை அளந்த திருமால்

மகிழ்ந்த மருகோனே ... மகிழ்ச்சி கொள்ளும் மருமகனே

உபயகுல ... (தாய், தந்தை என்ற) இரண்டு வம்சாவளியிலும்

தீப துங்க ... பிரகாசமாகவும் பரிசுத்தமாகவும் விளங்குபவனே

விருதுகவி ராஜ சிங்க ... வெற்றிக் கவிராஜ சிங்கமாக (சம்பந்த
மூர்த்தியாக)

உறைபுகலி யூரில் ... சொந்த ஊரான புகலியூர் (சீகாழி) பதியில்

அன்று வருவோனே ... அன்று வந்து தோன்றியவனே

பரவை மனை மீதி லன்று ... பரவை நாச்சியார் வீட்டுக்கு
(சுந்தரருக்காக) அன்று

ஒருபொழுது தூது சென்ற ... ஒரு காலத்தில் தூது நடந்த

பரமனருளால் ... பரம சிவனுடைய அருளால்

வளர்ந்த குமரேசா ... வளர்ந்த குமரேசப் பெருமானே

பகை அசுரர் சேனை கொன்று ... பகையாய் நின்ற அசுரர்
சேனைகளை மடிவித்து,

அமரர்சிறை மீள வென்று ... தேவர்களை சிறையினின்றும்
மீளும்படி வென்று,

பழனிமலை மீதில் நின்ற பெருமாளே. ... பழநிமலை மீதில்
நின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.342  pg 1.343  pg 1.344  pg 1.345 
 WIKI_urai Song number: 140 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 134 - karuvin uruvAgi (pazhani)

karuvinuru vAgi vandhu vayadhaLavi lEva Larndhu
     kalaigaLpala vEthe rindhu ...... madhanAlE

kariyakuzhal mAdhar thangaL adisuvadu mArbu dhaindhu
     kavalaiperi dhAgi nondhu ...... migavAdi

araharasi vAya vendRu dhinamumninai yAmal nindRu
     aRusamaya needhi ondRum ...... aRiyAmal

achanamidu vArgaL thangaL manaigaLthalai vAsal nindRu
     anudhinamu nANam indRi ...... azhivEnO

uragapada mElva Larndha periyaperu mALa rangar
     ulagaLavu mAlma gizhndha ...... marugOnE

ubayakula dheepa thunga virudhukavi rAja singa
     uRaipugali yUri landRu ...... varuvOnE

paravai manai meedhi landRu orupozhudhu dhUdhu sendRa
     paramanaru LAlva Larndha ...... kumarEsA

pagaiasurar sEnai kondRu amararsiRai meeLa vendRu
     pazhanimalai meedhil nindRa ...... perumALE.

......... Meaning .........

karuvinuru vAgi vandhu: I took a form in my mother's womb

vayadhaLavi lEva Larndhu: and grew up with age through various stages;

kalaigaLpala vEthe rindhu: I learnt a number of arts (including)

madhanAlE: the art of Love God (Manmathan).

kariyakuzhal mAdhar thangaL: Women with black locks of hair,

adisuvadu mArbu dhaindhu: I fell for them with my bosom under their feet.

kavalaiperi dhAgi nondhu: My worries multiplied, and

migavAdi: I was distressed.

araharasi vAya vendRu: The famous SivaManthrA, Hara Hara SivAya,

dhinamumninai yAmal nindRu: was never uttered by me even on a single day.

aRusamaya needhi ondRum: Not even one tenet of the six Sub-religions (namely, Sauram, GANApathyam, KaumAram, Saivam, Vaishnavam and ShAktham)

aRiyAmal: was known to me.

achanamidu vArgaL thangaL manaigaLthalai vAsal nindRu: (Do I have to wait) at the doors of those who would give me food

anudhinamu nANam indRi azhivEnO: every day, without shame, and degenerate?

uragapada mEl vaLarndha periyaperu mAL: The Great Vishnu, who slumbers on the Serpent-bed (AdhisEshan),

arangar ulagaLavu mAl: He is also Ranganathan (in Srirangam) and He measured the whole world with one foot (in VAmana avathAram),

magizhndha marugOnE: You are His favourite nephew!

ubayakula: On both sides of Your lineage (Mother's and Father's side)

dheepa thunga: You are bright and pure!

virudhukavi rAja singa: As the Great Poet like a Royal Lion (ThirugnAna Sambandhar)

uRaipugali yUril andRu varuvOnE: You were born once in PugaliyUr (also known as SeegAzhi)!

paravai manai meedhil andRu: Once, (for the sake of Sundarar) SivA went to the house of Paravai (Sundarar's Lover)

orupozhudhu dhUdhu sendRa: as a personal messenger;

paramanaru LAlva Larndha: by the Grace of that SivA, You prospered,

kumarEsA: Oh Kumaresa!

pagai asurar sEnai kondRu: You destroyed the armies of all the hostile demons (asuras) and

amararsiRai meeLa vendRu: liberated the DEvAs from prison,

pazhanimalai meedhil nindRa: and stood on top of the Mount Pazhani,

perumALE.: Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 134 karuvin uruvAgi - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]