பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 327 மலம், கலம், மூச்சு (முதலிய) சஞ்சலங்களால் எனது - புத்தி நிலை கெடாதவாறு உனது திரு அருளைத் தந்தருளுக கங்கை நீர், அறுகம்புல், பூளை என்கிற செடிப் பூ, தும்பை இவைகளை அணியும் சிவபிரானின் குமாரனே! சரவண பவனே! திருமால் மருகனே! பல கலைகளாலும், சிவாகமங்களாலும் போற்றப் படுபவனே! பழநிமலையில் வாழ வந்து (வீற்றிருக்கும்) பெருமாளே. (மதி நிலை கெடாமல் உன்றன் அருள் தாராய்) 140 கருவில் உருவாகி வந்து தோன்றி, வயதுக்கு ஒத்தபடி வளர்ந் அது, கலைகள் பலவும் அறிந்து மன்மதனது சேட்டையால் கறுத்த கூந்தலை உடைய பெண்களின் அடிச் சுவடு மார்பில் புதைய அழுந்தி, கவலைகள் அதிகமாகி நொந்து மிகவும் வாடி - "ஹர ஹர சிவாய" என நாள்தோறும் நினையாது நின்று ஆறு சமயங்களின் உண்மை ஒன்றும் அறியாதவனாய் - உணவு தருவோரது மனைகளின் முன் வாயிலில் நின்று நாள்தோறும் வெட்கமின்றி அழிந்து போவேனோ, பாம்பின் படத்தின்மேல் (கண் வளரும்) துயிலும் பெருமை வாய்ந்த பெருமாள், சீரங்கத்தில் இருப்பவர், உலகை அளந்தவர் ஆகிய திருமால் மகிழும் மருகனே! (தாய், தந்தை எனும்) இரண்டு குலத்து வழியிலும் விளக்க முற்ற பரிசுத்தனே! வெற்றிக் கவிராஜ சிங்கமே!உறை விடமாகச் சீகாழியில் அன்று (சம்பந்த மூர்த்தியாக) வந்து தோன்றியவனே!