திருப்புகழ் 63 தந்த பசிதனை  (திருச்செந்தூர்)
Thiruppugazh 63 thandhapasidhanai  (thiruchchendhUr)
Thiruppugazh - 63 thandhapasidhanai - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா

......... பாடல் .........

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து ... ஏற்பட்ட பசியை
அறிந்து, முலைப்பால் தந்து,

முதுகு தடவிய தாயார் ... முதுகைத் தடவிவிட்ட தாயார்,

தம்பி பணிவிடைசெய் தொண்டர் ... தம்பி, ஏவல் செய்து வந்த
வேலைக்காரர்கள்,

பிரியமுள தங்கை மருகர் உயிரெனவே சார் ... அன்புமிக்க
தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த

மைந்தர் மனைவியர்கடும்பு கடனுதவும் ... பிள்ளைகள்,
மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய

அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து ... அந்த உறவு
முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து

தலைநவிர் அவிழ்ந்து தரைபுக மயங்க ... தலைமயிர் அவிழ்ந்து
தரையில் விழவும், மயங்கவும்,

ஒருமகிட மிசையேறி ... ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி

அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில் ... யமனும் என்னை
நெருங்கி வரும்போது,

அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ ... அஞ்சாதே என்று
கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ

அந்த மறலியொடு உகந்த மனிதன் ... அந்த யமனிடம் இவன்
நமக்கு மிகவும் வேண்டிய மனிதன்,

நமதன்பன் எனமொழிய வருவாயே ... நம்முடைய அன்பன்
என்று சொல்லவந்து அருள்வாயாக.

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் ... சிந்தை
மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும்

சிந்து பயமயிலும் அயில்வீரா ... பீறிட்ட பால் அமுதை உண்ட
வேலாயுதக் கடவுளே,

திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள் ... நிலவும், பாம்பும்,
கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய
சிவபெருமான் அருளியவனே,

செந்தி னகரிலுறை பெருமாளே. ... திருச்செந்தூர் நகரில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.182  pg 1.183 
 WIKI_urai Song number: 70 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 63 - thandha pasidhanai (thiruchchendhUr)

thandha pasidhanaia Rindhu mulaiamudhu
     thandhu mudhuguthada ...... viyathAyAr

thambi paNividaisey thoNdar piriyamuLa
     thangai marugaruyir ...... enavEsAr

maindhar manaiviyarka dumbu kadanudhavum
     andha varisaimozhi ...... pagarkEdA

vandhu thalainavira vizhndhu tharaipugama
     yanga orumagida ...... misaiyERi

antha kanumenaia darndhu varugaiyinil
     anja lenavaliya ...... mayilmElnee

antha maRaliyodu gandha manidhanama
     dhanba nenamozhiya ...... varuvAyE

chindhai magizhamalai mangai nagiliNaigaL
     sindhu payamayilum ...... ayilveerA

thingaL aravunadhi thundRu sadilararuL
     sendhi nagariluRai ...... perumALE.

......... Meaning .........

thandha pasidhanai aRindhu mulai amudhu thandhu: She knew when I would be hungry and breast-fed me with nectar-like milk;

mudhugu thada viya thAyAr: she then caressed my back - she is my mother!

thambi paNividai sey thoNdar piriyam uLa thangai marugar: My younger brother, obedient servants, dear younger sister, nephews,

uyir enavEsAr maindhar manaiviyar kadumbu: my sons who love me as if I am their life, my wives and other relatives -

kadan udhavum andha varisai mozhi pagar: all of them carry out their duties calling me according to their relationship.

kEdA vandhu thalai navir avizhndhu tharaipuga mayanga: They assemble in agony, their hair falling on the floor in disarray, some of them swooning,

oru magida misaiyERi anthakanum enai adarndhu varugaiyinil: when the blind God of Death, Yaman, mounting a buffalo, closes in on me.

anjalena valiya mayilmEl nee: At that time, ascending on Your strong peacock and announcing "Fear Not", You must declare

antha maRaliyod ugandha manidhanama dhanbanena: to that Yaman "This man is my favourite and he is my devotee";

mozhiya varuvAyE: You must come to me with these words!

chindhai magizha malai mangai nagil iNaigaL: She was exhilarated when PArvathi, daughter of HimavAn, breast-fed You,

sindhu payam ayilum ayil veerA: and You drank that nectar-like milk gushing from Her, Oh Warrior-God with the Spear!

thingaL aravu nadhi thundru sadilar aruL: He wears the crescent moon, the snake and the river Ganga, compactly packed in His tresses; that SivA delivered You to us!

sendhi nagaril uRai perumALE.: You reside happily in ThiruchchendhUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 63 thandha pasidhanai - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]