திருப்புகழ் 1320 அழகு தவழ்குழல்  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1320 azhaguthavazhkuzhal  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1320 azhaguthavazhkuzhal - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனத்தத் தாத்த
     தனன தனதன தனத்தத் தாத்த
          தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான

......... பாடல் .........

அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
     விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி
          அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக

அவச இதமொழி படித்துக் காட்டி
     அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
          அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம்

ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி
     எழுத வரியிடை வளைத்துக் காட்டி
          உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி

உருகு கடிதட மொளித்துக் காட்டி
     உபய பரிபுர பதத்தைக் காட்டி
          உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ

முழுகு மருமறை முகத்துப் பாட்டி
     கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
          முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா

முடுகு முதலையை வரித்துக் கோட்டி
     அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
          முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர்

பழைய கடதட முகத்துக் கோட்டு
     வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
          பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர்

பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
     குமர குலமலை யுயர்த்திக் காட்டு
          பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அழகு தவழ் குழல் விரித்துக் காட்டி விழிகள் கடையிணை
புரட்டிக் காட்டி
... அழகு விளங்கும் கூந்தலை விரித்துக் காட்டியும்,
கண்களின் கடைப் புறம் இரண்டையும் சுழற்றிக் காட்டியும்,

அணி பொன் அணி குழை புரித்துக் காட்டி அநுராக அவச
இத மொழி படித்துக் காட்டி
... அழகிய பொன்னாலாகிய
ஆபரணங்களையும் குண்டலங்களையும் விளக்கமுறக் காட்டியும்,
காமத்தை விளக்க வல்லதும் தன் வசம் இழக்கச் செய்வதுமான இனிய
பேச்சுக்களை பேசிக் காட்டியும்,

அதரம் அழி துவர் வெளுப்பைக் காட்டி அமர் செய் நக நுதி
அழுத்தைக் காட்டி அணி ஆரம் ஒழுகும் இரு தனம்
அசைத்துக் காட்டி
... வாயிதழின் செம்மை இழந்த பவளம் போன்ற
வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகக் குறி இட்டு அழுத்தினதைக்
காட்டியும், அழகிய முத்து வடம் தொங்கும் இரண்டு மார்பகங்களை
அசைத்துக் காட்டியும்,

எழுத அரி இடை வளைத்துக் காட்டி உலவும் உடை தனை
நெகிழ்த்திக் காட்டி உறவாடி உருகு கடி தடம் ஒளித்துக்
காட்டி
... எழுதுவதற்கு அரிய இடுப்பை வளைத்துக் காட்டியும்,
அணிந்து உலவி வரும் புடவையை தளர்த்திக் காட்டியும், நட்புப்
பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், உள்ளத்தை உருக வைக்கும்
பெண்குறி இடத்தை மறைப்பது போல் காட்டியும்,

உபய பரிபுர பதத்தைக் காட்டி உயிரை விலை கொளும்
அவர்க்குத் தேட்டம் ஒழிவேனோ
... இரண்டு சிலம்பு அணியும்
பாதங்களைக் காட்டியும், உயிரையே விலைக்குக் கொள்பவராகிய அந்த
விலைமாதர்கள் மேலுள்ள விருப்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ?

முழுகும்அரு மறை முகத்துப் பாட்டி கொழுநர் குடுமியை
அறுத்துப் போட்ட முதல்வ குகை படு திருப் பொன் கோட்டு
முனி
... அரிய வேதங்களில் வல்லவளான பெரியவளின் (சரஸ்வதி -
வேத முதல்வி) கணவராகிய பிரமனின் குடுமியை அறுத்துப் போட்ட
முதல்வனே, குகைகள் அமைந்த பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை
அழியும்படி கோபித்தவனே,

நாடா முடுகு முதலையை வரித்துக் கோட்டி அடியர் தொழ
மகவு அழைத்துக் கூட்டி முறை செய் தமிழினை விரித்துக்
கேட்ட முது நீதர்
... இறைவன் திருவருளை நாடி, விரைந்து வரும்படி
முதலையை வரவழைத்து, சூழ்ந்த அடியார்கள் துதிக்க, பிள்ளையை
பெற்றோர்களிடம் சேர்ப்பிக்க (பிள்ளையை உயிரோடு தா என்று) முறை
இட்ட சுந்தரர் பாடிய தமிழ்த் தேவாரத்தை* அன்பு பெருக்குடன் கேட்ட
பழைய நீதிமான்,

பழைய கட தட முகத்துக் கோட்டு வழுவை உரி அணி மறைச்
சொல் கூட்டு பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர்
பணிய அருள் சிவமயத்தைக் காட்டு குமர
... பழைய மதம் பாயும்
இடமாகிய முகத்தையும், தந்தத்தையும் உடைய யானையின் தோலை
உரித்து அணிந்தவர், வேத மொழிகளைக் கூறும் பரம்பொருள்,
கங்கையைச் சடையில் சூடியுள்ள சிவபெருமான் உன்னைப் பணிய
அவருக்குச் சிவ மயத்தை (பிரணவப் பொருளை) உபதேசித்த குமரனே,

குலமலை உயர்த்திக் காட்டு பரிவொடு அணி மயில் நடத்திக்
காட்டு பெருமாளே.
... பழமுதிர்ச்சோலை மலையில் சிறப்புற்று
விளங்கும், அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டும் பெருமாளே.


* திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை
உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,
வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி,
முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு
உமிழ்ந்தது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1107  pg 1.1108  pg 1.1109  pg 1.1110  pg 1.1111  pg 1.1112 
 WIKI_urai Song number: 446 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1320 - azhagu thavazhkuzhal (pazhamuthirchOlai)

azhaku thavazhkuzhal viriththuk kAtti
     vizhikaL kadaiyiNai purattik kAtti
          aNipo naNikuzhai puriththuk kAtti ...... yanurAka

avasa ithamozhi padiththuk kAtti
     athara mazhithuvar veLuppaik kAtti
          amarsey nakanuthi yazhuththaik kAtti ...... yaNiyAram

ozhuku miruthana masaiththuk kAtti
     ezhutha variyidai vaLaiththuk kAtti
          ulavu mudaithanai nekizhththik kAtti ...... yuRavAdi

uruku kadithada moLiththuk kAtti
     upaya paripura pathaththaik kAtti
          uyirai vilaikoLu mavarkkuth thEtta ...... mozhivEnO

muzhuku marumaRai mukaththup pAtti
     kozhunar kudumiyai yaRuththup pOtta
          muthalva kukaipadu thiruppoR kOttu ...... muninAdA

muduku muthalaiyai variththuk kOtti
     adiyar thozhamaka vazhaiththuk kUtti
          muRaisey thamizhinai viriththuk kEtta ...... muthuneethar

pazhaiya kadathada mukaththuk kOttu
     vazhuvai yuriyaNi maRaicchoR kUttu
          paramar pakirathi sadaikkut cUttu ...... paramEsar

paNiya aruLsiva mayaththaik kAttu
     kumara kulamalai yuyarththik kAttu
          parivo daNimayil nadaththik kAttu ...... perumALE.

......... Meaning .........

azhaku thavazh kuzhal viriththuk kAtti vizhikaL kadaiyiNai purattik kAtti: Spreading out their beautiful hair wide open, rolling the edges of their two eyes,

aNi pon aNi kuzhai puriththuk kAtti anurAka avasa itha mozhi padiththuk kAtti: showing off their exquisite golden jewels and swinging ear-studs explicitly, demonstrating their sweet speech that could ignite passion driving their suitors out of control,

atharam azhi thuvar veLuppaik kAtti amar sey naka nuthi azhuththaik kAtti aNi Aram ozhukum iru thanam asaiththuk kAtti: showing their whitened coral-hued lips which have lost their redness, revealing the deep nail-marks on their body sustained during the war of love-making, shaking their two breasts over which pretty strings of pearls hang,

ezhutha ari idai vaLaiththuk kAtti ulavum udai thanai nekizhththik kAtti uRavAdi uruku kadi thadam oLiththuk kAtti: bending their indiscernible slender waist, loosening the sari which they normally wear when they go around, pretending to conceal their mind-boggling private part, but discreetly revealing it,

upaya paripura pathaththaik kAtti uyirai vilai koLum avarkkuth thEttam ozhivEnO: and exhibiting their two lovely feet wearing anklets, these whores literally grab my life at a bargained price; will I ever get rid of my lust for them, Oh Lord?

muzhukumaru maRai mukaththup pAtti kozhunar kudumiyai aRuththup pOtta muthalva kukai padu thiruppon kOttu muni: She is an expert in the rare VEdAs; She is the great Goddess Saraswathi; You cut off the tuft of Her spouse, Brahma, Oh Primal One! Your rage was so severe that the golden Mount Krouncha, with all its caves, was destroyed, Oh Lord!

nAdA muduku muthalaiyai variththuk kOtti adiyar thozha makavu azhaiththuk kUtti muRai sey thamizhinai viriththuk kEtta muthu neethar: He is the old Dispenser of Justice who ardently listened to the great hymn in Tamil sung by Sundarar, in the presence of devotees who prayed ecstatically, when he invoked the Divine grace and pleaded with the crocodile to come out fast and spit out the boy (whom it had swallowed a year back) alive in front of his parents*;

pazhaiya kada thada mukaththuk kOttu vazhuvai uri aNi maRaic chol kUttu paramar pakirathi sadaikkuL cUttu paramEsar paNiya aruL sivamayaththaik kAttu kumara: To wear as a robe, He peeled off the skin of a wild elephant which had two ivory tusks and a jaw from which the old bilious juice was oozing; He is the Supreme Principle who recites the VEdAs; He is Lord SivA who is wearing River Gangai on His matted hair; when He prostrated at Your fePraNava ManthrA to Him the Principle of SivA (PraNava ManthrA), Oh Lord KumarA!

kulamalai uyarththik kAttu parivodu aNi mayil nadaththik kAttu perumALE.: On top of this famous mountain in PazhamuthircOlai, You fondly make Your beautiful peacock tread around, Oh Great One!


* Once, a little boy went to take a dip in a lake at ThiruppukkoLiyur and was eaten alive by a crocodile. After a year, SundharamUrthy NAyanAr, one of the Four Great Saivites, came to the barren lake and heard about the death of the boy. He sang AvinAsi Pathikam whereupon the lake was filled with water. The crocodile came to the bank of the lake and spat the boy alive, with one year's growth in the body too!.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1320 azhagu thavazhkuzhal - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]