திருப்புகழ் 1311 வீர மதன் நூல்  (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh 1311 veeramadhannUl  (pazhamudhirchOlai)
Thiruppugazh - 1311 veeramadhannUl - pazhamudhirchOlaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
     வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே

வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல்
     வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப்

பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
     பாதகனு மாகி நின்று ...... பதையாமல்

பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
     பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ

பூரணம தான திங்கள் சூடுமர னாரி டங்கொள்
     பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே

பூவுலகெ லாம டங்க வோரடியி னால ளந்த
     பூவைவடி வானு கந்த ...... மருகோனே

சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து
     தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா

சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
     சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல்
விழியினால் மயங்கி
... வீரம் வாய்ந்த மன்மதனுடைய காம சாஸ்திர
நூலில் சொல்லப்பட்ட போகத்தைத் தரும் அழகிய மாதர்களுடைய வேல்
போன்ற கூரிய கண்களால் மயக்கம் அடைந்து,

புவி மீதே வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம்
சொல் வேலை செய்து
... இப்பூமியின் மேல் அன்பான பேச்சுக்களைப்
பேசும் அப் பொது மகளிர் வாயினின்றும் பிறக்கும் இன்பச் சொற்களுக்கு
இணங்கி அவர்கள் இட்ட வேலைகளை கைகளை வீசிச் செய்து,

மால் மிகுந்து விரகாகிப் பார வசமான அங்கண் நீடு
பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல்
...
அவர்கள் மேல் மையல் மிகுந்து மோகாவேசனனாகி அங்கு மிக்கிருந்த
பொருள் யாவும் செலவழித்த பின்னர் பாதகனாய் நின்று தவிக்காமல்,

பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர்
நாடி என்று பணிவேனோ
... மனப் பக்குவ நிலை வருவதற்கு,
கடப்ப மலர் சூடியுள்ளதும், தண்டை அணிந்ததுமான திருவடி மலரை
மிக்க அன்பினால் விரும்பித் தேடி என்றைக்கு உன்னைப் பணிவேனா?

பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள்
பூவை அருளால் வளர்ந்த முருகோனே
... என்றும் முழுமையாக
இருக்கும் சந்திரனை சடையில் அணிந்துள்ள சிவபெருமானின் இடது
பாகத்தைக் கொண்ட பார்வதியின் திருவருளால் வளர்ந்த குழந்தை
முருகனே,

பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை
வடிவான் உகந்த மருகோனே
... மண்ணுலகம் எல்லாம் முழுமையாக
ஓரடியால் அளந்த காயாம்பூ வண்ணனாகிய திருமால் மகிழும் மருகனே,

சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட
நீறு கண்ட வடிவேலா
... சூரர்கள் கூட்டங்களை அழித்து
அவர்களுடைய கனத்த முடிகளை வெட்டிப் பொடியாகும்படி சாம்பலாகக்
கண்ட கூரிய வேலனே,

சோலை தனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலை
மலை மேல் அமர்ந்த பெருமாளே.
... சோலையில் பறந்து
உலாவுகின்ற மயிலின் மேல் ஏறி வந்து பழமுதிர்ச்சோலை மலை மேல்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1081  pg 1.1082 
 WIKI_urai Song number: 437 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1311 - veera madhan nUl (pazhamuthirchOlai)

veeramatha nUlvi Lampu pOkamada mAthar thangaL
     vElvizhiyi nAnma yangi ...... puvimeethE

veesukaiyi nAli thangaL pEsumavar vAyi thanjcol
     vElaiseythu mAlmi kunthu ...... virakAkip

pAravasa mAna vanga NeeduporuL pOna pinpu
     pAthakanu mAki ninRu ...... pathaiyAmal

pAkamvara sEra anpu neepamalar cUdu thaNdai
     pAthamalar nAdi yenRu ...... paNivEnO

pUraNama thAna thingaL cUdumara nAri dangoL
     pUvaiyaru LAlva Larntha ...... murukOnE

pUvulake lAma danga vOradiyi nAla Lantha
     pUvaivadi vAnu kantha ...... marukOnE

cUrarkiLai yEtha dinthu pAramudi yEya rinthu
     thULkaLpada neeRu kaNda ...... vadivElA

sOlaithani lEpa Ranthu lAvumayi lERi vanthu
     sOlaimalai mEla marntha ...... perumALE.

......... Meaning .........

veera mathan nUl viLampum pOka mada mAthar thangaL vEl vizhiyinAl mayangi: These whores are capable of giving pleasure as defined in the text book on love-making written by the mighty God of Love, Manmathan; being enchanted by their sharp spear-like eyes,

puvi meethE veesukaiyinAl ithangaL pEsum avar vAy itham sol vElai seythu: I have been running errands for them in this world, freely swinging my hands and doing their bidding, yielding to the sweet words uttered by their mouth;

mAl mikunthu virakAkip pAra vasamAna angaN needu poruL pOna pinpu pAthakanumAki ninRu pathaiyAmal: being obsessed with them due to uncontrollable passion and having showered on them whatever wealth that was left with me, I do not wish to stand there languishing like a sinner;

pAkam vara sEra anpu neepa malar sUdu thaNdai pAtha malar nAdi enRu paNivEnO: in order that my mind attains maturity, I need to seek with profound love Your lotus feet adorned with the kadappa flowers and the anklets; when will I be able to prostrate at those hallowed feet?

pUraNam athAna thingaL sUdum aranAr idam koL pUvai aruLAl vaLarntha murukOnE: He wears on His matted hair the crescent moon that shines perfectly; on the left side of the body of that Lord SivA, DEvi PArvathi is concorporate; You are the child who grew up under Her gracious tutelage, Oh MurugA!

pU ulaku elAm adanga Or adiyinAl aLantha pUvai vadivAn ukantha marukOnE: He measured the entire earth with one of His feet; He is Lord VishNu of the hue of black lily; You are His favourite nephew, Oh Lord!

cUrar kiLaiyE thadinthu pAra mudiyE arinthu thULkaL pada neeRu kaNda vadivElA: Destroying the entire bunch of demons, felling their huge heads and grinding them to powder, Your sharp spear witnessed a lot of ashes, Oh Lord!

sOlai thanilE paRanthu ulAvu mayil ERi vanthu sOlai malai mEl amarntha perumALE.: Mounting the peacock that flies around in the grove, You came and took Your seat on the mountain in Pazhamuthir Solai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1311 veera madhan nUl - pazhamudhirchOlai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]