திருப்புகழ் 1305 குருபர சரவண  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1305 gurubarasaravaNa  (common)
Thiruppugazh - 1305 gurubarasaravaNa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன
தனதன தனதன தனன தனதன
   தனதன தனதன தனன தனதன
      தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான

......... பாடல் .........

குருபர சரவண பவசண் முககுக
   ஒருபர வயமியல் எயினர் மகள்சுக
      மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள்
   இளைகளை நெறுநெறு நெறென உலவுவி
      லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே

... அடிபடு முரசு தவில்பட
   கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை
      ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவ
சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள்
   பிரளய மிதுவென அதிர உலகர்கள்
      அரகர சிவசிவ அபய மபயமெ
         னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர்

... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருபர சரவணபவ சண்முக குக ... குருபரனே, சரவணபவனே,
ஷண்முகனே, குகப் பெருமானே,

ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர்
சண்டத் திரண்டபுஜ
... ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள
வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை
அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான
திருப்புயங்களை உடையவனே,

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை
நெறுநெறு நெறென உலவு விலங்கற் குறிஞ்சியுறை தொங்கற்
கடம்ப அருள் தருவாயே
... புலிகள், கரடிகள், காட்டெருமைகள்,
காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று
களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில்
வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக.

(??? .. ) அடிபடு முரசு தவில்பட கந்தக் கைதுந்துமி
தடந்தப்புடன்சலிகை கரடிகை யறைபறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல்
... அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம்,
தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை,
பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும்
பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும்
திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு
தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம்
எழுப்பும் ஓசை,

வங்கக் கருங்கடல் கொள் பிரளயம் இதுவென அதிர
உலகர்கள் அரகர சிவசிவ அபயம் அபயமெனுஞ் சத்தம்
எங்கும் எழ
... மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய
கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர,
சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே
உலகெங்கும் உண்டாக,

வெஞ் சத்தி கொண்டுபடை புக வானோர் (??? .. இங்கு முற்றுப்
பெறவில்லை) ... கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர,

தேவர்கள் (??? .. ) வனச மலர் நிகர், செம்பொற் சதங்கையடி
அன்பர்க்கு வந்துதவு பெருமாளே.
... தாமரைமலர் போன்றதும்
சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை
அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.


அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில்
தரப்பட்டுள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.682  pg 3.683  pg 3.684  pg 3.685 
 WIKI_urai Song number: 1303-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1305 - gurubara saravaNa (common)

thanathana thanathana thanana thanathana
   thanathana thanathana thanana thanathana
      thanthath thananthathana thanthath thananthathana
thanathana thanathana thanana thanathana
   thanathana thanathana thanana thanathana
      thanthath thananthathana thanthath thananthathana ...... thanathAna

......... Song .........

gurupara saravaNa bavasaN mukaguka
   orupara vayamiyal eyinar makaLsuka
      maNdath thanangaLpuNar saNdath thiraNdapuja
uzhuvaikaL karadikaL kidikaL pakadukaL
   iLaikaLai neRuneRu neRena ulavuvi
      langaR kuRinjiyuRai thongaR kadampa-aruL ... tharuvAyE

... adipadu murasu thavilpada
   kanthak kaithunthumitha danthap pudansalikai
      ... karadikai yaRaipaRai thimilai .. apinava
sangotRai kompukuzhal vangak karungadalkoL
   piraLaya mithuvena athira ulakarkaL
      arakara sivasiva apaya mapayame
         nunjaththa mengumezha venjath thikoNdupadai ...... pukavAnOr

... vanasa malarnikar, sempoR chathangaiyadi yanpark kuvanthuthavu ...... perumALE.

......... Meaning .........

gurupara saravaNapava saNmuga guga: Oh Great Master, Oh SaravaNabava, Oh ShaNmugA (six-faced Lord), Oh Lord GuhA!

orupara vayamiyal eyinar makaLsuka maNdath thanangaLpuNar saNdath thiraNdapuja: She is the hunters' daughter who is matchless and successful; You hug that VaLLi's blissful bosom with Your strong, robust and hallowed shoulders, Oh Lord!

uzhuvaikaL karadikaL kidikaL pakadukaL iLaikaLai neRuneRu neRena ulavu vilangaR kuRinjiyuRai thongaR kadampa aruL tharuvAyE: You live in the KuRinji (mountainous) land where there are many mountains whose protective forests are crushed noisily as many animals comprising tigers, bears, wild buffaloes and wild elephants romp about in them; You wear the kadappa garland, Oh Lord! Kindly bless me!

... (??? .. incomplete part) adipadu murasu thavilpada kanthak kaithunthumi thadanthappudan salikai karadikai yaRaipaRai thimilai apinava sangu oRRai kompu kuzhal: The large drum (for proclamation) is beaten; along with it, the percussion instrument thavil also makes noise; the drum called thakkai, ideally suited for beating, another one known as pErikai, the big drum called thappu, along with these, challikai, another instrument, the drum which makes noise like the wailing of the bear, the instrument called thimilai, a novel and wonderful conch, an one-holed wind-pipe, the trumpet and the flute all of which raise a noise of a high decibel in such a way that

vangak karungadal koL piraLayam ithuvena athira ulakarkaL arakara sivasiva apayam apayamenunj chaththam engum ezha: people are shocked thinking that it is the sound of the big deluge that comes at the end of the aeon filling up the dark sea in which ships roam about; the screaming of the people, praying, "Hara Hara, Siva Siva, we surrender to You, we surrender to You" fills up the entire world;

venj saththi koNdupadai puka vAnOr (??? .. incomplete part): the army of Lord SivA emerges with the fierce spear; and the celestials (incomplete)

vanasa malar nikar, sempoR chathangaiyadi anparkku vanthuthavu perumALE.: You walk right up to Your devotees to offer them Your hallowed, lotus-like feet, wearing the reddish anklets, Oh Great One!


(Only a small portion of this long and rare song is available for printing).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1305 gurubara saravaNa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]