பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 முருகவேள் திருமுறை 17 - திருமுறை ....அடிபடு முரசு தவில்பட கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை * · · · · · கரடிகை யறையறை திமிலை..... அபிநவ சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள் பிரளய மிதுவென அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபய மபயமெ னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை புகவானோர் ....வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு பெருமாளே (314) 1304. கூேடித்திரக் கோவை-துதி தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தனதான 1கும்ப கோணமொ 2டாரூர் 3.சிதம்பரம் உம்பர் வாழ்வுறு 4சிகாழி நின்றிடு கொன்றை வேணியர் 5மாயூர மம்பெறு 6சிவகாசி, 1. கும்பகோணம், ஆரூர், சிதம்பரம் - இந்த மூன்று தலங்களை முதலில் எடுத்துக் கூறினதின் காரணம் ஆராயத் தக்கது. () கும்பகோணம் - இது தேவாரத்தில் குடமூக்கு எனப்படும். இந்த ஒரு ஊரில் குடந்தைக் காரோணம் (கும்பகோணம் காசிவிசுவநாதர் கோயில், குடந்தைக் கீழ்க்கோட்டம்' (கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில்) - குடமூக்கு - (கும்பேசுரர் கோயில்) - என்னும் மூன்று பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகத்தில் காசி கங்கை தன்னிடத்தே படிந்தவர்களின் பாபங்கள் தனக்குக் கூடினவற்றை ஒழிக்கும் பொருட்டு வந்து படியும் அதிகச் சிறப்புள்ள மாமக தீர்த்தம் இத்தலத்தில் உளது. கங்கை மாமகம் தோறும் வந்து வந்துதற் படிந்தோர் விட்டுப் போமகம் போக மூழ்கும் புநித நீர்ப்பதியைக் காண்மின் - திருவிளை - அருச்சனை 25 அகம் = பாவம்: "தாவி முதற் காவிரி நல் யமுனை கங்கை சரச்சுதி பொற்றாமரை புட்கரணி தெண்ணிர்க் கோவியொடு குமளிவரு தீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே" அப்பர் 6-75-10