திருப்புகழ் 1241 சிவஞான புண்டரிக  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1241 sivanjAnapuNdariga  (common)
Thiruppugazh - 1241 sivanjAnapuNdariga - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதான தந்ததன தனதான தந்ததன
     தனதான தந்ததன ...... தனதான

......... பாடல் .........

சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
     சிவபோக மன்பருக ...... அறியாமற்

செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
     திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ

தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
     தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத்

தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
     ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும்

உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
     முறைநாய கங்கவுரி ...... சிவகாமி

ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
     யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா

அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
     மமுதால யம்பதவி ...... யருள்வோனே

அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
     அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் ... சிவஞானம் என்னும் தாமரை
மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே

கலவி சிவபோக மன்பருக அறியாமல் ... இணையும்
மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல்,

செகமீது உழன்று மல வடிவாயிருந்து ... இவ்வுலகில் அலைந்து
திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி,

பொது திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ ... பொதுவாய்த்
திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ?

தவ மாதவங்கள்பயில் ... தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற

அடியார் கணங்களொடு ... உன் அடியார்களின் கூட்டங்களுடன்

தயவாய் மகிழ்ந்துதினம் விளையாட ... அன்போடு மகிழ்ந்து
தினமும் விளையாடவும்,

தமியேன்மலங்கள் இரு வினைநோய் ... அடியேனது மும்மலங்கள்,
பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும்

இடிந்து அலற ... அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும்,

ததிநாளும் வந்ததென்முன் வரவேணும ... தக்க சமயத்தில் தினமும்
பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும்.

உவகாரி யன்பர்பணி கலியாணி ... யாவர்க்கும் உதவி செய்பவளும்,
அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும்,

எந்தை இடம் உறை நாயகங் கவுரி ... எந்தை சிவபிரானின் இடது
பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும்,

சிவகாமி ... சிவகாம சுந்தரியும்,

ஒளிர் ஆனையின்கரமில் ... விளங்கும் யானைமுக விநாயகனுக்குக்
கரத்தில்

மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த ... மகிழும்படியாக
மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும்

உமை யருள்பாலா ... ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே,

அவமேபி றந்தஎனை யிறவாமல் ... வீண் காலம் போக்கும்
பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து

அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே ... அன்பர்கள்
புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே,

அழகாநகம்பொலியு மயிலா ... அழகனே, மலைகளில் விளங்கி
வாழ்பவனே, மயில் வாகனனே,

குறிஞ்சிமகிழ் அயிலா ... குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு
குடியிருக்கும் வேலவனே,

புகழ்ந்தவர்கள் பெருமாளே. ... புகழ்ந்து போற்றும் அடியவர்களின்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.576  pg 3.577  pg 3.578  pg 3.579 
 WIKI_urai Song number: 1240 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1241 - sivanjAna puNdariga (common)

sivanjAna puNdarika malar mAdhudan kalavi
     sivabOga manparuga ...... aRiyAmal

jega meedhuzhandru mala vadivAy irundhupodhu
     thigazh mAdhar pin serumi ...... azhivEnO

thava mAdhavangaL payil adiyAr kaNangaLodu
     dhayavAy magizhndhu dhinam ...... viLaiyAda

thamiyEn malangaL iruvinai nOyidindh alaRa
     thadhi nALum vandhadhen mun ...... varavENum

uvakAri anbar paNi kaliyANi endhai ida
     muRai nAyagan gavuri ...... sivakAmi

oLirAnaiyin karamil magizh mAdhuLang kaniyai
     oru nAL pagirndha umai ...... aruL bAlA

avamE piRandha enai iRavAmal anbar pugum
     amudhAlayam padhavi ...... aruLvOnE

azhagA nakampoliyum mayilA kuRinji magizh
     ayilA pugazhndhavargaL ...... perumALE.

......... Meaning .........

sivanjAna puNdarika malar mAdhudan kalavi: The Divine Union with ParAsakthi seated on the Lotus of Saivite Knowledge

sivabOga manparuga aRiyAmal: is the most auspicious Bliss which one should experience fully; and without realising this,

jega meedhuzhandru mala vadivAy irundhu: I have been roaming around this world as a symbol of the three slags (namely arrogance, karma and delusion).

podhu thigazh mAdhar pin serumi azhivEnO: I have been chasing whores and should my life be so ruined?

thava mAdhavangaL payil adiyAr kaNangaLodu: Amidst a multitude of Your devotees who practise meditation and have done penance,

dhayavAy magizhndhu dhinam viLaiyAda: I would like to mingle daily and enjoy their company.

thamiyEn malangaL iruvinai nOyidindh alaRa: So that my three slags, the vicious cycle of birth and death, good and bad deeds, and all my diseases are scared away screaming,

thadhi nALum vandhadhen mun varavENum: You must come before me daily at the appropriate time!

uvakAri anbar paNi kaliyANi: She is ever helpful, known as KalyANi by Her devotees;

endhai ida muRai nAyagan gavuri sivakAmi: She occupies the left side of our Lord SivA majestically and is known as Gowri and SivagAmi;

oLirAnaiyin karamil magizh mAdhuLang kaniyai oru nAL pagirndha: Once, She gave the mAdhuLam (pomogranates) fruit to the Great VinAyagA, the elephant-faced;

umai aruL bAlA: and She is UmA PArvathi - and You are Her Son!

avamE piRandha enai iRavAmal: Even if my birth in this world is a waste, I pray for immortality

anbar pugum amudhAlayam padhavi aruLvOnE: and a seat in Your Divine Temple meant for Your devotees!

azhagA nakampoliyum mayilA: Oh Handsome One, You excel in mountainous places mounting the Peacock!

kuRinji magizh ayilA: You love to stay in hilly regions, Oh Lord with the Great Spear!

pugazhndhavargaL perumALE.: You are the beloved of all Your devotees who praise You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1241 sivanjAna puNdariga - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]