திருப்புகழ் 1231 களவு கொண்டு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1231 kaLavukoNdu  (common)
Thiruppugazh - 1231 kaLavukoNdu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்த தத்தான தனன தந்த தத்தான
     தனன தந்த தத்தான ...... தனதான

......... பாடல் .........

களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
     களப துங்க வித்தார ...... முலைமீதே

கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு
     கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே

உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான
     உனையு ணர்ந்து கத்தூரி ...... மணநாறும்

உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி
     யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ

அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்ரீவ
     அரசு டன்க டற்றூளி ...... யெழவேபோய்

அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்ரீவ
     மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே

வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை
     வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட

வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
     மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

களவு கொண்டு கைக் காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப
துங்க வித்தார முலை மீதே கலவி இன்பம் விற்பார்கள்
அவயவங்களைப் பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே
உள(ம்) நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து
... வஞ்சக எண்ணம்
கொண்டு கையில் உள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு,
பச்சைக் கற்பூரம் கலவைச் சாந்துடன் விளங்கும் உயர்ந்து பரந்த
மார்பகத்தைக் காட்டி, புணர்ச்சி இன்பம் விற்பவர்களாகிய
விலைமாதர்களின் அங்க உறுப்புக்களைப் பாடும் பாடல்களைத்
தெரிந்து கற்பவர்களாகிய சில மக்கள் தம்முடைய மனம் நெகிழ்ச்சி
உற்று பேசும் பயனற்ற பேச்சுக்களைப் பேசாமல்,

சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண(ம்) நாறும் உபய
பங்கயத் தாளில் அபயம் என்று உனைப் பாடி உருகி நெஞ்சு
சற்று ஓதில் இழிவாமோ
... உண்மைப் பொருளான உன்னை
அறிந்து கஸ்தூரியின் நறுமணம் வீசும் இரண்டு தாமரை போன்ற
திருவடிகளில் அடைக்கலம் என்று உன்னைப் புகழ்ந்து பாடி மனம் உருகி,
சிறிது நேரம் உன்னைத் துதித்தால் ஏதேனும் இழிவு ஏற்பட்டு விடுமோ?

அளவு இல் வன் கவிச் சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன்
கடல் தூளி எழவே போய் அடல் இலங்கை சுட்டு ஆடி
நிசிசரன் தச க்ரீவம் அற ஒரம்பு தொட்டார்த(ம்)
மருகோனே
... கணக்கிட முடியாத வன்மை வாய்ந்த குரங்குப் படைகள்
பரந்து சூழ்ந்து வர சுக்ரீவன் என்னும் குரங்கு அரசனுடன் கடல் தூசி
படும்படி சென்று, பகைக்கு இடமாயிருந்த இலங்கை நகரை சுட்டுப் போர்
புரிந்து அரக்கனாகிய இராவணனுடைய பத்துக் கழுத்தும், (தலைகளும்)
அற்று விழ ஓர் ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவரான ராமனின்
(திருமாலின்) மருகனே,

வளரும் மந்தரச் சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர்
கொம்பினைத் தேடி ஒரு வேட வடிவு கொண்டு
... வளர்நதுள்ள
மந்தாரம் போன்ற மரங்கள் சூழ்ந்த, பாலைக்கு முன் நின்ற முல்லையும்
குறிஞ்சியும் (காடும், மலையும்) கொண்ட நிலத்தின் கண் வேடர்கள்
பெண்ணான வள்ளியைத் தேடி, ஒப்பற்ற வேடர் வடிவத்தைப் பூண்டு,

பித்தாகி உருகி வெந்து அறக் கானில் மறவர் குன்றினில்
போன பெருமாளே.
... மோகப் பித்துடன் உள்ளம் உருகி,
(வெய்யிலில்) மிகவும் வேடூதல் உற்று, வேடர்கள் வாழும் (வள்ளி)
மலையிடத்தே சென்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.556  pg 3.557  pg 3.558  pg 3.559 
 WIKI_urai Song number: 1230 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1231 - kaLavu koNdu (common)

kaLavu koNdu kaikkAsi naLava Rinthu karppUra
     kaLapa thunga viththAra ...... mulaimeethE

kalavi yinpam viRpArka Lavaya vanga LaippAdu
     kavithe rinthu kaRpArkaL ...... silarthAmE

uLane kizhntha saththAna vuraima Ranthu saththAna
     unaiyu Narnthu kaththUai ...... maNanARum

upaya panga yaththALi lapaya menRu naippAdi
     yuruki nenju satROthi ...... lizhivAmO

aLavil vanka vicchEnai parava vantha sukreeva
     arasu danka datRULi ...... yezhavEpOy

adali langai suttAdi nisisa rantha sakreeva
     maRavo rampu thottArtha ...... marukOnE

vaLaru mantha racchOlai misaise Rintha muRpAlai
     vanasar kompi naiththEdi ...... yoruvEda

vadivu koNdu piththAki yuruki ventha RakkAnil
     maRavar kunRi niRpOna ...... perumALE.

......... Meaning .........

kaLavu koNdu kaik kAsin aLavu aRinthu karppUra kaLapa thunga viththAra mulai meethE kalavi inpam viRpArkaL avayavangaLaip pAdu kavi therinthu kaRpArkaL silar thAmE uLa(m) nekizhnthu asaththAna urai maRanthu: These treacherous whores, who know how to assess the amount of money held in the hands of their suitors, sell carnal pleasure by showing off their wide and huge breasts, smeared with a fragrant sandal paste mixed with camphor. In contrast to the futile talk of the so-called educated people who ecstatically describe the body parts of these whores in songs composed by them,

saththAna unai uNarnthu kaththUri maNa(m) nARum upaya pangayath thALil apayam enRu unaip pAdi uruki nenju satRu Othil izhivAmO: I wish to understand You, the True Principle, and to sing, with melting heart, songs in praise of Your two lotus feet, fragrant with the aroma of musk, and to seek refuge in those feet. If I extol You in worship for a little while, will that cause any degradation to me?

aLavu il van kavic chEnai parava vantha sukreeva arasudan kadal thULi ezhavE pOy adal ilangai suttu Adi nisisaran thasa kreevam aRa orampu thottArtha(m) marukOnE: Along with Sugreevan, the monkey-king, accompanied by innumerable monkeys in his strong armies around him, He crossed the sea raising a dust-storm and burnt down the city of LankA, the seat of enmity; in the battle that ensued, He wielded a unique arrow that severed the ten necks (and the heads) of the demon, RAvaNan; and You are the nephew of that RAmA (Lord VishNu)!

vaLarum mantharac chOlai misai seRintha mun pAlai vanasar kompinaith thEdi oru vEda vadivu koNdu: In this place, fully-grown trees like manthAram (mountain ebony) abound; in this hilly and mountainous region (preceding the desert area), You roamed about under the disguise of a matchless hunter in search of VaLLi, the damsel of the hunters;

piththAki uruki venthu aRak kAnil maRavar kunRinil pOna perumALE.: Your heart melting in a mad obsession and being scorched by the excessive heat, You reached out for the mountain (VaLLimalai) where the hunters resided, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1231 kaLavu koNdu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]