திருப்புகழ் 1225 கச்சுப் பூட்டு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1225 kachchuppUttu  (common)
Thiruppugazh - 1225 kachchuppUttu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத் தாத்த தத்தத் தாத்த
     தத்தத் தாத்த ...... தனதான

......... பாடல் .........

கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
     கத்திற் கோட்டு ...... கிரியாலங்

கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
     யற்கட் கூற்றில் ...... மயலாகி

அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
     வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும்

அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
     றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
     பத்மக் கூட்டி ...... லுறைவோரி

பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
     பத்தக் கூட்ட ...... ரியல்வானம்

மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
     வெட்கக் கோத்த ...... கடல்மீதே

மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
     வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கச்சுப் பூட்டுகைச் சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி ...
(விலைமாதரின்) கச்சு இணைக்கப்பட்டதும், (ஆண்களின்) கண்கள்
செல்லுகின்ற இடமாய் விளங்குவதுமான சிகரம் கொண்ட மலை போன்ற
மார்பகங்களிலும்,

ஆலம் கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க் கயல் கண் கூற்றில்
மயலாகி
... ஆலகால விஷத்தை வெளியிட்டு நிரம்பினதாய், சிவந்த
நிறத்ததாய், போருக்கு உற்றதான கயல் மீன் போன்றதான கண்கள்
மீதும், (இனிய) பேச்சிலும் காம மயக்கம் கொண்டு

அச்சக் கூச்சம் அற்றுக் கேட்டவர்க்குத் தூர்த்தன் என ... பயமும்
நாணமும் இல்லாதவனாகி என்னைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு இவன்
காம ஒழுக்கமுடையவன் என்று பலரும் கூற,

நாளும் அத்தப் பேற்றில் இச்சிப்பார்க்கு அறப் பித்தாய்த்
திரியலாமோ
... தினமும் பொன் பொருள் பெறுவதிலேயே ஆசை
கொள்ளும் விலைமாதர்க்கு மிகவும் காமம் கொண்டவனாய்
உழன்றிடலாமோ?

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த பத்மக் கூட்டில் உறைவோர் ...
பச்சை நிறமுடையவரும், (காளிங்கன் என்னும் பாம்பின் மேல்) நடனம்
புரிபவரும் ஆகிய திருமால் புகழ்ந்து போற்றும் சிவந்த தாமரை
ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரமன்,

இபத்தில் சேர்ப் பல் சக்கில் கூட்டர் ... வெள்ளை யானையின் மீது
ஏறுபவரும், பல (ஆயிரம்) கண்களோடு கூடியவருமான இந்திரன்,

பத்தக் கூட்டர் இயல் வானம் மெச்சிப் போற்ற வெற்புத்
தோற்று வெட்க
... அடியார் கூட்டங்கள், தகுதி வாய்ந்த வானவர் ஆகிய
இவர்கள் புகழ்ந்து போற்றவும், கிரெளஞ்சமலை வெட்கித்
தோற்றுப்போய் விழவும்,

கோத்த கடல் மீதே மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
வெட்டிச் சாய்த்த பெருமாளே.
... உலகுக்கு ஆடையாகவுள்ள
கடலினிடையே பெரிதாக வளர்ந்த மாமரத்தின் (சூரனின்) கொம்புகளை
வெட்டி வீழ்த்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.544  pg 3.545  pg 3.546  pg 3.547 
 WIKI_urai Song number: 1224 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1225 - kachchup pUttu (common)

kacchup pUttu kaicchak kOtta
     kaththiR kOttu ...... kiriyAlang

kakkith thEkku sekkarp pOrkka
     yaRkat kUtRil ...... mayalAki

acchak kUccha matRuk kEtta
     varkkuth thUrththa ...... nenanALum

aththap pEtRi licchip pArkka
     Rappith thAyththi ...... riyalAmO

pacchaik kUththar mecchic chEththa
     pathmak kUtti ...... luRaivOri

paththiR sErppal sakkiR kUttar
     paththak kUtta ...... riyalvAnam

mecchip pOtRa veRputh thOtRu
     vetkak kOththa ...... kadalmeethE

meththak kAyththa kokkuk kOttai
     vettic chAyththa ...... perumALE.

......... Meaning .........

kacchup pUttukaic chakku Odu akaththil kOttu kiri: With the bosom of the whores, fitted with a tight blouse, looking like the peaks of a mountain, at which men's eyes peek,

Alam kakkith thEkku sekkarp pOrk kayal kaN kUtRil mayalAki: with their combative, reddish and kayal-fish-like eyes, filled up with the evil poison, AlakAlam, and with their sweet talk, I became intoxicated with passion;

acchak kUccham atRuk kEttavarkkuth thUrththan ena nALum: having given up fear and sense of shame, I became the centre of ridicule for many people who branded me a man of moral turpitude;

aththap pEtRil icchippArkku aRap piththAyth thiriyalAmO: why am I roaming, obsessed with extreme passion, after the whores who are bent upon acquiring gold and wealth everyday?

pacchaik kUththar mecchic chEththa pathmak kUttil uRaivOr: He is of a green complexion and dances upon the serpent (KALingan); that Lord VishNu is full of praise for Lord BrahmA, seated on the reddish lotus;

ipaththil sErp pal sakkil kUttar: He, along with IndrA, mounting the white elephant AirAvadham, who is endowed with a thousand eyes,

paththak kUttar iyal vAnam mecchip pOtRa veRputh thOtRu vetka: together with a multitude of devotees and worthy celestials praised You with devotion when You defeated Mount Krouncha that fell shamefully

kOththa kadal meethE meththak kAyththa kokkuk kOttai vettic chAyththa perumALE.: and when You knocked down the branches of the giant mango tree (SUran in disguise) which had grown up gigantically in the middle of the sea serving as a wrap-around cloth for the earth, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1225 kachchup pUttu - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]