திருப்புகழ் 1217 இடை இத்தனை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1217 idaiiththanai  (common)
Thiruppugazh - 1217 idaiiththanai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான

......... பாடல் .........

இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம்

இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம்

உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே

ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே

திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந்

தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும்

விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல்

விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர்
அநுபோகம் இளகிக் கரை புரள
... ஒரு கைப்படி அளவே உள்ள
இடையை உடைய கிளி போன்ற விலைமாதர்களின் வாயிதழ் பருகி,
அவர்களுடைய இன்ப நுகர்ச்சியில் காமம் கட்டுக்கு அடங்காது ஓட,

புளகித கற்புர தன பாரம் உடன் மல் கடைபடு(ம்) துற்
குணம் அற
... மிகப் புளகாங்கிதம் கொண்டதும், பச்சைக் கற்புரம்
அணிந்துள்ளதுமான மார்பகங்களில் சேர்ந்தவனாகி, மல் யுத்தம்
புரிந்தவன் போல் இழிந்த நிலையில் சேரும் எனது தீக்குணம் ஒழிய,

நிற் குண உணர்வாலே ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று
அருள் புரிவாயே
... குணம் கடந்த ஞான உணர்ச்சியால் உருவில்லாத
ஒரு முக்தி நிலையில் நான் புகுமாறு ஒரு சிறிது நீ அருள் புரிவாயாக.

திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும் ...
அறிவின் திடம் இல்லாது விளங்கிய, தாமரையில் வாழும் பிரமன்
சிறையில் அகப்பட்டுக் கொண்டான் என அறிந்து (சிவபெருமானிடம்
முறையிடச்) சென்றவரும்,

தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சணன் என ஓதும் ...
தயிர் உண்டவர், நெய் உண்டவர், உலகை உண்டவர் என்று
போற்றப்படுகின்றவரும்,

விட பட்சணர் திரு மைத்துனன் வெருவச் சுரர் பகை மேல்
வேல் விடு விக்ரம
... விஷத்தை உண்டவராகிய சிவபெருமானுக்கு
அழகிய மைத்துனருமாகிய திருமால் சூரனுக்குப் பயந்து நிற்க,
தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்களின் மேல் வேலாயுதத்தை
விடுத்த வல்லமை படைத்தவனே,

கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே. ... (குலகிரிகள்
ஏழோடு கிரெளஞ்சத்தையும் சேர்த்து) எட்டு மலைகளையும் விழும்படி
வெட்டிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.530  pg 3.531 
 WIKI_urai Song number: 1216 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1217 - idai iththanai (common)

idaiyiththanai yuLathaththaiya rithazhthuyththava ...... ranupOkam

iLakikkarai puraLappuLa kithakaRpura ...... thanapAram

udanmaRkadai paduthuRkuNa maRaniRkuNa ...... vuNarvAlE

orunishkaLa vadiviRpuka vorusatRaruL ...... purivAyE

thidamatRoLir naLinabrama siRaipukkana ...... nenavEkun

thethipatchaNa kruthapatchaNa sekapatchaNa ...... nenavOthum

vidapatchaNar thirumaiththunan veruvaccurar...... pakaimElvEl

viduvikrama giriyettaiyum vizhavettiya ...... perumALE.

......... Meaning .........

idai iththanai uLa thaththaiyar ithazh thuyththu avar anupOkam iLakik karai puraLa: The waist of these parrot-like whores is slender like the size of a fist; the pleasure derived from their lips and their passionate love reached out of bounds;

puLakitha kaRpura thana pAram udan mal kadaipadu(m) thuR kuNam aRa: I became obsessed with their provocative bosom smeared with camphorous paste; I sank to such a low level as if I had been wrestling with them; to eradicate my worst vice,

niR kuNa uNarvAlE oru nishkaLa vadivil puka oru satRu aruL purivAyE: kindly bless me a little so that I could acquire the experience which is beyond any attributes, enabling me to enter a state of formless liberation!

thidam atRu oLir naLina brama siRai pukkanan ena Ekum: He went to complain (to Lord SivA) about the imprisonment of BrahmA, seated on a bright lotus, who exhibited a lack of consistancy;

thethi patchaNa krutha patchaNa seka patchaNan ena Othum: He is praised by all as the One who imbibed curd and refined butter (ghee) and also as the swallower of the entire world;

vida patchaNar thiru maiththunan veruvac curar pakai mEl vEl vidu vikrama: and He is the brother-in-law of Lord SivA who gulped down poison; when that VishNu stood terrorised by the demon SUran, You wielded the spear on all enemies of the celestials, Oh Mighty One!

giri ettaiyum vizha vettiya perumALE.: All the eight mountains (including the seven mountains of the demons and Mount Krouncha) were knocked down by You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1217 idai iththanai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]