திருப்புகழ் 1200 வாடையில் மதனை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1200 vAdaiyilmadhanai  (common)
Thiruppugazh - 1200 vAdaiyilmadhanai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனன தனத்தத்த
     தானன தனன தனத்தத்த
          தானன தனன தனத்தத்த ...... தனதான

......... பாடல் .........

வாடையில் மதனை யழைத்துற்று
     வாள்வளை கலக லெனக்கற்றை
          வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும்

மால்கொள நெகிழ வுடுத்திட்டு
     நூபுர மிணைய டியைப்பற்றி
          வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு ...... வருமாய

நாடக மகளிர் நடிப்புற்ற
     தோதக வலையி லகப்பட்டு
          ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு

நாணமு மரபு மொழுக்கற்று
     நீதியு மறிவு மறக்கெட்டு
          நாயடி மையும டிமைப்பட்டு ...... விடலாமோ

ஆடிய மயிலி னையொப்புற்று
     பீலியு மிலையு முடுத்திட்டு
          ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும்

ஆகிய விதண்மி சையுற்றிட்டு
     மானின மருள விழித்திட்டு
          ஆயுத கவணொ ருகைச்சுற்றி ...... விளையாடும்

வேடுவர் சிறுமி யொருத்திக்கு
     யான்வழி யடிமை யெனச்செப்பி
          வீறுள அடியி ணையைப்பற்றி ...... பலகாலும்

வேதமு மமர ருமெய்ச்சக்ர
     வாளமு மறிய விலைப்பட்டு
          மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாடையில் மதனை அழைத்து உற்று ... தென்றலைத் தேராகக்
கொண்டு வருகின்ற மன்மதனை வரவழைத்து,

வாள் வளை கலகல் எனக் கற்றை வார் குழல் சரிய
முடித்திட்டு
... ஒளி வீசும் வளையல்கள் கல கல் என்று ஒலி செய்ய,
கற்றையான நீண்ட கூந்தல் சரிந்து விழ அதை முடிந்து,

துகில் ஆரும் மால் கொ(ள்)ள நெகிழ உடுத்திட்டு நூபுரம்
இணை அடியைப் பற்றி வாய் விட
... ஆடையை எப்படிப்பட்டவரும்
ஆசை கொள்ளும்படியான வகையில் வேண்டுமென்றே தளர்த்தி
உடுத்தி, சிலம்பு இரண்டு பாதங்களிலும் பற்றிச் சூழ்ந்து ஒலி செய்ய,

நுதல் மிசை பொட்டிட்டு வரு(ம்) மாய நாடக மகளிர்
நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு
... நெற்றியில் பொட்டு
அணிந்து வருகின்ற, மாயமும் ஆடல்களும் வல்ல விலைமாதர்களின்
பாசாங்குச் சூழ்ச்சி கொண்ட வஞ்சக வலையில் சிக்கிக்கொண்டு,

ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு நாணமும் மரபும்
ஒழுக்கு அற்று நீதியும் அறிவும் அறக் கெட்டு நாய்
அடிமையும் அடிமைப்பட்டு விடலாமோ
... உலகில் உள்ளோர்
அனைவரும் இவன் பெரிய பித்தன் என்று கூறும்படி, என் மானமும்
குடிப்பிறப்பும் ஒழுக்கமும் கெட்டு, நீதி, அறிவு இவை அடியோடு கெட்டு,
நாய் அனைய அடிமையாக (அம்மாதர்களுக்கு) அடிமையாகி விடலாமோ?

ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு
ஆரினும் அழகு மிகப் பெற்று யவனாளும் ஆகிய இதண் மிசை
உற்றிட்டு
... ஆடுகின்ற மயிலை நிகராகி, மயில் இறகையும்
தழையிலைகளையும் உடம்பில் உடுத்திக் கொண்டு, யாருக்கும் இல்லாத
அழகை நிரம்பப் பெற்று, இளமை உடையவளாய் (தினைப் புனத்தில்
கட்டப்பட்டப்) பரண் மீது வீற்றிருந்து,

மான் இன(ம்) மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கைச்
சுற்றி விளையாடும் வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
... மானின்
கூட்டங்கள் மருண்டு அதிசயித்து விழிக்கும்படிச் செய்து, கவண் கல்
என்னும் ஆயுதத்தை ஒரு கையில் சுற்றி (பறவைகளை விரட்டி)
விளையாடிய வேடப் பெண்ணாகிய ஒப்பற்றவளாகிய வள்ளிக்கு

யான் வழி அடிமை எனச் செப்பி வீறு உ(ள்)ள அடி
இணையைப் பற்றி
... நான் உனக்கு வழி அடிமை என்று கூறி,
பெருமை பொருந்திய அவளுடைய இரண்டு திருவடிகளையும் பிடித்துக்
கொண்டு,

பல காலும் வேதமும் அமரரும் மெய்ச் சக்ரவாளமும் அறிய
விலைப் பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே.
...
பல முறையும், வேதமும் தேவர்களும் நிலை பெற்ற சக்ரவாள கிரியும்
அறியும்படி, அதையே கூறி, (அவளுக்கு) விலைப்பட்ட அடிமையாகி
(அங்ஙனம் அடிமைப்பட்டுள்ளதை) மேரு மலையில் நன்றாக
விளங்கும்படி (சிலா சாசனமாக) எழுதி வைத்துள்ள பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.496  pg 3.497 
 WIKI_urai Song number: 1199 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1200 - vAdaiyil mathanai (common)

vAdaiyil mathanai yazhaiththutRu
     vALvaLai kalaka lenakkatRai
          vArkuzhal sariya mudiththittu ...... thukilArum

mAlkoLa nekizha vuduththittu
     nUpura miNaiya diyaippatRi
          vAyvida nuthalmi saipottittu ...... varumAya

nAdaka makaLir nadipputRa
     thOthaka valaiyi lakappattu
          njAlamu muzhuthu mikappiththa ...... nenumARu

nANamu marapu mozhukkatRu
     neethiyu maRivu maRakkettu
          nAyadi maiyuma dimaippattu ...... vidalAmO

Adiya mayili naiyopputRu
     peeliyu milaiyu muduththittu
          Arinu mazhaku mikappetRu ...... yavanALum

Akiya vithaNmi saiyutRittu
     mAnina maruLa vizhiththittu
          Ayutha kavaNo rukaicchutRi ...... viLaiyAdum

vEduvar siRumi yoruththikku
     yAnvazhi yadimai yenaccheppi
          veeRuLa adiyi NaiyaippatRi ...... palakAlum

vEthamu mamara rumeycchakra
     vALamu maRiya vilaippattu
          mEruvil mikavu mezhuththitta ...... perumALE.

......... Meaning .........

vAdaiyil mathanai azhaiththu utRu: They send for Manmathan (God of Love) mounting on his chariot of southerly breeze;

vAL vaLai kalakal enak katRai vAr kuzhal sariya mudiththittu: as their dazzling bangles make a jingling sound, their dense hair becomes loose and slides down, which they pick up and bind into a tuft;

thukil Arum mAl ko(L)La nekizha uduththittu nUpuram iNai adiyaip patRi vAy vida: they loosen their attire on purpose making any onlooker, whatever his bearing may be, lust for them; the tightly fitting anklets on both feet make a lilting noise;

nuthal misai pottittu varu(m) mAya nAdaka makaLir nadipputRa thOthaka valaiyil akappattu: they place an ornamental dot on their forehead and come out casting magical spells and showing their dancing skills; falling a victim to their feigned, calculated and treacherous net,

njAlamum muzhuthu mika piththan enumARu nANamum marapum ozhukku atRu neethiyum aRivum aRak kettu nAy adimaiyum adimaip pattu vidalAmO: I have become a laughing stock of this entire world that has branded me as a mad man; so low has my self-respect sunk, along with my lineage; my sense of justice and intelligence are totally demolished, and I have become a dog-like slob; how could I have turned into a bonded slave (to those whores)?

Adiya mayilinai opputRu peeliyum ilaiyum uduththittu Arinum azhaku mikap petRu yavanALum Akiya ithaN misai utRittu: She looked like the dancing peacock; she wore the feathers of peacock, leaves and twigs to cover herself; endowed with matchless beauty, the youthful damsel used to sit on the raised platform (built in the millet field);

mAn ina(m) maruLa vizhiththittu Ayutha kavaN oru kaic chutRi viLaiyAdum vEduvar siRumi oruththikku: she left the herd of deers awestruck, looking at her in astonishment; from the sling that she carried with her, she used to playfully hurl stones (at the birds preying on the millet); she is VaLLi, the unique damsel of the hunters;

yAn vazhi adimai enac cheppi veeRu u(L)La adi iNaiyaip patRi: You declared to that VaLLi that You were a bonded slave to her and caught hold of both of her hallowed feet;

pala kAlum vEthamum amararum meyc chakravALamum aRiya vilaip pattu mEruvil mikavum ezhuththitta perumALE.: You solemnly repeated Your oath several times, as witnessed by the Scriptures, the Celestials and the eternal mount ChakravaLakam, stating that You were held by her in servitude as a chattel; You further clearly etched Your declaration in writing on the wall of Mount MEru (as a relic), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1200 vAdaiyil madhanai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]