திருப்புகழ் 1128 ஆலாலத்தை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1128 AlAlaththai  (common)
Thiruppugazh - 1128 AlAlaththai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன
     தானா தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு
     தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே

ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி
     வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக்

கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்
     கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார்

கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்
     கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ

பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி
     பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற்

பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர்
     பாலா பத்தரி டத்தியல் ...... பயில்வோனே

மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை
     வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா

மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு
     வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையைப்
பொருது
... ஆலகால விஷத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்துள்ள
வேலாயுதத்தைப் போல இருந்துகொண்டு, அழகிய குண்டலங்களை
வம்புக்கு இழுப்பது போல் (காது வரை) நீண்டு,

ஆகாரைத் தொடர் கைக்கு எணும் விழியாலே ... தங்களுக்கு
ஆகாதவர்களைத் தொடர்ந்து பின் சென்று பற்றுதற்கு எண்ணும்
கண்களுக்கு

ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு ... அடிமைப்பட்டு,
அவ்வாறு வசப்பட்டவர் தம்மைச் சூழ்ந்திருக்க, அவர்கள் (தங்கள்
சூழ்ச்சியினின்று) மீண்டு வெளியே போக முடியாதவாறு, நுழைந்து
ஏற்பாடுகள் செய்து,

அறிவார் போகச் செயல் விச்சைகள் விலைகூறி ... அவர்களது
நல்லறிவு போகும்படி தொழில் வித்தைகளை விலைபேசி,

கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்கு உருக ... தமது
ஆடம்பரங்களை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் காட்டி, மனம்
உடைந்து உள்ளம் நெகிழ்வது போல் செய்து,

பொருள் கூறாகப் பெறில் நிற்கவும் இலது ஆனார் ... தாங்கள்
கேட்ட பொருளில் ஒரு பகுதியை மட்டும் பெற்றால், எதிரில் நின்று
பேசுவதற்குக் கூடக் கிட்டாதவர்கள்,

கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆ(க) விட்டு அகல்
மட்டைகள்
... அக நட்பு இல்லாமல் புற நட்புச் செய்யும் பயனிலிகள்,
அழிவுறும் வகைக்கு விட்டு விட்டு நீங்கும் பாவிகளாகிய
விலைமாதர்களின்

கோமாளத் துயர் உட்பயம் உறலாமோ ... கொண்டாட்டத்தால்
வரும் வேதனைப் பயத்தை நான் அடைதல் நன்றோ?

பாலாம் அக்கடலில் துயில் மாலோர் எட்டுத் தலைக்
கிரிபால்
... திருப்பாற்கடலில் துயிலும் திருமால் முதலான தேவர்கள்
சென்று சேர்ந்த சிறந்த கயிலைமலையை

பார்வைக்கு அளவிட்டும் ஐயுறு போதில் ... (காமனைச் சிவன்மேல்
பாணம் எய்ய அனுப்பினோமே என்ன ஆயிற்று எனக்) கண் கொண்டு
பார்த்து அளவிட்டும், அவர்கள் சந்தேகித்தும் இருந்த சமயத்தில்

பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழச் சுடும் வித்தகர்
பாலா
... பூமியில் கரும்பு வேல் ஏந்திய மன்மதனுடைய உடல் தீப்
பொறியாய் வெந்து விழும்படிச் சுட்டெரித்த
ஞானியாகிய சிவபெருமானின் குழந்தையே,

பத்தர் இடத்து இயல் பயில்வோனே ... பக்தர்களிடம் இயல்பான
அன்பு காட்டிப் பழகுபவனே,

மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு
அரக்கரை வேர் மாளப் பொருதிட்ட ஒளி விடும் வேலா
...
முன்பு, கூட்டமாக நாலு திக்குகளிலும் சென்று நிரம்பிய பகைவராகிய
அசுரர்களையும், அவர்கள் தங்கியிருந்த கிரெளஞ்சம், ஏழு மலைகள்
அனைத்தையும் அடியோடு மாண்டு அழியும்படி சண்டை செய்து ஒளி
வீசும் வேலாயுதத்தை உடையவனே,

மேல் நாடர்ச் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு
வேதாவைச் சிறை இட்டு அருள் பெருமாளே.
... விண்ணோரைச்
சிறையினின்றும் விடுவித்து அருள் செய்தவனே, நீங்காத வீரத்தோடு
பிரமனைச் சிறையிலிட்டுப் பின்னர் அவனுக்கு அருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.300  pg 3.301  pg 3.302  pg 3.303 
 WIKI_urai Song number: 1131 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1128 - AlAlaththai (common)

AalA laththaiya zhuththiya vElpOl naRkuzhai yaipporu
     thAkA raiththodar kaikkeNum ...... vizhiyAlE

AaLA matRavar sutRida meeLA matRalai yittaRi
     vArpO kaccheyal vicchaikaL ...... vilaikURik

kOlA lakkaNa mittuva rAthAr nekkuru kapporuL
     kURA kappeRil niRkavu ...... milathAnAr

kUdA natpumu raiththidu kEdA vittakal mattaikaL
     kOmA Laththuya rutpaya ...... muRalAmO

pAlA makkada litRuyil mAlO rettutha laikkiri
     pAlpAr vaikkaLa vittumai ...... yuRupOthiR

pArmE likkanu daRpoRi yAyvee zhacchudum viththakar
     pAlA paththari daththiyal ...... payilvOnE

mElA yaththodu thikkadai mEvAr veRpoda rakkarai
     vErmA Lapporu thittoLi ...... vidumvElA

mEnA darcchiRai vittaruL meeLA vikkira maththodu
     vEthA vaicchiRai yittaruL ...... perumALE.

......... Meaning .........

AalAlaththai azhuththiya vEl pOl nal kuzhaiyaip poruthu: Those eyes look like a spear that contains the poison AalakAlam; they extend right up to the beautiful dangling ear-studs as if to wage war with them;

AakAraith thodar kaikku eNum vizhiyAlE: they follow indifferent people right through in order to catch their attention; by such eyes of the whores

AaLA matRavar sutRida meeLAmal thalaiyittu: when people are ensnared, and while the victims are surrounding them, they make sure that the trapped ones are unable to get out;

aRivAr pOkac cheyal vicchaikaL vilaikURi: they play their tricks of trade for a price so cleverly that the victims lose their sense of judgment;

kOlAlam kaNam ittu varAthAr nekku uruka: they exhibit all their glamour in a moment leaving them with a broken heart and a melting mind;

poruL kURAkap peRil niRkavum ilathu AnAr: if they receive only a portion of what they solicited, they would just disappear from the scene, let alone having a conversation with them;

kUdA natpum uraiththidu kEdu A(ka) vittu akal mattaikaL: they are vain people who show only superficial friendship rather than true amity; they simply leave their patrons to fall into their destruction; these whores are such sinners;

kOmALath thuyar udpayam uRalAmO: is it fair that I suffer the miserable fear that results from all their mirth?

pAlAm akkadalil thuyil mAlOr ettuth thalaik kiripAl: All the celestials headed by VishNu, who slumbers on the milky ocean, marched towards Mount KailAsh;

pArvaikku aLavittum aiyuRu pOthil: they let their eyes wander over that mountain (wondering what happened to the mission they all entrusted to Manmathan to shoot arrows on Lord SivA); when they were doubting the outcome,

pAr mEl ikkan udal poRiyAy veezhas sudum viththakar pAlA: Manmathan's charred body, along with his bow of sugarcane, fell on the earth in sparks and flames; he was thus burnt down by the wisest Lord SivA; and You are the child of that SivA!

paththar idaththu iyal payilvOnE: You move with Your devotees with spontaneous love, Oh Lord!

mEl Ayaththodu thikku adai mEvAr veRpodu arakkarai vEr mALap poruthitta oLi vidum vElA: Once, when enemies in the form of demons filled up all the four directions, You annihilated them all, along with Mount Krouncha where they lived and their seven hills, by fighting with Your dazzling spear, Oh Lord!

mEl nAdarc chiRai vittu aruL meeLA vikkiramaththodu vEthAvaic chiRai ittu aruL perumALE.: You graciously liberated the celestials from their prison; with inexhaustible valour, You first imprisoned Lord BrahmA with undiminished valour and later bestowed Your grace upon Him, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1128 AlAlaththai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]