திருப்புகழ் 1100 அங்கதன் கண்டகன்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1100 angkadhankaNdagan  (common)
Thiruppugazh - 1100 angkadhankaNdagan - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
     தந்தனந் தந்தனந் ...... தனதான

......... பாடல் .........

அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
     சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா

அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
     தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ்

சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
     சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார்

தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
     தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ

கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
     கங்களுங் திங்களுங் ...... கழுநீருங்

கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
     கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர்

பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
     பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா

பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
     பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அங்கதன் கண்டகன் ப(பா)ங்கு இலன் பொங்கு நெஞ்சு
அன்பிலன் துன்பவன்
... (நான்) வசை கூறுபவன், கொடியவன்,
தகுதி இல்லாதவன், அன்பு எழுகின்ற உள்ளம் இல்லாதவன்,
துன்பத்துக்கு ஈடானவன்,

புகழ் வாரா அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும்
சுமந்து
... புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய
உடலை எந்நாளும் சுமந்து,

அங்கும் இங்கும் திரிந்து இரை தேடும் சங்கடம் கொண்ட
வெம் சண்டி பண்டன்
... எங்கும் திரிதலுற்று, உணவைத் தேடுகின்ற
வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடிய முரடன், ஆண்மை
இல்லாதவன்,

பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார் தம் தொழும்பன்
தழும்பன்
... மிக்க மனக் கவலை கொண்டவன், சிவந்த வாயிதழை
உடைய விலைமாதர்களின் பணியாளன், குற்றம் உள்ளவன்,

பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ ...
உன்னைப் பணிந்து எப்போது உன்னுடைய தண்டை அணிந்த தாமரை
போன்ற திருவடிகளைப் புகழ்வேனோ?

கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும்
திங்களும் கழுநீரும்
... கங்கை நதியும், பொங்கி எழும் விஷம்
பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும்,

கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று
செம் சடையாளர்
... தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும்
நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானது

பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த ...
இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி
ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் ஞானசம்பந்த மூர்த்தியே,

வெம் குண்டர் தம் குலகாலா ... கொடிய சமணர்களுடைய
கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்ந்தவனே,

பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு
நண்பும் பெறும் பெருமாளே.
... கலை வல்லவன், கந்த பிரான் என்று
விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, பண்பும் உனது
நட்பும் பெற்றுக் களிக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.230  pg 3.231  pg 3.232  pg 3.233 
 WIKI_urai Song number: 1103 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1100 - angkadhan kaNdagan (common)

angathan kaNdakan pangilan pongunenj
     canpilan thunpavan ...... pukazhvArA

anjodung kumpothum ponRaiyen Runjuman
     thanguming kunthirin ...... thiraithEdum

sangadang koNdavenj caNdipaN danperum
     sanjalan kinjukan ...... tharuvAyAr

thanthozhum panthazhum panpaNin thenRunin
     thaNdaiyam pangayam ...... pukazhvEnO

gangaiyum pongunanj camporun thumpuyang
     kangaLum thingaLum ...... kazhuneerum

kanjamun thumpaiyum konRaiyunj canthatham
     kanthamun thunRusenj ...... cadaiyALar

panguthang kumpasung komputhan thinpuRum
     panthaveng kuNdartham ...... kulakAlA

paNdithan kanthanen RaNdaraN danthozhum
     paNpunaN pumpeRum ...... perumALE.

......... Meaning .........

angathan kaNdakan pa(a)ngu ilan pongu nenju anpilan thunpavan: (I am) a foul-mouthed, wicked and worthless person, with a heart devoid of love; a vehicle for all miseries,

pukazh vArA anju odungum pothumpu onRai enRum sumanthu: carrying at all times this cave of a body which houses the five notorious senses which do not bring fame,

angum ingum thirinthu irai thEdum sangadam koNda vem saNdi paNdan: I move about hither and thither in desparate search for food; I am a savage bully, lacking manliness;

perum sanjalan kinjukam tharu vAyAr tham thozhumpan thazhumpan: I am worried sick at all times, running errands for whores with red lips; and I am full of blemishes;

paNinthu enRu nin thaNdai am pangayam pukazhvEnO: when will I prostrate at, and praise, Your hallowed lotus-feet adorned with anklets?

gangaiyum pongu nanjam porunthum puyangangaLum thingaLum kazhuneerum: The river Gangai, serpents with fuming poison, the crescent moon, red lilies,

kanjamum thumpaiyum konRaiyum santhatham kanthamum thunRu senj cadaiyALar: and the flowers of lotus, thumbai (leucas) and kondRai (Indian laburnum) are always adorning with fragrance the matted and reddish hair of Lord SivA;

pangu thangum pasum kompu thanthu inpuRum pantha: concorporate on His left side is Goddess PArvathi, like a green and blossoming creeper; and She fed You the Milk of Knowledge which You happily imbibed as GnAna Sambandhar, Oh Lord!

vem kuNdar tham kulakAlA: You were the God of Death for the arrogant and cruel camaNAs, Oh Lord!

paNdithan kanthan enRu aNdar aNdam thozhum: The people in the celestial world and the earth worship You, hailing You as "Oh Wizard of Arts, KandhA!"

paNpu naNpum peRum perumALE.: and are blessed with virtues and Your friendship, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1100 angkadhan kaNdagan - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]