திருப்புகழ் 1071 பெருக்க நெஞ்சு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1071 perukkanenju  (common)
Thiruppugazh - 1071 perukkanenju - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
     தனத்த தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
     ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும்

பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
     றமைத்த பெண்தனந் ...... தனையாரத்

திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்
     திறத்தை யன்புடன் ...... தெளியாதே

சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
     திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ

தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்
     தரித்த குன்றநின் ...... றடியோடுந்

தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
     தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ்

சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்
     துணைச்செய் கின்றநின் ...... பதமேவும்

சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ... நிரம்ப மனம்
மகிழ்ச்சி உற்று உருகும் அன்பு இல்லாதவன் நான்.

ப்ரபுத் தனங்கள் பண்பு எ(ண்)ணு(ம்) நாணும் பிழைக்க
ஒன்றிலன்
... பெருந்தன்மைக் குணங்கள், நற்குணங்கள், மதிக்கத்
தக்க கூச்சம் முதலியவற்றுள், நான் உய்யும் வகைக்கு, ஒன்றும்
இல்லாதவன்.

சிலைக் கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம் தனை
ஆரத் திருக் கை கொண்டு அணைந்திடச் செல்கின்ற
... வேல்
ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் தோன்றி
வளர்ந்த வள்ளியின் மார்பினை மனம் நிறையத் திருக் கைகளைக்
கொண்டு தழுவச் செல்லும்

நின் திறத்தை அன்புடன் தெளியாதே ... உன்னுடைய மேன்மைக்
குணத்தை அன்புடன் நான் தெளிந்து உணராமல்,

சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் ... கோபக் குணமே
நிரம்பி, துடுக்குடனும் செருக்குடனும் பேசும் பயனற்றவன்

என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ ... எனது கோணலான
புத்தி மாறி என்றைக்கு நற்புத்தியை நான் அடைவேனோ?

தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த
குன்ற நின்று அடியோடும் தடக் கை கொண்டு வந்து
எடுத்தவன் சிரம் தறித்த கண்டன்
... செருக்குடன் அன்று போய்,
அருள் கண்ணோக்கம் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்த கயிலாய
மலையை அடிவாரத்தில் நின்று அடியோடு தன் பெரிய கைகளால்
பெயர்த்து எடுத்தவனாகிய ராவணனுடைய தலைகளைத் துண்டித்த
வீரனாகிய திருமாலும்,

எண் திசையோரும் சுருக்கம் இன்றி நின்ற அருக்கன்
இந்திரன்
... எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும், சுருக்கம் இல்லாமல்
விரிந்த கிரணங்களை வீசும் சூரியனும், இந்திரனும்,

துணைச் செய்கின்ற நின் பத(ம்) மேவும் சுகத்தில் அன்பரும்
செக த்ரயங்களும்
... துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை
விரும்பி நிற்பவர்களான உன் அன்பில் முழுகியுள்ள அடியார்களும்,
மூன்று உலகத்தோரும்,

துதிக்கும் உம்பர் தம் பெருமாளே. ... போற்றித் துதிக்கும்
தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.180  pg 3.181 
 WIKI_urai Song number: 1074 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1071 - perukka nenju (common)

perukka nenjuvan thurukku manpilan
     prapuththa nangaLpaN ...... peNunANum

pizhaikka vonRilan silaikkai miNdarkun
     Ramaiththa peNthanan ...... thanaiyArath

thirukkai koNdaNain thidacchel kinRanin
     thiRaththai yanpudan ...... theLiyAthE

sinaththil maNdimiN duraikkum vampanen
     thirukku menRozhin ...... thiduvEnO

tharukki yanRusen Rarutka NonRaran
     thariththa kunRanin ...... RadiyOdun

thadakkai koNduvan theduththa vansiran
     thaRiththa kaNdaneN ...... disaiyOrum

surukka minRinin Rarukka ninthiran
     thuNaicchey kinRanin ...... pathamEvum

sukaththi lanparum sekathra yangaLun
     thuthikku mumpartham ...... perumALE.

......... Meaning .........

perukka nenju uvanthu urukkum anpilan: I am incapable of filling my heart with happiness and making it melt with love;

praputh thanangaL paNpu e(N) Nu(m) nANum pizhaikka onRilan: nor do I have any of the following qualities, namely, a broad mind, virtues and respectable humility.

silaik kai miNdar kunRu amaiththa peN thanam thanai Arath thiruk kai koNdu aNainthidac chelkinRa: She grew up in Mount VaLLimalai where hunters with spears in hand roam about; to tightly hug the bosom of that VaLLi with Your hallowed arms, You went to that mount;

nin thiRaththai anpudan theLiyAthE: not realising with love Your greatness in that action,

sinaththil maNdi miNdu uraikkum vampan: having been a person filled with anger, making scathing remarks with arrogance and vanity;

en thirukkum enRu ozhinthiduvEnO: when will I straighten my crooked mind and behave in the righteous way?

tharukki anRu senRu aruL kaN onRu aran thariththa kunRa ninRu adiyOdum thadak kai koNdu vanthu eduththavan siram thaRiththa kaNdan: He is the Valiant One who severed the heads of RAvaNan who arrogantly went the other day to stand at the foothill of Mount KailAsh, the abode of the compasionate Lord SivA, and began to uproot the mountain with his large hands; He is Lord VishNu;

eN thisaiyOrum surukkam inRi ninRa arukkan inthiran thuNaic cheykinRa nin patha(m) mEvum sukaththil anparum seka thrayangaLum: along with Him, all people from the eight directions, the Sun who spreads its wide wrinkle-free rays, IndrA, the devotees who yearn for Your hallowed feet as their refuge and who are immersed in love for You, and the denizen of the three worlds

thuthikkum umpar tham perumALE.: are worshipping You as the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1071 perukka nenju - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]