திருப்புகழ் 1065 துயரம் அறு நின்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1065 thuyaramaRunin  (common)
Thiruppugazh - 1065 thuyaramaRunin - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான

......... பாடல் .........

துயர மறுநின் வறுமை தொலையு
     மொழியு மமிர்த ...... சுரபானம்

சுரபி குளிகை யெளிது பெறுக
     துவளு மெமது ...... பசிதீரத்

தயிரு மமுது மமையு மிடுக
     சவடி கடக ...... நெளிகாறை

தருக தகடொ டுருக எனுமி
     விரகு தவிர்வ ...... தொருநாளே

உயரு நிகரில் சிகரி மிடறு
     முடலு மவுணர் ...... நெடுமார்பும்

உருவ மகர முகர திமிர
     வுததி யுதர ...... மதுபீற

அயரு மமரர் சரண நிகள
     முறிய எறியு ...... மயில்வீரா

அறிவு முரமு மறமு நிறமு
     மழகு முடைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

துயரம் அறு(ம்) நின் வறுமை தொலையும் ... துன்பமெல்லாம்
ஒழியும். உனது தரித்திரம் நீங்கும்.

மொழியும் அமிர்த சுர பானம் சுரபி குளிகை எளிது பெறுக ...
பிரசித்தி பெற்ற அமுதமாகிய தேவர் பருகும் உணவும், காமதேனுவும்,
(உலோகங்களைப் பொன்னாக்க வல்ல மந்திர சக்தி உள்ள)
மாத்திரைகளையும், சுலபமாக நீ பெற முடியும்.

துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் இடுக ...
வாடுகின்ற எம்முடைய பசி அடங்கும்படியாக தயிரும் சோறும் எமக்கு
இட்டால் அதுவே போதுமானது. அதைத் தந்து உதவுக.

சவடி கடக நெளி காறை தருக தகடொடு உறுக ... பொன் சரடு,
கங்கணம், மோதிரம், (பொன்னாலாகிய) கழுத்து அணி இவைகளைத்
தர வல்ல தாயித்து மந்திரத் தகட்டை (நான் தருவேன், அதை நீ)
பெற்றுக் கொள்க.

எனும் இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே ... என்று கூறும் (கபட
ரசவாதிகளின்) இந்த வகையான தந்திர மொழிகளிலிருந்து தப்பும் ஒரு
நாள் எனக்குக் கிட்டுமோ?

உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு
மார்பும் உருவ
... உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான
கிரெளஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய
மார்பும் ஊடுருவும் படியாக,

மகர முகர திமிர உததி உதரம் அது பீற ... மகர மீன்கள்
உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது
வயிற்றின் உட்பாகம் கிழிய,

அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா ...
சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச்
செலுத்திய வேல் வீரனே.

அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய
பெருமாளே.
... ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும்,
அழகும் உடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.168  pg 3.169  pg 3.170  pg 3.171 
 WIKI_urai Song number: 1068 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1065 - thuyaram aRu nin (common)

thuyara maRunin vaRumai tholaiyu
     mozhiyu mamirtha ...... surapAnam

surapi kuLikai yeLithu peRuka
     thuvaLu memathu ...... pasitheerath

thayiru mamuthu mamaiyu miduka
     savadi kadaka ...... neLikARai

tharuka thakado duruka enumi
     viraku thavirva ...... thorunALE

uyaru nikaril sikari midaRu
     mudalu mavuNar ...... nedumArpum

uruva makara mukara thimira
     vuthathi yuthara ...... mathupeeRa

ayaru mamarar saraNa nikaLa
     muRiya eRiyu ...... mayilveerA

aRivu muramu maRamu niRamu
     mazhaku mudaiya ...... perumALE.

......... Meaning .........

thuyaram aRu(m) nin vaRumai tholaiyum: "All your sufferings will end; your poverty will be gone;

mozhiyum amirtha sura pAnam surapi kuLikai eLithu peRuka: you will be able to easily obtain the famous nectar imbibed by the celestials, the wish-yielding cow KAmathEnu, and the magical globules (that could convert metals into gold);

thuvaLum emathu pasi theerath thayirum amuthum amaiyum iduka: just offer us graciously some curd and rice to relieve us from the hunger that is debilitating;

savadi kadaka neLi kARai tharuka thakadodu uRuka: we shall give you a mystical charm that can deliver golden chain, bracelet, ring and choker which you may keep for yourself"

enum ivviraku thavirvathum oru nALE: - so say many (pseudo-alchemists); will there be a day when I can escape from such deceitful words?

uyaru(m) nikar il sikari midaRum udalum avuNar nedu mArpum uruva: The heart and body of the tall and matchless Mount Krouncha and the large chests of the demons were pierced;

makara mukara thimira uthathi utharam athu peeRa: the bowels of the dark and roaring sea where sharks roam about were torn apart;

ayarum amarar saraNa nikaLa(m) muRiya eRiyum ayil veerA: and the shackles that were tied to to the ankles of the exhausted celestials were shattered when You wielded Your spear, Oh valorous One!

aRivum uramum aRamu(m) niRamum azhakum udaiya perumALE.: You are full of Knowledge, strength, righteousness, radiance and beauty, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1065 thuyaram aRu nin - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]