திருப்புகழ் 1064 குருதி ஒழுகி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1064 kurudhiozhugi  (common)
Thiruppugazh - 1064 kurudhiozhugi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான

......... பாடல் .........

குருதி யொழுகி யழுகு மவல
     குடிலை யினிது ...... புகலாலே

குலவு மினிய கலவி மகளிர்
     கொடிய கடிய ...... விழியாலே

கருது மெனது விரக முழுது
     கலக மறலி ...... அழியாமுன்

கனக மயிலி னழகு பொழிய
     கருணை மருவி ...... வரவேணும்

பரிதி சுழல மருவு கிரியை
     பகிர எறிசெய் ...... பணிவேலா

பணில வுததி யதனி லசுரர்
     பதியை முடுக ...... வரும்வீரா

இரதி பதியை யெரிசெய் தருளு
     மிறைவர் குமர ...... முருகோனே

இலகு கமல முகமு மழகு
     மெழுத வரிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை இனிது புகலாலே
குலவும்
... ரத்தம் ஒழுகி அழுகிப் போகும் துன்பத்துக்கு இடமான
குடிசையாகிய இந்த உடலை இனிமையாகப் பேசும் சொற்களைக்
கொண்டு நெருங்கி உறவாடி,

இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே கருதும் ...
இனிய புணர்ச்சி இன்பம் தரும் பொது மகளிருடைய கொடுமையானதும்
கடுமையானதுமான கண்களையே எண்ணுகின்ற

எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன் ... என்னுடைய
காம இச்சை முற்றிலுமாக என்னுடன் போருக்கு எழும் யமன்
அழிப்பதற்கு முன்பாக,

கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் ...
பொன்னிறமான மயிலின் அழகு பொலிந்து ஒழுக (நீ) அருள் வைத்து
வந்தருள வேண்டும்.

பரிதி சுழல மருவு கிரியை பகிர எறி செய் பணி வேலா ...
சூரியன் சுழற்சி அடையும்படி, கிரெளஞ்ச மலை பிளவுபடச் செலுத்திய
தொழில் அமைந்த வேலினை உடையவனே,

பணில உததி அதனில் அசுரர்பதியை முடுக வரும் வீரா ...
சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரனை ஓட்டி
விரட்ட வந்த வீரனே,

இரதி பதியை எரி செய்து அருளும் இறைவர் குமர
முருகோனே
... ரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய
இறைவராகிய சிவபெருமானுடைய குமரனே, முருகனே,

இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே. ...
விளங்கும் தாமரை போன்ற முகமும், அதன் அழகும் எழுதுதற்கு
முடியாதவையான பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.168  pg 3.169 
 WIKI_urai Song number: 1067 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1064 - kurudhi ozhugi (common)

kuruthi yozhuki yazhaku mavala
     kudilai yinithu ...... pukalAlE

kulavu miniya kalavi makaLir
     kodiya kadiya ...... vizhiyAlE

karuthu menathu viraka muzhuthu
     kalaka maRali ...... azhiyAmun

kanaka mayili nazhaku pozhiya
     karuNai maruvi ...... varavENum

parithi suzhala maruvu kiriyai
     pakira eRisey ...... paNivElA

paNila vuthathi yathani lasurar
     pathiyai muduka ...... varumveerA

irathi pathiyai yerisey tharuLu
     miRaivar kumara ...... murukOnE

ilaku kamala mukamu mazhaku
     mezhutha vAiya ...... perumALE.

......... Meaning .........

kuruthi ozhuki azhukum avala kudilai inithu pukalAlE kulavum: They approach with sweet words and hug this body which is merely a cottage of misery caused by oozing and rotting blood;

iniya kalavi makaLir kodiya kadiya vizhiyAlE karuthum enathu: I keep thinking about the evil and cruel eyes of the whores who provide sweet carnal pleasure;

virakam muzhuthu kalaka maRali azhiyA mun: before my passionate desire is annihilated by Yaman, the God of Death, who is out to confront me,

kanaka mayilin azhaku poliya karuNai maruvi varavENum: You must come to me graciously, mounting the golden peacock of exquisite beauty!

parithi suzhala maruvu kiriyai pakira eRi sey paNi vElA: The sun went on a spin when Mount Krouncha was shattered by the spear You wielded expertly, Oh Lord!

paNila uthathi athanil asurarpathiyai muduka varum veerA: You invaded the sea filled with conch shells and chased off SUran, the head of the demons, Oh valorous One!

irathi pathiyai eri seythu aruLum iRaivar kumara murukOnE: You are the son of Lord SivA who graciously burnt down Manmathan (God of Love), the consort of Rathi, Oh MurugA!

ilaku kamala mukamum azhakum ezhutha ariya perumALE.: Your elegant lotus-like face and its beauty are beyond description, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1064 kurudhi ozhugi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]