திருப்புகழ் 1043 அகல நீளம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1043 agalaneeLam  (common)
Thiruppugazh - 1043 agalaneeLam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
     அரிய மோன மேகோயி ...... லெனமேவி

அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான
     அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச்

சகல வேத னாதீத சகல வாச காதீத
     சகல மாக்ரி யாதீத ...... சிவரூப

சகல சாத காதீத சகல வாச னாதீத
     தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ

விகட தார சூதான நிகள பாத போதூள
     விரக ராக போதார ...... சுரர்கால

விபுத மாலி காநீல முகப டாக மாயூர
     விமல வ்யாப காசீல ...... கவிநோத

ககன கூட பாடீர தவள சோபி தாளான
     கவன பூத ராரூட ...... சதகோடி

களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய ...
இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும்
ஆராய்வதற்கு முடியாத

மோனமே கோயில் என மேவி ... மெளன நிலையே திருக்கோயிலாக
அடைந்து இருந்து

அசையவே க்ரியா பீடம் மிசை புகா ... விளக்கம் தருவதற்காகவே,
கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின்
மேல் ஏற்றி,

மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி ... சிறந்த
மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத்
தூவி,

சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத ... எவ்வகையான
அறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும்
அப்பாற்பட்டதான,

சகல மா க்ரிய அதீத சிவரூப ... எவ்வகையான சிறந்த
கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான,

சகல சாதக அதீத சகல வாசன அதீத ... எவ்விதமான
அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும்
மேம்பட்டதான

தனுவை நாடி மா பூசை புரிவேனோ ... புருவ நடுவில் உள்ள
ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும்
பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?

விகட தார சூதான நிகள பாத போதூள ... மாறுபாடுள்ள,
வஞ்சகம் நிறைந்த பந்தத்தில் வீழ்வதனை அழியும்படித் தூள்
படுத்துபவனே,

விரகர் ராக போதார் அசுரர் கால ... காம நோயுடன் கூடிய
மோகத்தை அனுபவிப்பதிலேயே பொழுது போக்குபவர்களாகிய
அசுரர்களுக்கு நமனாய் நின்று அவர்களை அழித்தவனே,

விபுத மாலிகா நீல முக படாகம் மாயூர ... தேவதாரு மலரின்
மாலையை அணிந்தவனே, நீல நிறப் போர்வை போன்ற உடலைக்
கொண்டதான மயில் வாகனனே,

விமல வ்யாபகா சீல அக விநோத ... பரிசுத்தமானவனே, எங்கும்
நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே,

ககன கூடம் பாடீரம் தவள சோபித ஆளான ... விண்ணுலகில்
உள்ள, சந்தனம் அணிந்துள்ள, வெண்ணிற அழகை உடையதாய்,
(இந்திரனின்) ஏவலைப் புரிவதாய்,

கவனம் பூதரம் ஆரூட ... வேகத்துடன் செல்லக் கூடிய, மலை
போன்ற (ஐராவதம் என்ற) யானையின் மேல் எழுந்தருளி,

சத கோடி களப காம வீர் ... வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரன்
மனம் கலந்து விரும்பும் வீரனே,

வீசு கரம் முக ஆர வேல் வீர ... கதிரொளியை வீசுகின்ற
திருமுகங்களை உடையவனே, கடப்ப மாலை அணிந்தவனே, வேல்
வீரனே,

கருணை மேருவே தேவர் பெருமாளே. ... மேரு மலையை ஒத்த
கருணை உடையவனே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.124  pg 3.125  pg 3.126  pg 3.127 
 WIKI_urai Song number: 1046 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1043 - agala neeLam (common)

akala neeLam yAthAlu moruva rAlu mArAya
     ariya mOna mEkOyi ...... lenamEvi

asaiya vEkri yApeeda misaipu kAma kAnjAna
     aRivi nAtha rAmOtha ...... malarthUvi

sakala vEtha nAtheetha sakala vAsa kAtheetha
     sakala mAkri yAtheetha ...... sivarUpa

sakala sAtha kAtheetha sakala vAsa nAtheetha
     thanuvai nAdi mApUsai ...... purivEnO

vikada thAra cUthAna nikaLa pAtha pOthULa
     viraka rAka pOthAra ...... surarkAla

viputha mAli kAneela mukapa dAka mAyUra
     vimala vyApa kAseela ...... kavinOtha

kakana kUda pAdeera thavaLa sOpi thALAna
     kavana pUtha rArUda ...... sathakOdi

kaLapa kAma veerveesu karamu kAra vElveera
     karuNai mEru vEthEvar ...... perumALE.

......... Meaning .........

akalam neeLam yAthAlum oruvarAlum ArAya ariya: No one can visualise or measure It in terms of breadth, length or any dimension;

mOnamE kOyil ena mEvi: It is the temple of tranquility;

asaiyavE kriyA peedam misai pukA: Its manifestation is worshipped upon a pedestal through oblation;

makA njAna aRivin Athara AmOtha malar thUvi: with great spiritual knowledge, It is worshipped by offering love and bliss as flowers;

sakala vEthana(m) atheetha sakala vAsaka(m) atheetha: It is beyond all kinds of knowledge; It is beyond description by all kinds of words;

sakala mA kriya atheetha sivarUpa: It surpasses all kinds of ritualistic offerings; It is in the form of SivA;

sakala sAthaka atheetha sakala vAsana atheetha: It is of an immeasurable magnitude; Its fragrance is beyond any perceivable scent;

thanuvai nAdi mA pUsai purivEnO: It is a symbol to be perceived in the centre of the region between the eyebrows; as Its seeker, will I be fortunate enough to offer grand worship?

vikada thAra cUthAna nikaLa pAtha pOthULa: You are the destroyer of the precipitous fall into the tantalising and treacherous pit called attachment!

viraka rAka pOthAr asurar kAla: You are the God of Death for those licentious demons who fritter away their time in sensual pleasure!

viputha mAlikA neela muka padAka mAyUra: You wear the garland made of DevathAru flowers! You mount the vehicle of peacock which appears to be wrapped around with a blue shawl!

vimala vyApakA seela aka vinOtha: You are immaculate and omnipresent! Your heart is filled with all virtues! Oh Wonderful Lord!

kakana kUdam pAdeeram thavaLa sOpitha ALAna: He lives in the celestial land; he wears on his body the sandalwood paste; his complexion is white; he carries out the commands (of IndrA);

kavanam pUtharam ArUda: he moves about swiftly; he is the mountain-like elephant (AirAvadham);

satha kOdi kaLapa kAma veera: mounting that elephant, and holding in His hand the weapon, Vajram, is IndrA who greets You with all His heart, Oh valorous One!

veesu karam muka Ara vEl veera: Your faces radiate the sun's rays, Oh Lord! You wear the garland of kadappa flowers! You hold the spear, Oh valorous One!

karuNai mEruvE thEvar perumALE.: Your compassion is comparable to Mount MEru! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1043 agala neeLam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]