திருப்புகழ் 1025 சீதமலம் வெப்பு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1025 seedhamalamveppu  (common)
Thiruppugazh - 1025 seedhamalamveppu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

......... பாடல் .........

சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
     மானபிணி சுற்றி ...... யுடலூடே

சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
     தீதுவிளை விக்க ...... வருபோதில்

தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
     சாகரம தற்கு ...... ளழியாமுன்

தாரணி தனக்கு ளாரண முரைத்த
     தாள்தர நினைத்து ...... வரவேணும்

மாதர்மய லுற்று வாடவடி வுற்று
     மாமயிலில் நித்தம் ...... வருவோனே

மாலுமய னொப்பி லாதபடி பற்றி
     மாலுழலு மற்ற ...... மறையோர்முன்

வேதமொழி வித்தை யோதியறி வித்த
     நாதவிறல் மிக்க ...... இகல்வேலா

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி ... சீதபேதி,
காய்ச்சல், வாதம், மிகுந்துவரும் பித்தம் என்ற நோய்களெல்லாம்
சூழ்ந்துள்ள

உடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வணம் ... இந்த உடலினுள்
இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி,

மிக்க தீதுவிளை விக்க வருபோதில் ... மிகுந்த வலி ஏற்படும்
சமயத்தில்,

தாதையொடு மக்கள் நீதியொடு ... என் தந்தையும், மக்களும் உலக
நியதிப்படி

துக்க சாகரமதற்குள் அழியாமுன் ... துயரக்கடலுள் மூழ்கிப்போய்
அழியுமுன்பு,

தாரணி தனக்கு ளாரண முரைத்த ... இந்த உலகத்தில் வேதங்கள்
போற்றுகின்ற

தாள்தர நினைத்து வரவேணும் ... உனது திருவடிகளைத் தந்தருள
எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும்.

மாதர்மய லுற்று வாடவடி வுற்று ... (ஜீவாத்மாக்காளாகிய)
பெண்களெல்லாம் (பரமாத்மாவாகிய) உன்னழகில் மயங்கி காதலுற்று
வாடும்படி, அழகிய திருவுருவக் காட்சிதந்து

மாமயிலில் நித்தம் வருவோனே ... சிறந்த மயில்மீது நாள்தோறும்
வருபவனே,

மாலும் அயன் ஒப்பி லாதபடி பற்றி ... திருமாலுக்கும், பிரமனுக்கும்,
ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து,

மாலுழலு மற்ற மறையோர்முன் ... அன்பில் மயங்கித் திரியும் மற்றைய
வேத சிரேஷ்டர்களுக்கும் முன்னால்

வேதமொழி வித்தை யோதியறிவித்த நாத ... பிரணவ மந்திரத்தின்
உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதா,

விறல் மிக்க இகல்வேலா ... வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை
உடையவனே,

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி ... முன்னாள் அசுரர்கள்
அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து

மீளவிடு வித்த பெருமாளே. ... தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச்
செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.92  pg 3.93  pg 3.94  pg 3.95 
 WIKI_urai Song number: 1028 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1025 - seedhamalam veppu (common)

seedha malam veppu vAtha migu piththa
     mAna piNi sutri ...... udalUdE

serumuyir thAppi yEgumvaNa mikka
     theedhuviLai vikka ...... varupOdhil

thAdhaiyodu makkaL needhiyodu dhukka
     sAgaram adhaRkuL ...... azhiyAmun

dhAraNi thanakkuL AraNa muraiththa
     thALthara ninaiththu ...... varavENum

mAdhar mayalutru vAdavadi vutru
     mAmayilil niththam ...... varuvOnE

mAlum ayan oppilAdhapadi patri
     mAluzhalum atra ...... maRaiyOrmun

vEdhamozhi vidhdhai Odhi aRiviththa
     nAtha viRal mikka ...... igalvElA

mEl asurar itta dhEvar siRai vetti
     meeLa viduviththa ...... perumALE.

......... Meaning .........

seetha malam veppu vAtha migu piththam: Dysentery, fever, rheumatism, acute biliousness

Ana piNi sutri udalUdE: and similar diseases are afflicting this body;

serumuyir thAppi yEgumvaNa: the life contained therein is about to slip away from the body

mikka theedhuviLai vikka varupOdhil: amidst excruciating distress. At that very moment,

thAdhaiyodu makkaL needhiyodu dhukka sAgaram adhaRkuL azhiyAmun: my father and children are drowned in a sea of grief as is the worldly norm. Before they die,

dhAraNi thanakkuL AraNa muraiththa thALt hara ninaiththu varavENum: kindly consider coming to me to grant Your hallowed feet that are praised by the scriptures of the world!

mAdhar mayalutru vAdavadi vutru: The women (human souls) are in a trance enchanted by the beauty of Your figure (the Supreme Soul);

mAmayilil niththam varuvOnE: mounting the great peacock, You come before them everyday!

mAlum ayan oppilAdhapadi patri mAluzhalum atra maRaiyOrmun: Vishnu, BrahmA and the stalwarts of scripture, who worship You with incomparable devotion and who are free from delusion, were all once

vEdhamozhi vidhdhai Odhi aRiviththa nAtha: taught by You the true significance of VEda ManthrA, Oh Great Master!

viRal mikka igalvElA: You hold the spear, renowned for its immense strength and vigour!

mEl asurar itta dhEvar siRai vetti: You destroyed the prisons in which the demons had previously locked up the celestials

meeLa viduviththa perumALE.: and liberated the DEvAs to return to the Celestial Land, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1025 seedhamalam veppu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]