(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 975 ஏடுக்கொத் தாரலர்  (திருக்குற்றாலம்)
Thiruppugazh 975 EdukkoththAralar  (thirukkutRAlam)
Thiruppugazh - 975 EdukkoththAralar - thirukkutRAlamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

ஏடுக்கொத் தாரலர் வார்குழ
     லாடப்பட் டாடைநி லாவிய
          ஏதப்பொற் றோள்மிசை மூடிய ...... கரமாதர்

ஏதத்தைப் பேசுப ணாளிகள்
     வீசத்துக் காசைகொ டாடிகள்
          ஏறிட்டிட் டேணியை வீழ்விடு ...... முழுமாயர்

மாடொக்கக் கூடிய காமுகர்
     மூழ்குற்றுக் காயமொ டேவரு
          வாயுப்புற் சூலைவி யாதிக ...... ளிவைமேலாய்

மாசுற்றுப் பாசம்வி டாசம
     னூர்புக்குப் பாழ்நர கேவிழு
          மாயத்தைச் சீவியு னாதர ...... வருள்வாயே

தாடுட்டுட் டூடுடு டீடிமி
     டூடுட்டுட் டூடுடு டாடமி
          தானத்தத் தானத னாவென ...... வெகுபேரி

தானொத்தப் பூதப சாசுகள்
     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
          சாகப்பொற் றோகையி லேறிய ...... சதிரோனே

கூடற்கச் சாலைசி ராமலை
     காவைப்பொற் காழிவெ ளூர்திகழ்
          கோடைக்கச் சூர்கரு வூரிலு ...... முயர்வான

கோதிற்பத் தாரொடு மாதவ
     சீலச்சித் தாதியர் சூழ்தரு
          கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏடுக் கொத்து ஆர் அலர் வார் குழல் ஆடப் பட்டு ஆடை
நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர்
...
இதழ்களை உடைய கொத்தான மலர்களைக் கொண்ட நீண்ட கூந்தல்
அசைந்தலைய, பட்டு ஆடை விளங்கும், (ஆடவர்களுக்குத்) துன்பம்
தருவதான அழகிய தோள்கள் மீது மூடிய விஷம் போன்ற விலைமாதர்.

ஏதத்தைப் பேசு பண ஆளிகள் வீசத்துக்கு ஆசை கொ(ண்)டு
ஆடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர்
...
குற்றம் கண்டே பேசும், பணத்தை ஆட்சி செய்வதிலேயே நோக்கம்
வைத்துள்ளவர்கள். ஒரு மாகாணி அளவே ஆசை கொண்டவர்களாக
நடிப்பவர்கள். ஏறிவிட்ட பின் ஏணியை வீழ்த்தித் தள்ளி விடுபவர்கள்.
முழுமையான வஞ்சகர்கள்.

மாடு ஒக்கக் கூடிய காமுகர் மூழ்கு உற்றுக் காயமொடே வரு
வாயுப் புல் சூலை வியாதிகள் இவை மேலாய்
... மாடு போலப்
புணரும் காமம் கொண்டவர்கள் ஆகிய மாதர்கள் வசம் முழுகி அதனால்
உடலில் வந்த இழிவானதான ஒரு வகை வயிற்று உளைவு நோயும், மற்ற
நோய்களும் அதிகப்பட்டு,

மாசுற்றுப் பாசம் விடா சமனூர் புக்குப் பாழ் நரகே விழு
மாயத்தைச் சீவி உன் ஆதரவு அருள்வாயே
... கேடு அடைந்து
இறந்து, பாசக் கயிற்றை விடாத யமனுடைய உலகத்தில் புகுந்து பாழும்
நரகத்தில் விழும் தீமையைச் செதுக்கிக் கழித்து, உன்னுடைய அன்பை
அருள் புரிவாயாக.

தாடுட்டுட் டூடுடு டீடிமி
     டூடுட்டுட் டூடுடு டாடமி
          தானத்தத் தானத னா என வெகு பேரி
... (இவ்வாறு
ஒலிக்கும்) பலவகைப் பேரிகளுடன்,

தானொத்தப் பூத பசாசுகள் வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
சாகப் பொன் தோகையில் ஏறிய சதிரோனே
... ஒத்த குரலில்
பூதங்களும் பேய்களும் ஓலமிடும்படி, சூரர்களுடைய படைகள் இறக்க,
அழகிய மயிலின் மேல் ஏறிய பெருமை வாய்ந்தவனே,

கூடல் கச்சாலை சிராமலை காவைப் பொன் காழி வெளூர்
திகழ் கோடைக் கச்சூர் கருவூரிலும் உயர்வான
... மதுரை, கச்சிக்
கச்சாலை, திருசிராப் பள்ளி, திருவானைக்கா, அழகிய சீகாழி,
வைத்தீசுரன் கோயில், விளங்கும் வல்லக் கோட்டை, திருக்கச்சூர், கருவூர்
ஆகிய தலங்களிலும் மேன்மை வாய்ந்ததும்,

கோது இல் பத்தாரொடு மா தவ சீலச் சித்தாதியர் சூழ் தரு
கோலக் குற்றாலம் உலாவிய பெருமாளே.
... குற்றமில்லாத
பக்தர்களுடன் பெரிய தவம் செய்த பரிசுத்தமான சித்தராகிய பெரியோர்கள்
கருதி வலம் வந்ததுமான அழகிய குற்றாலத்தில்* உலவுகின்ற பெருமாளே.


* குற்றாலம் தென்காசிக்கு அருகே 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1389  pg 2.1390  pg 2.1391  pg 2.1392 
 WIKI_urai Song number: 979 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 975 - Edukkoth thAralar (thirukkutRAlam)

Edukkoth thAralar vArkuzha
     lAdappat tAdaini lAviya
          Ethappot ROLmisai mUdiya ...... karamAthar

Ethaththaip pEsupa NALikaL
     veesaththuk kAsaiko dAdikaL
          ERittit tENiyai veezhvidu ...... muzhumAyar

mAdokkak kUdiya kAmukar
     mUzhkutRuk kAyamo dEvaru
          vAyuppuR cUlaivi yAthika ...... LivaimElAy

mAsutRup pAsamvi dAsama
     nUrpukkup pAzhnara kEvizhu
          mAyaththaic cheeviyu nAthara ...... varuLvAyE

thAduttut tUdudu deedimi
     dUduttut tUdudu dAdami
          thAnaththath thAnatha nAvena ...... vekupEri

thAnoththap pUthapa sAsukaL
     vAyvittuc cUrarkaL sEnaikaL
          sAkappot ROkaiyi lERiya ...... sathirOnE

kUdaRkac chAlaisi rAmalai
     kAvaippoR kAzhive LUrthikazh
          kOdaikkac cUrkaru vUrilu ...... muyarvAna

kOthiRpath thArodu mAthava
     seelacchith thAthiyar cUzhtharu
          kOlakkut RAlamu lAviya ...... perumALE.

......... Meaning .........

Eduk koththu Ar alar vAr kuzhal Adap pattu Adai nilAviya Etham pon thOL misai mUdiya kara mAthar: Their long hair, adorned with bunches of flowers full of petals, waving about, these whores, clad in silk sarees, are out to make men feel miserable with their poison-filled beautiful shoulders.

Ethaththaip pEsu paNa ALikaL veesaththukku Asai ko(N)du AdikaL ERittu ittu ENiyai veezh vidu muzhu mAyar: They always find fault with others and are obsessed with being in command of money. They feign love only to the extent of a negligible fraction. Once they climb to the top through the ladder, they deliberately push the ladder away. They are totally treacherous.

mAdu okkak kUdiya kAmukar mUzhku utRuk kAyamodE varu vAyup pul cUlai viyAthikaL ivai mElAy: When they are active sexually, they behave like bulls; having been deeply immersed in immoral acts with such women, I have contracted the worst pain in my stomach and other diseases;

mAsutRup pAsam vidA samanUr pukkup pAzh narakE vizhu mAyaththaic cheevi un Atharavu aruLvAyE: not letting me deteriorate any further, protecting me from entering the worst hell reigned by Yaman (the God of Death) who holds on to the rope of bondage and wiping away all my evil, kindly grant me Your graceful love, Oh Lord!

thAduttut tUdudu deedimi
     dUduttut tUdudu dAdami
          thAnaththath thAnatha nA ena veku pEri:
A variety of drums were beaten (to this meter), as

thAnoththap pUtha pasAsukaL vAyvittuc cUrarkaL sEnaikaL sAkap pon thOkaiyil ERiya sathirOnE: devils and fiends howled loudly at the same pitch when the armies of demons perished and You mounted the beautiful peacock, Oh Great One!

kUdal kacchAlai sirAmalai kAvaip pon kAzhi veLUr thikazh kOdaik kacchUr karuvUrilum uyarvAna: This town is more famous than Madhurai, KAncheepuram, ThiruchchirAppaLLi, ThiruvAnaikkA, the pretty town SeekAzhi, VaitheeswarankOvil, the glorious town VallakkOttai, ThirukkacchUr and KaruvUr;

kOthu il paththArodu mA thava seelac chiththAthiyar cUzh tharu kOlak kutRAlam ulAviya perumALE.: many unblemished devotees along with great people, with pure heart, who have performed immense penance, thoughtfully circumambulate Your shrine in this beautiful place, KutRAlam*, which is Your abode, Oh Great One!


* KutRAlam is about 5 miles from ThenkAsi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 975 Edukkoth thAralar - thirukkutRAlam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top