திருப்புகழ் 916 வாளின் முனை  (வயலூர்)
Thiruppugazh 916 vALinmunai  (vayalUr)
Thiruppugazh - 916 vALinmunai - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனதன தந்தன தந்தன
     தான தனதன தந்தன தந்தன
          தான தனதன தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
     ராஜ நடையினு மம்பதி னும்பெரு
          வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான

வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
     வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
          வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந்

தூளி படுநவ குங்கும முங்குளி
     ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
          சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந்

தோயு மளறெனி தம்பமு முந்தியு
     மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
          சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ

காளி திரிபுரை யந்தரி சுந்தரி
     நீலி கவுரிப யங்கரி சங்கரி
          காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி

காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
     ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
          கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது

வேளி னிரதிய ருந்ததி யிந்திர
     தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
          மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே

வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
     தீர வருள்தரு கந்தநி ரந்தர
          மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும்
அம்பு அதினும் பெரு வாதை வகை செய் கரும் க(ண்)ணும்
...
வாளின் நுனியைக் காட்டிலும், விஷத்தைக் காட்டிலும், கொடிய யம
ராஜனுடைய தொழிலைக் காட்டிலும், அம்பைக் காட்டிலும் பெரிய
வேதனை வகைகளைச் செய்கின்ற கரிய கண்ணும்,

எங்கணும் அரிதான வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்)
வாயு(ம்)நகை முக வெண் ப(ல்)லு(ம்) நண்புடன் வாரும்
இரும் எனும் இன் சொ(ல்)லும்
... எங்கும் கிட்டுதற்கு அரிய
பாற்கடல் அமுது வெளிப்பட்டு வடியும் சிவந்த வாயும், சிரித்த முகமும்,
வெண்மையான பற்களும், நட்பைக் காட்டி வாருங்கள், அமருங்கள்
எனக் கூறுகின்ற இனிமையான மொழியும்,

மிஞ்சிய பனி நீரும் தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம்
அகில் புழுகும் புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையும்
அம் கையும்
... மிகுந்த பன்னீரும், பூந்தாதுடன் புதிய செஞ்சாந்தும்,
குளிர்ச்சி தரும் அகிலும், புனுகு சட்டமும் அணிகின்ற ஆடம்பரத்துடன்
கூடிய ஒளி பெருகுவதான மார்பகங்களும், அழகிய கைகளும்,

எவரேனும் தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை
குடி கொள் குடம்பையுள் மன் பயில் சூளையரை எதிர் கண்டு
மருண்டிடல் ஒழிவேனோ
... யாராயிருந்த போதிலும் தோய்கின்ற
சேறு என்று சொல்லக் கூடிய பெண்குறியும், கொப்பூழும், உலக மாயை
குடி கொண்டுள்ள இந்த உடலில் நன்கு காலம் கழிக்கும் வேசியர்களை
எதிரில் பார்த்து நான் மருட்சி அடைதலை ஒழிக்க மாட்டேனோ?

காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி காதல்
மனைவி பரம்பரை அம்பிகை
... காளி, மும்மூர்த்திகளுக்கும்
மூத்தவள், பராகாச வடிவை உடையவள், அழகி, கரிய நிறத்தி, கெளரி,
பயத்தை போக்குபவள், சங்கரி, கருணை நிறைந்த சிவாம்பிகை, சுத்த
மாயையாகிய சக்தி, துர்க்கை, திரிபுரத்துப் பகைவர்களை எரித்த சிவனது
ஆசை மனையாட்டி, முழு முதல் தேவியான அம்பிகை,

ஆதி மலை மகள் மங்கலை பிங்கலை கான நடனம் உகந்தவள்
செம் திரு அயன் மாது வேளின் இரதி அருந்ததி இந்திர
தேவி முதல்வர் வணங்கும் த்ரி அம்பகி மேக வடிவர் பின்
வந்தவள் தந்து அருள் இளையோனே
... ஆதி இமவானின் மகள்,
என்றும் சுமங்கலியாக இருப்பவள், பொன்னிறம் படைத்தவள்,
(சுடு)காட்டில் நடனமாட விருப்பம் கொண்டவள், செம்மையான லக்ஷ்மி,
பிரமன் தேவி சரஸ்வதி, மன்மதன் மனைவியாகிய ரதி, (வசிட்டர்
மனைவியாகிய) அருந்ததி, இந்திர(ன்) தேவி இந்திராணி முதலான
தேவதைகள் வணங்கும் முக்கண்ணி, மேக நிறம் கொண்ட திருமாலின்
தங்கை (ஆகிய பார்வதி) பெற்றருளிய இளையவனே,

வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு கந்த
நிரந்தர மேலை வயலை உகந்து உ(ள்)ள(ம்) நின்று அருள்
பெருமாளே.
... வேலையும், மயிலையும் நினைக்கின்ற
அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள் பாலிக்கும் கந்தனே,
முடிவே இல்லாத மேலை வயலூர்* என்னும் தலத்தில் மனம் மகிழ்ந்து
நின்றருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1237  pg 2.1238  pg 2.1239  pg 2.1240 
 WIKI_urai Song number: 920 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 916 - vALin munai (vayalUr)

vALin munaiyinu nanjinum venjama
     rAja nadaiyinu mampathi numperu
          vAthai vakaiseyka rungaNu mengaNu ...... marithAna

vAri yamuthupo sinthuka sinthase
     vAyu nakaimuka veNpalu naNpudan
          vAru mirumenu minsolu minjiya ...... panineerum

thULi padunava kunguma munguLi
     rAra makilpuzhu kumpunai samprama
          sOthi vaLarvana kongaiyu mangaiyu ...... mevarEnun

thOyu maLaReni thampamu munthiyu
     mAyai kudikoLku dampaiyuL manpayil
          cULai yaraiyethir kaNduma ruNdida ...... lozhivEnO

kALi thiripurai yanthari sunthari
     neeli kavuripa yangari sangari
          kAru Niyasivai kuNdali chaNdikai ...... thripurAri

kAthal manaivipa ramparai yampikai
     Athi malaimakaL mangalai pingalai
          kAna nadanamu kanthavaL senthiru ...... ayanmAthu

vELi nirathiya runthathi yinthira
     thEvi muthalvarva Nanguthri yampaki
          mEka vadivarpin vanthavaL thantharu ...... LiLaiyOnE

vElu mayiluni nainthavar thanthuyar
     theera varuLtharu kanthani ranthara
          mElai vayalaiyu kanthuLa ninRaruL ...... perumALE.

......... Meaning .........

vALin munaiyinum nanjinum vem sama rAja nadaiyinum ampu athinum peru vAthai vakai sey karum ka(N)Num: Sharper than the tip of the sword and more venomous than poison, severer than the act of the evil God of Death, Yaman, and fiercer than the arrow, their black eyes inflict many a grievous wound;

engaNum arithAna vAri amuthu posinthu kasintha se(v) vAyu(m)nakai muka veN pa(l)lu(m) naNpudan vArum irum enum in so(l)lum: from their reddish mouth oozes the saliva that is like nectar from the milky ocean, available nowhere else; with smiling face, displaying their white teeth, they invite with intimate and sweet words of greeting saying "Come on in and take your seat";

minjiya pani neerum thULi padu nava kungumamum kuLir Aram akil puzhukum punai samprama sOthi vaLarvana kongaiyum am kaiyum: their bosom, lavishly splattered with rose water and smeared with new vermillion sprinkled with pollen of flowers, cool incence and civet, radiate with pompous shine, and their hands are beautiful;

evarEnum thOyum aLaRu ena nithampamum unthiyum mAyai kudi koL kudampaiyuL man payil cULaiyarai ethir kaNdu maruNdidal ozhivEnO: their genital and navel are the slush where any one could soak themselves in; all the earthly delusions dwell in their body, and these whores while away their time enjoying this body; will I ever get rid of the hallucination that I suffer as and when confronted by these whores?

kALi thiripurai anthari sunthari neeli kavuri payangari sangari kAruNiya sivai kuNdali chaNdikai thripurAri kAthal manaivi paramparai ampikai: She is KALi, superior to the Trinity; She has the form of the stratosphere; She is beautiful; She is black; She is Gowri, who removes fear; She is Sankari; She is the compassionate Mother Sivai; She is Shakti, the pure personification of delusion; She is Durga; She is the beloved consort of Lord SivA who burnt down His enemies of Thiripuram; She is the consummate and Primeval Goddess Mother;

Athi malai makaL mangalai pingalai kAna nadanam ukanthavaL sem thiru ayan mAthu vELin irathi arunthathi inthira thEvi muthalvar vaNangum thri ampaki mEka vadivar pin vanthavaL thanthu aruL iLaiyOnE: She is the daughter of the ancient Mount HimavAn; She is the One wearing the holy thread of marriage around Her neck for ever; Her complexion is golden hue; She loves to dance on the cremation ground; She is the three-eyed Goddess worshipped by Lakshmi of a reddish complexion, Saraswathi the consort of Lord Brahma, Rathi the consort of Manmathan, Arundhathi (the spouse of Sage Vasishtar), IndirAni the queen of Indra and other deities; She is the younger sister of Lord VishNu of the hue of the black cloud; and You are the younger son of that PArvathi, Oh Lord!

vElum mayilum ninainthavar tham thuyar theera aruL tharu kantha niranthara mElai vayalai ukanthu u(L)La(m) ninRu aruL perumALE.: Removing the distress of Your devotees who contemplate on Your spear and peacock, You shower upon them Your grace, Oh KandhA! In this immortal town of West VayalUr*, You have Your abode with relish, graciously blessing all, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 916 vALin munai - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]