திருப்புகழ் 913 நெய்த்த சுரி  (வயலூர்)
Thiruppugazh 913 neyththasuri  (vayalUr)
Thiruppugazh - 913 neyththasuri - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தனதன தனனா தனனா
     தத்த தனதன தனனா தனனா
          தத்த தனதன தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
     பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
          நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும்

நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
     சுத்த மிடறது வளையோ கமுகோ
          நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந்

தெய்த்த இடையது கொடியோ துடியோ
     மிக்க திருவரை அரவோ ரதமோ
          இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய்

இச்சை விரகுடன் மடவா ருடனே
     செப்ப மருளுட னவமே திரிவேன்
          ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே

புத்த ரமணர்கள் மிகவே கெடவே
     தெற்கு நரபதி திருநீ றிடவே
          புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன்

புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
     கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
          பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே

சத்த முடையஷண் முகனே குகனே
     வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
          சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ்

சக்ர தரஅரி மருகா முருகா
     உக்ர இறையவர் புதல்வா முதல்வா
          தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல்
சிலையோ பிறையோ நெட்டை இணை விழி கணையோ
பிணையோ
... எண்ணெய்ப் பசை கொண்டதும் சுருண்டதுமான கூந்தல்
கரு மணலோ, மேகமோ? தாமரை மலரின் நறு மணம் வீசும் நெற்றி
வில்லோ, பிறைச் சந்திரனோ? நீண்ட இரண்டு கண்களும் அம்போ,
மானோ?

இனிது ஊறும் நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த
மிடறு அது வளையோ கமுகோ நிற்கும் இள முலை குடமோ
மலையோ
... இனிமையுடன் ஊறி நெகிழ்ந்து வரும் வாயூறலாகிய
அமுதத்தைத் தரும் வாயிதழ் பழமோ, பவளமோ? பரிசுத்தமான கழுத்து
சங்கோ, கமுக மரமோ? தாழாது நிற்கும் இள மார்பு குடமோ, மலையோ?

அறவே தேய்ந்து எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க
திரு அரை அரவோ ரதமோ இப் பொன் அடி இணை மலரோ
தளிரோ என மாலாய்
... அடியோடு தேய்ந்து போய் இளைத்த இடுப்பு
கொடியோ, உடுக்கையோ? சிறந்த பெண்குறி பாம்போ, ரதமோ? இந்த
அழகிய திருவடிகள் இரண்டும் பூவோ, தளிரோ? என்றெல்லாம் மோகம்
கொண்டவனாய்,

இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே
திரிவேன் ரத்ந பரிபுர(ம்) இரு கால் ஒரு கால் மறவேனே
...
காம இச்சையுடன் விலைமாதர்களுடன் பேசுதற்கு அந்த மயக்கமாகவே
வீணாகத் திரிகின்ற நான், ரத்தினச் சிலம்பு அணிந்த உன் இரண்டு
திருவடிகளையும் ஒரு காலும் மறக்க மாட்டேன்.

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திரு நீறு
இடவே புக்க அனல் வயம் மிக ஏடு உயவே
... புத்தர்கள்,
சமணர்கள் மிகவும் அழிவுற, தென் பாண்டிய நாட்டு மன்னன் திரு நீறு
இட, மூட்டிய நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரி படாது
பச்சையாய்) ஊறு இல்லாது விளங்க,

உமையாள் தன் புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ
முனி பிரமா புரம் வாழ் பொற்ப கவுணியர் பெருமான்
உருவாய் வருவோனே
... உமையம்மையின் பிள்ளை என்று
சொல்லும்படி இசைத் தமிழால் இயற்றப்பட்ட நூலாகிய வேதம் அனைய
தேவாரத்தை உணர்ந்து ஓதிய தவ முனியே, சீகாழியில் வாழ்ந்த புகழ்பெற்ற
கவுணியர் குலத்தைச் சேர்ந்த பெருமான் திருவுருவத்துடன், திருஞான
சம்பந்தராய் வந்தவனே,

சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர்
அயிலா மயிலா சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி
கூரும் சக்ரதர அரி மருகா முருகா
... சக்தி வாய்ந்த அறுமுகனே,
குகனே, மலைகளில் வீற்றிருக்கும் வேலனே, ஒளி வீசும் வேலாயுதனே,
மயில் வாகனனே, சக்தி கணபதியின் தம்பியே, என்றும் எங்கும்
உள்ளவனே, ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே,
முருகனே,

உக்ர இறையவர் புதல்வா முதல்வா தட்பம் உள தட வயலூர்
இயலூர் பெருமாளே.
... சினம் மிகுந்த இறையனார் சிவபெருமானின்
மகனே, குளிர்ச்சி பொருந்திய நீர் நிலைகள் உள்ள வயலூரில்* தகுதியுடன்
வீற்றிருக்கும் பெருமாளே.


** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1229  pg 2.1230  pg 2.1231  pg 2.1232 
 WIKI_urai Song number: 917 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 913 - neyththa suri (vayalUr)

neyththa curikuzha laRalO mukilO
     pathma naRunuthal silaiyO piRaiyO
          nettai yiNaivizhi kaNaiyO piNaiyO ...... inithURum

nekka amuthithazh kaniyO thuvarO
     suththa midaRathu vaLaiyO kamukO
          niRku miLamulai kudamO malaiyO ...... aRavEthEyn

theyththa idaiyathu kodiyO thudiyO
     mikka thiruvarai aravO rathamO
          ippo nadiyiNai malarO thaLirO ...... enamAlAy

icchai virakudan madavA rudanE
     seppa maruLuda navamE thirivEn
          rathna paripura irukA lorukAl ...... maRavEnE

puththa ramaNarkaL mikavE kedavE
     theRku narapathi thirunee RidavE
          pukka analvaya mikaE duyavE ...... umaiyALthan

puthra nenaisai pakarnUl maRainUl
     katRa thavamuni piramA puramvAzh
          poRpa kavuNiyar perumA nuruvAy ...... varuvOnE

saththa mudaiyashaN mukanE gukanE
     veRpi leRisuda rayilA mayilA
          saththi kaNapathi yiLaiyA yuLaiyA ...... yoLikUrum

chakra tharaari marukA murukA
     ukra iRaiyavar puthalvA muthalvA
          thatpa muLathada vayalU riyalUr ...... perumALE.

......... Meaning .........

neyththa curi kuzhal aRalO mukilO pathma naRu nuthal silaiyO piRaiyO nettai iNai vizhi kaNaiyO piNaiyO: "Is their greasy and curly hair dark sand or black cloud?

inithu URum nekka amuthu ithazh kaniyO thuvarO suththa midaRu athu vaLaiyO kamukO niRkum iLa mulai kudamO malaiyO: Are their sweet and succulent lips that proffer nectar-like saliva, fruit or coral? Is their pure neck conch or betelnut tree? Is their erect and youthful breast pot or mountain?

aRavE thEynthu eyththa idai athu kodiyO thudiyO mikka thiru arai aravO rathamO ip pon adi iNai malarO thaLirO ena mAlAy: Is their slender waist that looks totally worn out, creeper or a hand-drum? Is their distinguished genital a snake or a chariot? Are their two lovely feet, flowers or leaf-buds?" - these are the doubts in my passion-filled mind;

icchai virakudan madavArudanE seppa maruL udan avamE thirivEn rathna paripura(m) iru kAl oru kAl maRavEnE: dazed with a lustful desire, I have been roaming in vain to make conversation with those whores; nonetheless, I will never forget Your two hallowed feet adorned with anklets embedded with gems, Oh Lord!

puththar amaNarkaL mikavE kedavE theRku narapathi thiru neeRu idavE pukka anal vayam mika Edu uyavE: Completely annihilating the buddhists and samaNAs, offering the holy ash to the King of Southern PAndiya kingdom and making the palm-leaf glow intact (remaining fresh and without charring) even though it was placed in fire,

umaiyAL than puthran ena isai pakar nUl maRai nUl katRa thava muni piramA puram vAzh poRpa kavuNiyar perumAn uruvAy varuvOnE: You came as the child of Goddess UmA and composed soulful and musical hymns (ThEvAram) in Tamil, that are comparable to the VEdic scriptures, Oh Great sage! You came to this world in SeekAzhi in the lineage of famous KavuNiyars taking the great form of ThirugnAna Sambandhar, Oh Lord!

saththam udaiya shaNmuganE guganE veRpil eRi sudar ayilA mayilA saththi kaNapathi iLaiyAy uLaiyAy oLi kUrum chakrathara ari marukA murukA: Oh Powerful Lord with six hallowed faces, Oh GuhA, Oh Lord with the spear residing in many mountains, Oh Lord with a dazzling spear, Oh Lord who mounts the peacock as Your vehicle, Oh Younger Brother of the Powerful Deity GaNapathi, Oh Omnipresent and Immortal One, Oh Nephew of the great Lord VishNu who holds the bright disc as His weapon, Oh MurugA,

ukra iRaiyavar puthalvA muthalvA thatpam uLa thada vayalUr iyalUr perumALE.: and Oh Son of the ferociously angry Lord SivA! You have majestically taken Your seat in VayalUr*, full of cool ponds, Oh Great One!


* VayalUr was the capital of Rajagembeera NAdu, a section of the ChOzha NAdu, where AruNagirinAthar got the boon of singing Thiruppugazh daily. VayalUr is about 6 miles southwest of ThiruchirAppaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 913 neyththa suri - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]