திருப்புகழ் 904 என்னால் பிறக்கவும்  (வயலூர்)
Thiruppugazh 904 ennAlpiRakkavum  (vayalUr)
Thiruppugazh - 904 ennAlpiRakkavum - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தன்னா தனத்தன தன்னா தனத்தன
     தன்னா தனத்தன ...... தந்ததான

......... பாடல் .........

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே

கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

என்னால் பிறக்கவும் ... என் செயலால் நான் இவ்வுலகில்
பிறப்பதற்கும்,

என்னால் இறக்கவும் ... என் திறத்தால் நான் இறப்பதற்கும்,

என்னால் துதிக்கவும் ... என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும்,

கண்களாலே என்னால் அழைக்கவும் ... என் கண்கொண்டு
மற்றவரை நான் அழைப்பதற்கும்,

என்னால் நடக்கவும் ... என் செயலால் என் கால்கொண்டு
நான் நடப்பதற்கும்,

என்னால் இருக்கவும் ... என் திறம் கொண்டு நான்
ஓரிடத்தில் இருப்பதற்கும்,

பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் ... மாதர், வீடு இவற்றை
நான் இன்புற்று சுகிப்பதற்கும்,

என்னால் முசிக்கவும் ... வேண்டுதல் வேண்டாமை காரணமாக
நான் நலிவுற்று மெலிவதற்கும்,

என்னால் சலிக்கவும் ... இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு
அடைவதற்கும்,

தொந்தநோயை என்னால் எரிக்கவும் ... வினையின் வசமாக வரும்
நோய்களை நான் பொசுக்குவதற்கும்,

என்னால் நினைக்கவும் ... பல நினைவுகளையும் நான் இங்கு
நினைப்பதற்கும்,

என்னால் தரிக்கவும் ... இன்ப துன்பங்களை நான் தாங்கிக்
கொள்வதற்கும்,

இங்கு நான் ஆர் ... இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம்
உண்டு?)

கன்னார் உரித்த என் மன்னா ... என் நெஞ்சக் கல்லிலிருந்து நார்
உரிப்பது போலக் கசியச் செய்த அரசே,

எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே ... செவிக்கு நல்ல
அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே,

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ ... உன்னைக் கற்றறியார்
மனத்தில் தங்காத மனத்தோனே,

கண்ணாடியில் தடம் கண்டவேலா ... கண்ணாடி போல் தெளிவான
தடாகத்தை வேலால் கண்டவனே*,

மன்னான தக்கனை முன்னாள் ... அரசனாக விளங்கிய
தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள்

முடித்தலை வன்வாளியிற் கொளும் ... அவனது கிரீடம் அணிந்த
தலையை கொடிய அம்பால் கொய்த

தங்கரூபன் மன்னா ... பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு
குருராஜனே,

குறத்தியின் மன்னா ... குறத்தி வள்ளியின் தலைவனே,

வயற்பதி மன்னா ... வயலூரின்** அரசனே,

முவர்க்கொரு தம்பிரானே. ... பிரமன், திருமால், சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.


* வயலூரில் முருகன் தன் சக்தி வேலை ஓரிடத்தில் பாய்ச்சி அங்கு ஒரு தடாகத்தை
உண்டாக்கினான். அத்தடாகம் சக்தி தீர்த்தம் எனப்படும். அதன் நீர் பளிங்கு
போன்று தெளிவானது.


** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1207  pg 2.1208  pg 2.1209  pg 2.1210  pg 2.1211  pg 2.1212 
 WIKI_urai Song number: 908 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 904 - ennAl piRakkavum (vayalUr)

ennAl piRakkavum ennAl iRakkavum
     ennAl thudhikkavum ...... kaNgaLAlE

ennAl azhaikkavum ennAl nadakkavum
     ennAl irukkavum ...... peNdir veedu

ennAl sukikkavum ennAl musikkavum
     ennAl salikkavum ...... thondha nOyai

ennAl erikkavum ennAl ninaikkavum
     ennAl tharikkavum ...... ingu nAnAr

kannAr uriththa en mannA enakku nal
     karNA mirthap padham ...... thandha kOvE

kallAr manath udan illA manath thava
     kaNNAdi yitradam ...... kaNda vElA

mannAna thakkanai munnAL mudith thalai
     vanvALi yiRkoLum ...... thanga rUpan

mannA kuRaththiyin mannA vayaRpadhi
     mannA muvarkkoru ...... thambirAnE.

......... Meaning .........

ennAl piRakkavum ennAl iRakkavum: At my will, I can take birth and die in this world.

ennAl thudhikkavum: At my will, I can worship.

kaNgaLAlE ennAl azhaikkavum: I can beckon anyone with my eyes at my will.

ennAl nadakkavum ennAl irukkavum: Of my own accord, I can walk and stay in any place.

peNdir veedu ennAl sukikkavum: Women and homes can be enjoyed by me at my pleasure.

ennAl musikkavum: I can become weak and thin due to my desires and prejudices.

ennAl salikkavum: I can be easily satiated and fed up.

thondha nOyai ennAl erikkavum: I can burn all the diseases arising from my Karma.

ennAl ninaikkavum: All the thoughts I want, I can freely think myself.

ennAl tharikkavum: I can bear pleasures and pains as they come.

ingu nAnAr: Who am I to do all these things on this earth? (implying, I am a NOBODY).

kannAr uriththa en mannA: Just like pulling turnips from stone, which is my heart, You are able to make my heart melt, Oh My King!

enakku nal karNA mirthap padham thandha kOvE: Your preaching feels like Divine Nectar in my ears, Oh My Lord!

kaNNAdi yitradam kaNda vElA: With Your spear You created a pond (at VayalUr) with crystal clear water!*

mannAna thakkanai munnAL: When once Dhaksha PrajApathi performed Yagna (sacrificial rite)

mudith thalai vanvALi yiRkoLum thanga rUpan: SivA of golden body severed his crowned head with a fierce arrow (because of the insults heaped on SivA by Dhaksha);

manna: You are that SivA's Master, Oh Lord!

kuRaththiyin mannA: You are also the Lord of VaLLi, the damsel of KuRavAs!

vayaRpadhi mannA: You are the King at VayalUr**!

muvarkkoru thambirAnE.: You are the incomparable Leader of the Trinity (BrahmA, Vishnu and SivA), Oh Great One!


* At VayalUr, Murugan pierced the earth with his Shakthi VEl (spear) and created a pond, with crystal clear water. Even now, it is seen and known as Shakthi Theerththam.


** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 904 ennAl piRakkavum - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]