திருப்புகழ் 894 நீரிழிவு குட்டம்  (குறட்டி)
Thiruppugazh 894 neerizhivukuttam  (kuRatti)
Thiruppugazh - 894 neerizhivukuttam - kuRattiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனத்த தான தானன தனத்த தான
     தானன தனத்த தான ...... தனதான

......... பாடல் .........

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
     நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள்

நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
     நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ

பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
     பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய்

பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
     பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ

நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
     நாயக ரிடத்து காமி ...... மகமாயி

நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
     நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி

வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
     வாணுத லளித்த வீர ...... மயிலோனே

மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள்
குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்
... நீர் இழிவு, குஷ்ட நோய்,
கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர்
நோய், சுர நோய், மற்ற நோய்கள்,

வேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு ... வேர்
ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால்
படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு.

நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ ... நெடிதாய்ப் பரவி
இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய

பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி
இயற்று பாவை
... பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம்
மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால்
ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை.

நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை
புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ
...
நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள்
உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண்
பொழுது போக்கித் திரிவேனோ?

நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து
காமி மகமாயி
... துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப்* புரிந்த தேவி,
ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான
சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி,

நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி
நீலி திரிசூலி
... நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம்
உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச்
சூலத்தைக் கொண்டவள்,

வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள்
நுதல் அளித்த வீர மயிலோனே
... கச்சு அணிந்த மார்பகங்களை
உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத்
தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி
தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே,

மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை ...
மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும்
கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும்

வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. ... அழகாக
வாய்ந்துள்ள குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.


** குறட்டி புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1179  pg 2.1180  pg 2.1181  pg 2.1182 
 WIKI_urai Song number: 898 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 894 - neerizhivi kuttam (kuRatti)

neerizhi vukutta meeLai vAthamodu piththa mUla
     neeLkuLir vethuppu vERu ...... muLanOykaL

nEruRu puzhukkaL kUdu nAnmuka neduththa veedu
     neediya viraththa mULai ...... thasaithOlsee

pAriya navaththu vAra nARumu malaththi lARu
     pAypiNi yiyatRu pAvai ...... narinAypEy

pARodu kazhukkaL kUkai thAmivai pusippa thAna
     pAzhuda leduththu veeNi ...... luzhalvEnO

nAraNi yaRaththi nAri ARusa mayaththi pUtha
     nAyaka ridaththu kAmi ...... makamAyi

nAdaka nadaththi kOla neelava ruNaththi vEtha
     nAyaki yumaicchi neeli ...... thiricUli

vAraNi mulaicchi njAna pUraNi kalaicchi nAka
     vANutha laLiththa veera ...... mayilOnE

mAdama thilmuththu mEdai kOpura maNaththa sOlai
     vAkuLa kuRatti mEvu ...... perumALE.

......... Meaning .........

neerizhivu kuttam eeLai vAthamodu piththa(m) mUlam neeL kuLir vethuppu vERum uLa nOykaL: Diabetes, leprosy, phlegm, gastritis, biliousness, disease caused by chillness, high temperature and other diseases

vEr uRu puzhukkaL kUdu(m) nAn mukan eduththa veedu: are deeply rooted in this house (this body) created by BrahmA, which has become the haven for all worms.

neediya iraththa(m) mULai thasai thOl see: It consists of widely circulating blood, brain, flesh, skin and puss;

pAriya navath thuvAra nARum mu(m)malaththil ARu pAy piNi iyatRu pAvai: it is a corpulent puppet containing nine portals*, full of stench, and is subject to many diseases caused by the three sludges, namely, arrogance, karma and delusion;

nari nAy pEy pARodu kazhukkaL kUkai thAm ivai pusippathAnapAzh udal eduththu veeNil uzhalvEnO: eventually it is going to be preyed upon by jackals, dogs, devils, eagles and vultures; why should I carry this wretched body and while away my time roaming about?

nAraNi aRaththin nAri ARu samayaththi pUtha nAyakaridaththu kAmi makamAyi: She is Durga; She is the Goddess who carried out the thirty-two dharmas** (religious duties); She belongs to the six branches of religion; She is concorporate with relish on the left side of Lord SivA who is the leader of all fiends; She is the Great Mother;

nAdaka nadaththi kOla neela varuNaththi vEtha nAyaki umaicchi neeli thiricUli: She is a Great Dancer; Her complexion is beautiful and blue; She presides over all the vEdAs; She is Mother UmA and KALi, holding the trident in Her hand;

vAr aNi mulaicchi njAna pUraNi kalaicchi nAka vAL nuthal aLiththa veera mayilOnE: She wears tight-fitting blouse over Her bosom; Her Knowledge is absolute and complete; She is the leader of all arts; She is Mother PArvathi with a dazzling forehead; and You are Her Son, Oh valorous One, mounting the peacock!

mAda mathil muththu mEdai kOpuram maNaththa sOlai: There are many terraces, castle-walls, raised platforms studded with pearls, temple-towers and groves exuding fragrance in

vAku uLa kuRatti mEvu(m) perumALE.: this lovely town, KuRatti***, which is Your abode, Oh Great One!


* Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.


** KuRatti is situated near PudhukkOttai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 894 neerizhivu kuttam - kuRatti

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]