திருப்புகழ் 888 வீங்கு பச்சிள  (திருப்பூந்துருத்தி)
Thiruppugazh 888 veengkupachchiLa  (thiruppUndhuruththi)
Thiruppugazh - 888 veengkupachchiLa - thiruppUndhuruththiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்த தத்தன தானா தானன
     தாந்த தத்தன தானா தானன
          தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான

......... பாடல் .........

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
     சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர
          வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ...... உண்டுதோயா

வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன
     வாஞ்சை யிற்களை கூரா வாள்விழி
          மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி

ஓங்கு மைக்குழல் சாதா வீறென
     வீந்து புட்குரல் கூவா வேள்கலை
          யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு ...... யங்குமாகா

ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை
     தீர்ந்து னக்கெளி தாயே மாதவ
          மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே

தாங்கு நிற்சரர் சேனா நீதரு
     னாங்கு ருத்ரகு மாரா கோஷண
          தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா

சாங்கி பற்சுகர் சீநா தீசுர
     ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
          சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா

பூங்கு ளத்திடை தாரா வோடன
     மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
          போன்ற விக்ரக சூரா ரீபகி ...... ரண்டரூபா

போந்த பத்தர்பொ லாநோய் போயிட
     வேண்ட நுக்ரக போதா மேவிய
          பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வீங்கு பச்சிள நீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர்
மார்பு ஊடே பொர வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ்
உண்டு தோயா
... பருமனான பச்சை இளநீர் போல உள்ள பெரிய
மார்பகங்களை சேர்ந்து அணைத்து எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படி
பொருந்த வைத்து, விரும்பத் தக்க சர்க்கரை, பால், தேன் இவைகளுக்கு
ஒப்பான வாயிதழை உண்டு தோய்ந்து,

வேண்டு(ம்) உரைத் துகில் வேறாய் மோகன வாஞ்சையில்
களை கூரா வாள் விழி மேம்படக் குழை மீதே மோதிட
...
விரும்பத் தக்க மோகப் பேச்சுக்களைப் பேசி, ஆடையும் வேறாக, காம
மயக்க ஆசையில் மகிழ்ச்சி அடைந்து, ஒளி பொருந்திய கண்கள் மேலிட்டு
காதில் உள்ள குண்டலங்கள் மீது மோதிட,

வண்டு இராசி ஓங்கு மைக் குழல் ச(சா)தா ஈறு என வீ(ழ்)ந்து
புள் குரல் கூவா வேள் கலை ஓர்ந்திடப் பல க்ரீடா பேத
முயங்கும் ஆகா
... வண்டின் கூட்டங்கள் மிக்குள்ள கரிய கூந்தல்
எப்போதும் சதமென (அதன்மேல்) விழுந்து, புட்குரல் ஒலியைக் கூவச்
செய்து, மன்மதனின் காம சாத்திர நூல்களை அறியும்படி பலவகையான
லீலைகளின் பேதங்களை முயற்சி செய்தல் ஆகுமோ? (கூடாது என்றபடி),

ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே
மாதவம் ஊன்றுதற்கு மெய்ஞ் ஞான ஆசாரம் வழங்குவாயே
...
ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுக துக்க நுகர்ச்சியும், மாயை சம்பந்தமாக
ஏற்படும் துன்பங்களும் ஒழிந்து உன் திருவடிக்கே எளிதான வகையில்
சிறந்த தவ நிலை ஊன்றிப் பொருந்துவதற்கு மெய்ஞ்ஞான ஆசார
ஒழுக்கத்தைத் தந்து அருள்வாயாக.

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு ருத்ர குமாரா
கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா
...
(ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற
குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக
இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே,
பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய
மயில் வாகனனே, உயர்ந்த வீரனே,

சாங்கிபற் சுகர் சீ நாத(ர்) ஈசுரர் இந்திரன் மெச்சிய வேலா
போதக சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா
... ஆத்ம
தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி,
லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர்
மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே,
அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே,

பூங்குளத்திடை தாராவோடு அ(ன்)னம் மேய்ந்த செய்ப்பதி
நாதா மா மலைபோன்ற விக்ரக சூரா அரி பகிரண்ட ரூபா
...
தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப்
பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற
உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி
அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே,

போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட அநுக்ரக
போதா மேவிய பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள்
தம்பிரானே.
... (உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின்
பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்த
அறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே,
தேவர்கள் தம்பிரானே.


* திருப்பூந்துருத்தி தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1163  pg 2.1164  pg 2.1165  pg 2.1166  pg 2.1167  pg 2.1168 
 WIKI_urai Song number: 892 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 888 - veengku pachchiLa (thiruppUndhuruththi)

veengu pacchiLa neerpOl mAmulai
     sErntha Naiththethir mArpU dEpora
          vENdu sarkkarai pAlthE nErithazh ...... uNduthOyA

vENdu raiththukil vERAy mOkana
     vAnjai yiRkaLai kUrA vALvizhi
          mEmpa dakkuzhai meethE mOthida ...... vaNdirAsi

Ongu maikkuzhal sAthA veeRena
     veenthu putkural kUvA vELkalai
          yOrnthi dappala kreedA pEthamu ...... yangumAkA

UNpu Narcchiyu mAyA vAthanai
     theernthu nakkeLi thAyE mAthava
          mUnRu thaRkumeynj njAnA sAramva ...... zhanguvAyE

thAngu niRcharar sEnA neetharu
     nAngu ruthraku mArA kOshaNa
          thANda vaRkaruL kEkee vAkana ...... thungaveerA

sAngi paRchukar seenA theesura
     rEnthran mecchiya vElA pOthaka
          sAntha viththaka SvAmee neepava ...... langanmArpA

pUngu Laththidai thArA vOdana
     mEyntha seyppathi nAthA mAmalai
          pOnRa vikraka cUrA reepaki ...... raNdarUpA

pOntha paththarpo lAnOy pOyida
     vENda nukraka pOthA mEviya
          pUnthu ruththiyil vAzhvE thEvarkaL ...... thambirAnE.

......... Meaning .........

veengu pacchiLa neer pOl mA mulai sErnthu aNaiththu ethir mArpu UdE pora vENdu sarkkarai pAl thEn nEr ithazh uNdu thOyA: Holding together their huge breasts that look like green coconuts in a tight embrace thrusting them on my chest, imbibing their delicious saliva that is sweet like sugar, milk and honey by sucking their lips,

vENdu(m) uraith thukil vERAy mOkana vAnjaiyil kaLai kUrA vAL vizhi mEmpadak kuzhai meethE mOthida: (making them) speak very enticing and provocative words, loosening their attire, being exhilarated in passion-filled desire, seeing their bright eyes rolled upwards and banging the swinging studs on their ears,

vaNdu irAsi Ongu maik kuzhal sa(a)thA eeRu ena vee(zh)nthu puL kural kUvA vEL kalai Ornthidap pala kreedA pEtha muyangum AkA: falling all over their dark hair swarmed by a host of beetles thinking that the hair is everlasting, raising the sounds of various birds' cooing and experimenting with the diverse aspects of eroticism as defined in the text authored by Manmathan (God of Love), should I be carrying on with these attempts? (obviously, the answer is in the negative).

UN puNarcchiyum mAyA vAthanai theernthu unakku eLithAyE mAthavam UnRuthaRku meynj njAna AsAram vazhanguvAyE: Removing all that experience of bliss and misery that is destined to be undergone by the soul, together with all the grief that arises from delusion, kindly grant me the discipline of righteous path towards true knowledge so that I could attain Your hallowed feet by the easiest method and lead a life of sustained and great penance, Oh Lord!

thAngu niRcharar sEnA neethar u(n)na Angu ruthra kumArA kOshaNa thANdavaRku aruL kEkee vAkana thunga veerA: Remaining the cause of deep contemplation by a whole group of debased SamaNA priests (who followed the doctrine of Jainic principles), You came to Madhurai (as ThirugnAna Sambandhar), Oh Son of Lord SivA! You graciously preached to Lord SivA who danced amidst tumultous noise, Oh Lord that mounts the peacock! Oh Great Warrior!

sAngipaR chukar see nAtha(r) eesurar inthiran mecchiya vElA pOthaka sAntha viththaka SvAmi neepa alangan mArpA: Those who have mastered the SAnkiya YogA that describes the tenet of the soul, the great Sage Sukabrahma, Lord VishNu the Spouse of Goddess Lakshmi, Lord SivA and Indra the Lord of the celestials have all assembled to laud You profusely, Oh Lord with the spear in Your hand! You are the great Master offering Your preaching! You are the embodiment of serenity! Oh Learned SwAmi! Your chest is adorned with kadappa garland!

pUnguLaththidai thArAvOdu a(n)nam mEyntha seyppathi nAthA mA malaipOnRa vikraka cUrA ari pakiraNda rUpA: In the lotus pond of this town, short ducks along with swans graze, and You are the Lord of VayalUr! You are the enemy of the demon SUran whose figure was huge like a big mountain! Your form is that of the outer milky way!

pOntha paththar po(l)lA nOy pOyida vENda anukraka pOthA mEviya pUnthuruththiyil vAzhvE thEvarkaL thambirAnE.: To those devotees who sought Your hallowed feet, You graciouly granted the boon of removing their evil disease of birth-cycle, Oh Wise One! You are the treasure of this apt place called ThiruppUnthuruththi* and are the Lord of the celestials, Oh Great One!


* ThiruppUnthuruththi is an Ashta veeratta sthalam - one of the eight great Saivite shrines - located near ThanjAvUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 888 veengku pachchiLa - thiruppUndhuruththi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]