பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பூத்துருத்தி திருப்புகழ் உரை 605 கடலிலே அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த (பரம வீடது) மேலான மோகூடி வீட்டைச் சேர்வதும் (அங்ங்ணம் சேரத்) தகுந்தவனாவதுமான ஒரு நாள் (எனக்குக்) கிடைக்குமா! கரிய நிறத்தினன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், (அரி) திருமால், பாம்பணையின் மேல் துயில் வளர் கரிய முகில், பொன்னிறத்தனாம் இரணியனுடைய மார்பைக் கிழித்த (வாளரி) - ஒளிவீசும் (அரி), (அல்லது ஆளரி) நரசிங்கம், பலமான மாயங்களில் வல்ல. வஞ்சகனாம் (ராவணனுடைய) பெரிய முடிகள் (ஆறும் நாலும்) பத்தும் ஒரே பாணத்தால் நிலத்தின்மீது விழும்படித் துள்ளாக்கிய கருணை நிறைந்த திருமால். (கவி) வாலி எனும் குரங்கைக் கோபித்து (அழித்த) கிருபைக்கு இடமானவன் (ஆன திருமாலின்) மருகனே! திரிபுர அசுரர்கள் து.ாளாமாறு (சாம்பலாமாறு), தேவர்கள் விளங்கும்பொருட்டு (முனியா) திரிபுராதியர்மேல் கோபித்துத் தேவர்களுக்கு) அருள் மிகப் பாலித்தவர், தேவிக்குத் தன் உடலிற் பாதி கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் - ஆன சிவபிரான் தந்த குழந்தையே! சிகரங்களை உடைய (கிரெளஞ்ச) மலையைத் துள்ளாக்கி அழித்த வேலனே! இருள் - அஞ்ஞானம் (என்பதைப் போக்கவல்ல) வீர சூரியனே! திருவையாற்றில் எழுந்தருளி. யிருக்கும் தேவனே! கிருபாகர மூர்த்தியே! பெருமாளே! (விடது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே) திருப்பூந்துருத்தி 892. பருமை கொண்டுள்ள பச்சை இளநீர் போல உள்ள பெரிய கொங்கைகளைச் சேர்ந்து அனைத்து எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படிப் பொருந்தவைத்து, விரும்பத்தக்க சர்க்கரை, பால், தேன் இவைகளுக்கு ஒப்பான வாயிதழ் (ஊறலை) உண்டு தோய்ந்து 書 ஒரே பாணம் - பாடல் 452, பக்கம் 6 - கி ழ்க்குறிப்பு.