திருப்புகழ் 863 இந்துகதிர்  (கும்பகோணம்)
Thiruppugazh 863 indhukadhir  (kumbakONam)
Thiruppugazh - 863 indhukadhir - kumbakONamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான

......... பாடல் .........

இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
     டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு

எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
     றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே

கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
     கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக்

கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
     கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே

திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
     டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை

சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
     செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா

குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
     கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே

கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இந்துகதிர்ச் சேர் ... சந்திர மண்டலத்தின்ஒளியைச் சென்று முட்டி

அருணப் பந்திநடுத் தூண் ஒளிபட்டு ... அங்கு சிவந்து திரண்ட
நடுத்தூண் போன்ற பாகத்தில் ஒளி பட்டு,

இன்பரசப் பால் அமுதச் சுவைமேவு ... இன்பச்சுவை தரும் பால்
போல் அமுதமான இனிமையை அனுபவித்து,

எண்குணமுற்றோன் நடனச் சந்த்ரவொளிப் பீடகம் உற்று ...
எண்குணங்கள்* கொண்ட இறைவன் நடனம் செய்யும் நிலவொளி
வீசும் இடத்தைத் தரிசித்து,

எந்தை நடித் தாடு மணிச் சபையூடே ... என் தந்தை நடராஜன்
கூத்தாடும் அழகிய சபையின்கண்,

கந்தம் எழுத்தோடு உறுசிற் கெந்தமணப் பூவிதழை ... பெருமை
மணம் கொண்ட ப்ரணவ எழுத்தோடு கூடிய ஞானம் என்ற இதழைக்
கொண்ட வாசம்மிக்க மலரை

கண்டுகளித்தே யமுதக் கடல்மூழ்கி ... அறிவால் அறிந்து ஆனந்தக்
கடலில் மூழ்கி,

கந்தமதித்து ஆயிரவெட்டு அண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக்
... கந்தனே, அந்த நறுமணத்தைப் போற்றிச் செய்து,
ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துள்ள பதினான்கு உலகப்
பகுதிகளையும்

காணஎனக்கருள்வாயே ... நான் காணும்படியாக எனக்கு நீ
அருள்புரிவாயாக.

திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என ...
(இந்த தாளத்துக்கு ஏற்ப)

காளமணித் தவிலோசை ... எக்காளமும், மணியும், தவிலும் ஓசையிட,

சிந்தைதிகைத்து ஏழுகடற் பொங்க ... அசுரர்களின் மனம்
திகைக்கும்படியாக ஏழு கடல்களும் பொங்க,

அரிச் சூர்மகுடச் செண்டுகுலைத்தாடு ... சிங்கம் போன்ற சூரனின்
மணிமுடியில் உள்ள பூச்செண்டைத் தள்ளி அழித்து விளையாடும்

மணிக் கதிர்வேலா ... அழகிய ஒளி வீசும் வேலாயுதனே,

குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களப ... மொய்க்கும்
வண்டுகள் விரும்பும் துளசிமாலையை அணிந்தவனும், சிவந்த
லக்ஷ்மியை மணந்தவனும், சந்தனக்கலவையைப் பூசுபவனும்,

கொண்டல்நிறத்தோன்மகளை ... மேகவண்ணனுமான திருமாலின்
மகளாகிய வள்ளியை

தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத்து ... இந்த உலகில்
கும்பிடும்பொருட்டு கைத்தாளம் போட்டுக்கொண்டு,

அம்பொனுருப் பாவைபுகழ் ... அழகிய லக்ஷ்மியின் வடிவம்கொண்ட
பாவை வள்ளியைப் புகழ்ந்து போற்றியவனே,

கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே. ... கும்பகோணத்தில்
வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.


* இறைவனின் எண் குணங்கள்:

1.  தன்வயத்தனாதல்,
2.  தூய உடம்பினன் ஆதல்,
3.  இயற்கை உணர்வினன் ஆதல்,
4.  முற்றும் உணர்தல்,
5.  இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,
6.  பேரருள் உடைமை,
7.  முடிவிலா ஆற்றல் உடைமை,
8.  வரம்பிலா இன்பம் உடைமை.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1099  pg 2.1100 
 WIKI_urai Song number: 867 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 863 - indhukadhir (kumbakONam)

inthukathirc cEraruNap panthinaduth thUNoLipat
     tinparasap pAlamuthac ...... cuvaimEvu

eNkuNamuR ROnadanac canthravoLip peedakamuR
     Renthainadith thAdumaNic ...... capaiyUdE

kanthamezhuth thOduRusiR kenthamaNap pUvithazhaik
     kaNdukaLith thEyamuthak ...... kadalmUzhkik

kanthamathith thAyiravet taNdamathaik kOlpuvanak
     kaNdamathaik kANaenak ...... karuLvAyE

thinthathimith theethakutat tuNdumitat tAdududit
     tinthamenak kALamaNith ...... thavilOsai

sinthaithikaith thEzhukadaR pongavaric chUrmakudac
     ceNdukulaith thAdumaNik ...... kathirvElA

kunthiyarith thAzhthuLapac centhiruvaic cErkaLapak
     koNdalniRath thOnmakaLaith ...... tharaimeethE

kumpidakaith thALameduth thamponurup pAvaipukazhk
     kumpakoNath thARumukap ...... perumALE.

......... Meaning .........

inthukathirc cEr: Hitting the light emanating from the galaxy of the Moon,

aruNap panthinaduth thUNoLipattu: impinging on the central pillar-like beam of reddish effugence over there,

inparasap pAlamuthac cuvaimEvu: imbibing the nectar-like sweetness in that luscious milky way,

eNkuNamuR ROnadanac canthravoLip peedakamuRRu: attaining the moonlit place where the Lord, with eight attributes*, dances,

enthainadith thAdumaNic capaiyUdE: standing at the divine stage where our Father NadarAjan dances,

kanthamezhuth thOduRusiR kenthamaNap pUvithazhai kaNdukaLith thEyamuthak kadalmUzhki: I want to discern, with pleasure, the fragrance of the flower having petals of Wisdom and aroma of the illustrious letter OM (PraNava) and later immerse myself in the sea of eternal bliss.

kanthamathith thAyiravet taNdamathaik kOlpuvanak kaNdamathaik kANaenak karuLvAyE: Oh KandhA, after I have experienced and praised that fragrance, kindly bless me with the vision of the fourteen worlds, engulfing a thousand and eight regions of this universe!

'thinthathimith theethakutat tuNdumitat tAdududit tintham' ena: (To this meter)

kALamaNiththavilOsai: the ekkALam (a kind of drum), bells and thavils (percussion instruments) were beating;

sinthaithikaith thEzhukadaR ponga: to the dismay and perplexion of the demons, the seven seas rose turbulently;

aric chUrmakudac ceNdukulaiththu: the flowers on the crown of the lion-like SUran were knocked down and crushed;

AdumaNik kathirvElA: when the sparkling spear of Yours danced about!

kunthiyarith thAzhthuLapac centhiruvaic cErkaLapak koNdalniRath thOn: He wears the thuLasi garlands which are thronged by beetles indulging in them; He is the consort of reddish Lakshmi; He adorns His chest with sandal paste; He has the complexion of the dark cloud; and He is Vishnu.

makaLaith tharaimeethE kumpidakaith thALameduththu: On this earth, to worship VaLLi, the daughter of that Vishnu, You kept beating with Your palms

amponurup pAvaipukazh: in praise of the beautiful belle who looks like Lakshmi!

kumpakoNath thARumukap perumALE.: You are the six-faced Lord residing in KumbakONam, Oh Great One!


* The eight characteristics of God are as follows:

     1. Peerless -Superiorless- Self-absorbing
     2. Always in Chaste form
     3. Natural-Sensed
     4. Omniscient
     5. By nature, bondless
     6. Height of Grace
     7. Omnipotent
     8. Limitlessly Blissful.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 863 indhukadhir - kumbakONam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]