திருப்புகழ் 839 சூழும்வினை  (வேதாரணியம்)
Thiruppugazh 839 sUzhumvinai  (vEdhAraNiyam)
Thiruppugazh - 839 sUzhumvinai - vEdhAraNiyamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ்

சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே

ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ

ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே

ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே

ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே

வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே

வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சூழும்வினைக் கட்டுன்ப ... என்னைச் சூழ்ந்த தீவினையின்
காரணமாக ஏற்படும்

நெடும்பிணி கழிகாமஞ் சோரம் இதற்கு ... நீண்ட நோய், மிகுந்த
காமம், களவு ஆகியவற்றையே

சிந்தை நினைந்து உறுதுணை யாதே ... மனத்தில் நினைவு
கொண்டிருந்தால், எனக்கு வேறு உற்ற துணை யாது?

ஏழையென் இத்துக்கங்களுடன் ... ஏழையேன் ஆகிய யான்
இத்தனை துக்கங்களுடன்

தினம் உழல்வேனோ ... நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ?

ஏதம் அகற்றிச் செம்பத ... இந்தக் குற்றத்தினை நீக்கி உன்
செம்மையான பாதங்களை

சிந்தனை தருவாயே ... சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக.

ஆழியடைத்து ... சமுத்திரத்தை அணைகட்டி அடைத்து

இலங்கையை யெழுநாளே ஆண்மைசெலுத்தி தன்கைக்
கொண்ட
... ஏழு நாளிலே இலங்கையின் மீது தனது ஆண்மையைச்
செலுத்தி போரிட்டு தன் கையில் வசமாக்கிய

கரும்புயல் மருகோனே ... கரிய மேக வண்ணத்து அண்ணல்
இராமனின் மருமகனே,

வேழமுகற்கு தம்பியெனுந் திரு முருகோனே ... யானைமுகத்துக்
கணபதியின் தம்பி எனப்படும் திருமுருகனே,

வேதவனத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே. ...
வேதாரணியத்தில்* அமர்ந்த சிவபிரான் தந்தருளிய பெருமாளே.


* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி சந்திப்பிலிருந்து 20 மைல்
தூரத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1029  pg 2.1030 
 WIKI_urai Song number: 843 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 839 - sUzhumvinai (vEdhAraNiyam)

sUzhum vinaigaL thunba nedumpiNi ...... kazhikAman

sOram idhaRku chinthai ninaindhuRu ...... thuNaiyAdhE

Ezhai enith dhukkangaL udan dhinam ...... uzhalvEnO

Edham agatri sempadha chinthanai ...... tharuvAyE

Azhi adaithuth thangai ilankaiyai ...... ezhunALE

ANmai seluththik koNda karumpuyal ...... marugOnE

vEzha mukaRkuth thambiyenun thiru ...... murugOnE

vEdha vanaththil sankarar thandharuL ...... perumALE.

......... Meaning .........

sUzhum vinaigaL thunba: The miseries that arise out of my bad deeds are

nedumpiNi kazhikAman sOram: chronic diseases, excessive lust and stealth;

idhaRku chinthai ninaindhu: and if my mind is always filled by these thoughts,

uRu thuNaiyAdhE: what could be the remedy for me?

Ezhai enith dhukkangaL udan dhinam uzhalvEnO: Is this poor soul doomed to suffer daily with such grief?

Edham agatri sempadha chinthanai tharuvAyE: You must remove my shortcomings and make my mind concentrate only on Your rosy feet.

Azhi adaithuth thangai ilankaiyai ezhunALE ANmai seluththik koNda: He built a bridge across the sea and conquered LankA in seven days through the power of His valour;

karumpuyal marugOnE: He has the complexion of the dark clouds; and You are that Rama's nephew!

vEzha mukaRkuth thambiyenun thiru murugOnE: Oh MurugA, You are the younger brother of the elephant-faced VinAyagA.

vEdha vanaththil sankarar thandharuL perumALE.: You are the son of Sankara, who presides at VEdhAraNiyam, Oh Great One!


* VEdhAraNiyam is 20 miles away from ThiruththuRaipUNdi Railway Junction.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 839 sUzhumvinai - vEdhAraNiyam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]