திருப்புகழ் 774 தினமணி சார்ங்க  (சீகாழி)
Thiruppugazh 774 dhinamaNisArngka  (seegAzhi)
Thiruppugazh - 774 dhinamaNisArngka - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தாந்த தான தனதன தாந்த தான
     தனதன தாந்த தான ...... தனதான

......... பாடல் .........

தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
     தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்

செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
     வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்

இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
     புழுககில் சாந்து பூசி ...... யரசாகி

இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
     மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ

வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
     மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
     கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்

கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
     கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தினமணி சார்ங்க பாணி யென ... சூரியன், சாரங்கம் என்ற வில்லைக்
கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன்,

மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ... மதில்
நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில்

ஆரஞ் செழுமணி சேர்ந்த பீடிகையில் ... முத்தாலும் அழகிய
ரத்தினத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில்

இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட ... (அமர்ந்து) கீதம்
நிரம்பிய பாடல்களைப் புகழ்ந்து பாடும் பாணர்கள் ஒன்றுகூடிப் பாடவும்,

இருபாலும் இனவளை பூண்கையார்க வரியிட ... இரண்டு
பக்கங்களிலும் ஒரே மாதிரியான வளையல்களைப் பூண்ட கையை உடைய
மாதர்கள் நின்று கவரி வீசவும்,

வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி ... மாலைகளைச் சூடி,
புனுகு, அகில், சந்தனம் இவற்றைப் பூசிக்கொண்டு,

அரசாகி ... அரச பதவியில் இருந்து,

இனிதிறுமாந்து வாழும் ... இன்பமயமாக இறுமாப்புடனே வாழ்கின்ற,

இருவினை நீண்ட காயம் ... நல்வினை, தீவினை இரண்டிற்கும்
கட்டுப்பட்ட இந்த சரீரம்

ஒருபிடி சாம்ப லாகி விடலாமோ ... கடைசியில் ஒருபிடி சாம்பலாக
மாறி அழிந்து போகலாமா?

வனசரர் ஏங்க வான முகடுற வோங்கி ... காட்டில் திரியும்
வேடர்கள் அதிசயிக்க வானத்தின் உச்சியைத் தொடும்படியாக வளர்ந்து,

ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக ... ஆசையாக
அவ்வேடர்கள் வளர்த்த மயிலாகிய வள்ளியும் தோழிமார்களும் அருகே
இருக்க

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி ... மயில்களும்
மான்களும் சூழ, செழித்து வளர்ந்த வேங்கைமரமாகி

மலைமிசை தோன்று மாய வடிவோனே ... வள்ளிமலை மேலே
தோன்றிய மாய வடிவத்தோனே,

கனசமண் மூங்கர் கோடி ... பெருத்த சமண ஊமையர்கள் பலரும்

கழுமிசை தூங்க ... (வாதிலே உன்னிடம் தோற்று) கழுமுனையில்
தொங்க,

நீறு கருணைகொள் பாண்டி நாடு பெற ... திருநீறு உன்
கருணைக்குப் பாத்திரமான பாண்டியநாட்டில் பரவ,

வேதக் கவிதரு காந்த ... வேதப்பொருள் கொண்ட தேவாரப்
பாடல்களைத் தந்தருளிய ஒளிகொள் மேனியனே,

பால கழுமல பூந்த ராய ... பாலகன் ஞானசம்பந்தனாக வந்த முருகா,
கழுமலம், பூந்தராய் என்ற பெயர்கொண்ட சீகாழிப்பதியில்*
வீற்றிருப்போனே,

கவுணியர் வேந்த தேவர்பெருமாளே. ... கவுணியர் குலத்தில் வந்த
அரசனே, தேவர் பெருமாளே.


* சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.869  pg 2.870  pg 2.871  pg 2.872 
 WIKI_urai Song number: 778 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 774 - dhinamaNi sArngka (seegAzhi)

dhinamaNi sArngapANi ena madhiL neendu sAla
     dhinakaran Eyndha mALi ...... gaiyil Aram

sezhumaNi sErndha peedigaiyil isai vAyndha pAdal
     vayiriyar sErndhu pAda ...... iru pAlum

inavaLai pUNkai yAr kavariyida vEyndhu mAlai
     puzhugagil sAndhu pUsi ...... arasAgi

inidhiRu mAndhu vAzhum iruvinai neenda kAyam
     orupidi sAmbalAgi ...... vidalAmO

vanachara rEnga vAna mugaduRa Ongi Asai
     mayilodu pAngi mArgaL ...... arugAga

mayilodu mAngaL sUzha vaLavari vEngai Agi
     malai misai thOndru mAya ...... vadivOnE

ganasamaN mUngar kOdi kazhumisai thUnga neeRu
     karuNaikoL pAndi nAdu ...... peRavEdha

kavi tharu kAntha bAla kazhumala pUndha rAya
     kavuNiyar vEndha dhEvar ...... perumALE.

......... Meaning .........

dhinamaNi sArngapANi ena: People say that his brightness was comparable to that of the Sun and Vishnu holding the bow, SArangam.

madhiL neendu sAladhinakaran Eyndha mALigaiyil: He lived in a very sunny palace around which stood a lengthy fortress wall.

Aram sezhumaNi sErndha peedigaiyil: He reclined on a seat adorned with pearls and precious gems.

isai vAyndha pAdal vayiriyar sErndhu pAda: The courtesan singers sang in unison praising him.

iru pAlum inavaLai pUNkaiyAr kavariyida: On both sides, damsels, wearing similar pairs of bangles, stood ministering to him with fans, gently.

vEyndhu mAlai puzhugagil sAndhu pUsi arasAgi: He was wearing garlands on his chest smeared with fragrant punugu, sandal paste and incense. He was leading a Royal life!

inidhiRu mAndhu vAzhum: He was happy and extremely proud!

iruvinai neenda kAyam: But, his body was bound by the karma of both good and bad deeds.

orupidi sAmbalAgi vidalAmO: Ultimately, his body was destroyed into a handful of ash. What an end?

vanacharar Enga vAna mugaduRa Ongi: As the hunters stood awestruck, You grew up hitting the roof of the sky;

Asai mayilodu pAngimArgaL arugAga: their darling daughter, VaLLi, like a peahen, and her girlfriends danced;

mayilodu mAngaL sUzha vaLavari vEngai Agi: in the forest, among the peacocks and deer, You stood as a tall and robust neem tree at

malai misai thOndru mAya vadivOnE: VaLLimalai. You took the magic form of neem tree (for VaLLi)!

ganasamaN mUngar kOdi kazhumisai thUnga: Thousands of dumbfounded samaNa priests defeated by You in argument, were led to hang in the gallows,

neeRu karuNaikoL pAndi nAdu peRa: while the holy ash was distributed by You throughout the Kingdom of PANdiyan, the recipient of Your compassion;

vEdhakavi tharu kAntha: and You, our beloved, gave to the world the Scripture in Poems (ThEvAram)!

bAla kazhumala pUndha rAya: Oh Young Lord! You came as ThirugnAna SambandhAr to SeegAzhi*, also known as Kazhumalam and PUndharAy.

kavuNiyar vEndha dhEvar perumALE.: You are the King of KavuNiyas, Oh Lord, of the Celestials!


* The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


SeegAzhi is 11 miles south of Chidhambaram. It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 774 dhinamaNi sArngka - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]