திருப்புகழ் 740 அரியயன் அறியாதவர்  (வடுகூர்)
Thiruppugazh 740 ariyayanaRiyAdhavar  (vadugUr)
Thiruppugazh - 740 ariyayanaRiyAdhavar - vadugUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான

......... பாடல் .........

அரியய னறியா தவரெரி புரமூ
     ணதுபுக நகையே ...... வியநாதர்

அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
     றழலையு மழுநேர் ...... பிடிநாதர்

வரைமக ளொருகூ றுடையவர் மதனா
     கமும்விழ விழியே ...... வியநாதர்

மனமகிழ் குமரா எனவுன திருதாள்
     மலரடி தொழுமா ...... றருள்வாயே

அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
     அவனியை வலமாய் ...... வருவோனே

அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
     அயில்தனை விசையாய் ...... விடுவோனே

வரிசையொ டொருமா தினைதரு வனமே
     மருவியொர் குறமா ...... தணைவேடா

மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
     வருதவ முநிவோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அரியயன் அறியாதவர் ... திருமாலும் பிரமனும் அடி முடி
காணமுடியாதவர்,

எரி புரமூணதுபுக நகை ஏவியநாதர் ... நெருப்பு திரிபுரத்திலும்
புகுமாறு சிரித்தே எரித்த தலைவர்,

அவிர்சடை மிசையோர் வனிதையர் பதி ... விளங்கும் சடை மீது
கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும்
இருப்பவர்,

சீறழலையும் மழுநேர்பிடிநாதர் ... சீறிவந்த நெருப்பையும் மழு
ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர்,

வரைமக ளொருகூ றுடையவர் ... மலைமகளாம் பார்வதியை ஒரு
பாகத்தில் உடையவர்,

மதனாகமும்விழ விழியேவியநாதர் ... மன்மதனின் உடல் சாம்பலாக
விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர்,

மனமகிழ் குமரா ... (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே,

என உனது இருதாள் மலரடி ... என்று கூறி உன் இரண்டு தாளாகிய
மலர்ப் பாதங்களை

தொழுமாறு அருள்வாயே ... வணங்கும்படி அருள் தருவாயாக.

அருவரை யிருகூ றிட ... அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச்
செய்து,

ஒருமயில்மேல் அவனியை வலமாய் வருவோனே ... ஒப்பற்ற
மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே,

அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் ... தேவர்களின் பகைவராம் பெரும்
அசுரர்களின்

சிரமேல் அயில்தனை விசையாய் விடுவோனே ... தலைகள் மீது
வேலை வேகமாய் எறிந்தவனே,

வரிசையொடு ஒருமா தினைதரு வனமே மருவி ... வரிசையாக
ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று,

யொர் குறமாது அணைவேடா ... ஓர் குறப்பெண் வள்ளியை
அணைந்த வேடனே,

மலைகளில் மகிழ்வாய் ... குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே,

மருவிநல் வடுகூர் வருதவ முநிவோர் பெருமாளே. ... மனம்
பொருந்தி நல்ல வடுகூர்* என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின்
பெருமாளே.


* வடுகூர் பாண்டிச்சேரிக்கு 12 மைல் மேற்கே உள்ளது. அதற்கு ஆண்டார் கோயில்
என்ற பெயரும் உண்டு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.781  pg 2.782 
 WIKI_urai Song number: 745 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 740 - ariyayan aRiyAdhavar (vadugUr)

ariyayan aRiyA dhavar eripuramUN
     adhupuga nagai yEviya ...... nAthar

avirsadai misaiyOr vanithaiyar pathi seeR
     azhalaiyu mazhu nEr ...... pidinAthar

varai magaLoru kUR udaiyavar madhanA
     gamum vizha vizhi ...... yEviya nAthar

manamagizh kumarA enavuna dhiru thAL
     malaradi thozhumAR ...... aruLvAyE

aruvarai irukURida oru mayilmEl
     avaniyai valamAy ...... varuvOnE

amarargaL igalneed asurargaL siramEl
     ayil thanai visaiyAy ...... viduvOnE

varisaiyod orumA thinai tharu vanamE
     maruviyor kuRa mA ...... dhaNai vEdA

malaigaLil magizhvAy maruvinal vadukUr
     varuthava munivOr ...... perumALE.

......... Meaning .........

ariyayan ariyA dhavar: One who could not be perceived even by Vishnu and BrahmA;

eripuramUN adhupuga nagai yEviya nAthar: One who burnt down Thiripuram by a mere smile;

avirsadai misaiyOr vanithaiyar pathi: One who carries on His tresses River Ganga and is also her Master;

seeR azhalaiyu mazhu nEr pidinAthar: One who holds in His hands, the ravaging fire and a pick-axe;

varai magaLoru kUR udaiyavar: One who shares His body with PArvathi, the daughter of HimavAn (Mount);

madhanA gamum vizha vizhi yEviya nAthar: and One who, with his fiery eye on the forehead, rendered the body of Manmathan (Love God) into ashes;

manamagizh kumarA: That One, Lord Sivan, is so pleased with You, His son, Oh KumarA!

enavuna dhiru thAL malaradi thozhumAR aruLvAyE: If I pray as above, You have to show me the way to worship Your lotus feet.

aruvarai irukURida: The rare mountain (Krounchamalai) was split into two pieces by You.

oru mayilmEl avaniyai valamAy varuvOnE: You go around the world on Your unique Peacock.

amarargaL igalneed asurargaL siramEl: On the heads of the asuras who are opposed to DEvAs,

ayil thanai visaiyAy viduvOnE: You throw Your spear extremely fast!

varisaiyod orumA thinai tharu vanamE: To the forest where there are rows of robust millet fields,

maruviyor kuRa mA dhaNai vEdA: You went in the disguise of a hunter to woo and hug VaLLi, the damsel of the KuRavAs.

malaigaLil magizhvAy: You revel in the mountains!

maruvinal vadukUr varuthava munivOr perumALE.: For those sages who come with devotion to this place VadukUr, You are very dear, Oh Great One!


* VadukUr is about 12 miles West of Pondicherry; it is also called AandArkOyil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 740 ariyayan aRiyAdhavar - vadugUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]