பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை (இஃது ஆண்டார் கோயில் என வழங்குகின்றது. புதுச் சேரிக்கு மேற்கு 10மைலிலுள்ள சின்னபாபு சமுத்திரம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு 2-மைல், திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 745. திருவடியைத் தொழ தனதன தணனா தனதன தனனா தனதன தனனா தனதான அரியய னறியா தவரெரி புர*மூ னது புக நகையே வியநாதர். அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிiசி றழலையு மழுநேர் பிடிநாதர்

  1. வரைமக ளொருகூ றுடையவர் Xமதனா

கமும்விழ விழியே வியநாதர் மனமகிழ் குமரா எனவுன திருதாள் மலரடி தொழுமா றருள்வாயே! அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல் oஅவனியை வலமாய் வருவோனே. அமரர்க ளிகல் நீ டசுரர்கள் சிரமேல் அயில்தனை விசையாய் விடுவோனே. வரிசையொ டொருமா தினைதரு வனமே மருவியொர் குறமா தனைவேடா, மலைகளில் மகிழ்வாய் மருவி.நல் வடுகூர் வருதவ முநிவோர் பெருமாளே.(1)

  • மூணு மூன்று என்பதன் மரூஉ: 1 அழல் - மழு ஏந்துவது - பாடல் 286-பக்கம் 210 கீழ்க்குறிப்பு
  1. பார்வதி ஒரு கூறு: பாடல் 301 பக்கம் 246 கீழ்க்குறிப்பு.

X மன்மதனை எரித்தது - பாடல் 288-பக்கம் 216 கீழ்க்குறிப்பு. O உலகை மயில்மேல் வலம் வந்தது; பாடல் 267 பக்கம் 164 கீழ்க்குறிப்பு + பார்க்க